"கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்". என்பதின் உண்மையான அர்த்தம்
"கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். "
எபி 9:28
இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன?
அப்படி என்றால் முதல் தடவை பாவத்தோடு தோன்றினாரா என்ற கேள்வி எழக்கூடும்.
இந்த வார்த்தையை தவறாக, பவர் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார்.
இது பலவிதமான தவறான வியாக்கியானங்களுக்கு வழிவகுத்துவிட்டது.
சரியான மொழிப்பெயர்ப்பு இதுதான்.
"அதைப்போலவே கிறிஸ்துவும் எல்லாருடைய பாவங்களையும் சுமந்து போக்கும்படி ஒரே முறை பலியாக படைக்கப்பட்டார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டன்று. தமக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மீட்பை அருளும் பொருட்டே தோன்றுவார்.
இது ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பு.
"கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்" என்பது தவறான மொழிபெயர்ப்பு.
முதல் தடவை அவர் தேவனுடைய குமாரனாக அவதரித்த போது பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக வெளிப்பட்டார்.
அதாவது நம்மை பாவத்தினின்று மீட்க உலகத்தின் பாவத்தை தன் மேல் சுமந்து தீர்த்தவராக வெளிப்பட்டார்.
ஆனால் இரண்டாம் தரம் வெளிப்படும்போது அவர்
தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி , அவர்களை மீட்க, பாவத்தை சுமந்து தீர்க்க அவசியம் இல்லாதவராக வெளிப்படுவார்.
இதுதான் அவர் பாவம் இல்லாதவராக இரண்டாம் தரம் வெளிப்படுவார் என்பதன் அர்த்தம்.
முதல் தடவை நம்முடைய பாவத்தைப் போக்குவதற்காக , சுமப்பதற்காக அவர் வெளிப்பட்டார்.
இரண்டாம் முறை அவர் நமக்கு
இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார்.
JESUS CHRIST WILL ‘’appear not for expiation but for salvation’’. JOHN BROWN