Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இரத்தமும் பாவநிவிர்த்தியும். Atonement and blood.


இரத்தமும் பாவநிவிர்த்தியும்.
Atonement and blood.

வேதத்தில் 460 தடவை "இரத்தம்" என்கிற வார்த்தை காணப்படுகிறது.

பழைய ஏற்பாட்டில் மட்டும் 362 இடங்களில் வருகிறது.
பாவநிவிர்த்திக்கு(Atonement )அடிப்படையாக  இருப்பது இரத்தமே.

இரத்தம் சிந்தப்படாமல் பாவமன்னிப்பு கிடையாது.

இரத்தத்தினுடைய சிறப்பை நீர்த்துப் போகப்பண்ணுகிற எந்த இறையியலும் வேதத்தின் படி சரியானது அல்ல.
அதற்கு ஆதாரமான வசனம் இதுவே.

"மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
லேவியராகமம் 17:11

எனவே தான் 40 வருட வனாந்திர வாழ்க்கையில்  மிருகங்கள் உணவிற்காக எல்லா இடங்களிலும் கொலை செய்யப்படக்கூடாது,
உணவிற்காக கொலை செய்யப்பட வேண்டிய மிருகங்கள் முதலில் ஆசரிப்பு கூடாரத்திற்கு கொண்டுவரப்பட்டு அவைகள் சமாதானபலியாக கர்த்தருடைய சன்னிதானத்தில் கொல்லப்பட வேண்டும் என்று தேவன் கட்டளை இட்டார்.

ஆனால் இந்த கட்டளைகள் அவர்கள் கானானுக்கு சென்ற பிறகு மாற்றப்பட்டுவிட்டது .
உபா 12:15. அந்த அளவிற்கு பலியோடு இரத்தம் சம்பந்தப்பட்டுள்ளது.

எப்படி ரத்தம் இல்லாமல் உயிர் இல்லையோ, அதுபோல இரத்தம் இல்லாமல் பாவ நிவிர்த்தி கிடையாது.

பாவ நிவிர்த்திக்கு இரத்தமே அடிப்படை. பழைய ஏற்பாட்டில் மிருகங்களின் இரத்தத்தினால் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்கள் மூடப்பட்டது.
புதிய உடன்படிக்கையில் மீட்பின் திட்டத்திற்கு அடிப்படையாக இருப்பது மனிதகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்காக சிந்திய இரத்தமே .

அவருடைய இரத்தத்தினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறோம்.ரோம 5:9

அவருடைய இரத்தத்தினால் நமக்கு மீட்பு உண்டு .எபேசி1:7

அவருடைய ரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டு வருகிறோம். எபிரே13:12

அவர் இரத்தத்தினால் பாவங்கள் கழுவப்படுகிறது.வெளி1:6

அவருடைய இரத்தம் தெளிக்கப்பட்ட பிள்ளைகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறோம். 1பேது 1:2
இதுவே நமக்கு அடையாளமாக இருக்கிறது.

அன்றைக்கு எகிப்திலே இஸ்ரவேலை பாதுகாத்தது ஆட்டுக்குட்டியின் இரத்தம். இன்றைக்கும் நம்மை அனுதினமும் பாதுகாப்பது அதைவிட மேன்மையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம்.

குமாரனுடைய இரத்தத்தினால் பிதாவுக்கு சமீபமாய் இருக்கிறோம். எபே 2:13
நாம் இணைந்து இருக்கின்ற திருச்சபை தேவனுடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்த சபை. அப்20:28.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அவருடைய இரத்தத்தினால் நாம் பெற முடியாத ஆவிக்குரிய ஆசீர்வாதங்களே  இல்லை.
நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இயேசு கிறிஸ்துவின்  குருதியை‌ (இரத்தம்) பற்றிய சரியான வெளிப்படுத்தல் நமக்கு தேவை.