Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நம்முடைய அடையாளங்கள்


நம்முடைய அடையாளங்கள்

1.நம்முடைய பிதா   விண்ணுலகபிதா.

2. நம்முடைய இரட்சகர்  விண்ணுலக மத்தியஸ்தர்

3.நம்முடைய குடியிருப்பு(வீடு)  பரலோக குடியிருப்பு. பிலிப் 3:20
4 .நம்முடைய குடியுரிமை விண்ணக குடியுரிமை.
நாம் வாழும் இந்த உலகம் ஒரு கூடாரம் போன்றது.
2 கொரி 5:1

5.எனவே  நம்முடைய பொக்கிஷங்கள்  பரலோகத்தில் தான்  இருக்கவேண்டும். மத்தேயு  6:19

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.1 தீமோ 6:6-8

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.1 கொரி 15:19.
இந்த வார்த்தைகள் எந்த அளவுக்கு நம் இருதயத்தில் பதித்து கிரியை செய்கிறதோ அந்த அளவுக்கு நாம் செழிப்பின் உபதேசத்தில் இருந்து தப்பித்துக் கொள்வோம்.
அதற்காக நாம் எப்பொழுதும் வறுமையில் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறவர் அல்ல.
ஆனால் நாம் வசனத்தை தேடுவதை விட்டுவிட்டு, ஆத்துமாக்களை தேடுவதை விட்டுவிட்டு, ஆன்மீக காரியங்களை நாடுவதை தவிர்த்து, ஆசீர்வதிக்கும் தேவனை விட அவரின் உலக ஆசீர்வாதங்களை முக்கிய படுத்துவது  ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு முதல் படியாகும்.

நம்முடைய ஆவிக்குரிய அடையாளங்கள்  முகவரியை இவற்றை ஒருபோதும் இழக்கக்கூடாது.