கோராகுவை தண்டித்து பிள்ளைகளை தப்புவித்த தேவன்
கோராகுவை தண்டித்து பிள்ளைகளை தப்புவித்த தேவன்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின அந்த காலகட்டத்தில் அவன் சந்தித்த மிகப்பெரிய சோதனைகளில் கோராகும் அவனை சேர்ந்தவர்களும் தனக்கு எதிராகநடத்தின கலகம் தான் .
லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனானையும் இணைத்து மோசேயின் தலைமைக்கு எதிராக நேரடியாக கலகம் செய்தார்கள்
எண்ணாகமம் 16:1
விளைவு
கோராகுவுடன் தாத்தான்அபிராமின் குடும்பத்தாரும் பூமி தன் வாயை திறந்ததில் இவர்கள் அதில் விழுங்கப்பட்டு மரித்து போனார்கள்.
கோராகுவுக்கு ஆதரவாக இருந்த 250 நபர்களை நெருப்பு எரித்து போட்டது.
இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் இந்த கலவரத்திற்கு காரணமான கோராகுவின் மகன்கள் இதில் மாட்டிக் கொள்ளவில்லை.
இந்த தண்டனையில் அவர்கள் தப்பித்து விட்டார்கள்.
எண்ணா 26:10,11.
இதைவிட ஆச்சரியமான காரியம் என்றால் இந்த கோராகு வம்சத்தில் இருந்து வந்தவன்தான் மோசேக்கு பின்னால் எழும்பிய மிகப்பெரிய தீர்க்கதரிசி சாமுவேல்.
1நாளா6:22,23
காரணம் இதுவாக இருக்கலாம்.
தகப்பனுடைய மோசேக்கு விரோதமான கலகத்தில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாமல், அதில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
எனவே தேவன் அவர்களை தப்புவித்திருக்கலாம்.
அந்தக் கலவரத்தில் இவர்களுக்கு சம்பந்தம் இருந்திருக்கும் என்றால் இவர்களும் அழிந்திருப்பார்கள்.
Itஆனால் அப்படி நடக்கவில்லை .
தகப்பனாக இருந்தாலும் குடும்பமே இணைந்து தேவனுக்கு விரோதமான காரியங்களில் செயல்பட்டாலும் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் இருக்கிற மக்களை தேவன்
ஆசீர்வதிப்பார்.
அந்த சந்ததியை தேவன் கனம் பண்ணுவார் என்பது இந்த நிகழ்வின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
என்னதான் குடும்பமே ஆதரித்தாலும், நாம் நேசிக்கும் தலைவர்கள் அநீதிக்கு ஆதரவாக இருந்தாலும்
எப்பொழுதுமே நீதி நியாயம் சத்தியம் உண்மை இவர்களின்பால் நிற்கிற சிறு கூட்டம் என்றைக்கும் தேவனால் கனத்தையும் மகிமையும் பெறுவார்கள் என்பது நிச்சயம்.