Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

மோசேக்கு ஏன் அவ்வளவு பெரிய தண்டனை?

மோசேக்கு ஏன் அவ்வளவு பெரிய தண்டனை?
மோசே இஸ்ரவேல் ஜனங்களை 40 வருடங்களாக வழி நடத்தி இறுதியில் கானானுக்கு செல்ல வேண்டிய இறுதி கட்டத்தில் அவன் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியவில்லை.
தன்னுடைய கோலை வைத்து கன்மலையோடு பேச வேண்டிய மோசே தன் ஜனங்களுடைய கலகக் குரலினால் அதுவரை பொறுமை காத்த மோசே இறுதியில் பொறுமை இழந்து கன்மலையை இரண்டு தடவை அடித்தான்.
முதல் தடவை கன்மலையை தேவன்அடிக்கச் சொன்னார்.
இரண்டாம் தடவை கன்மலையோடு பேச சொன்னார் ஆண்டவர்.
பேசுவதற்கு பதிலாக முன்பு செய்ததைப் போல கன்மலையை அடித்தான்.
ஒரு தடவை அல்ல இரண்டு தடவை.
ஆனாலும் கர்த்தர் மோசேயினுடைய தவறை, குற்றத்தை பார்க்காமல் தண்ணீரை வரவழைத்தார்.
ஆனால் மோசேயின் வாழ்நாள் விருப்பமாகிய கானானுக்கு அவனால் செல்ல முடியவில்லை.
அவன் தன்னுடைய விருப்பத்தை தேவனிடம் தெரிவித்த போதும் இதைக் குறித்து பேச வேண்டாம் என்று என்று சொல்லி அவன் விருப்பத்தை நிராகரித்துவிட்டார். உபா 3:23-29,32:50,51
நம்முடைய பார்வையில் மோசேயின் தோல்விக்கு காரணம் சிறிய பலவீனமாக காணப்படலாம்.
ஆனால் தேவனுடைய பார்வையில் அது மிகப் பெரிய காரியமாக காணப்பட்டது.
பவுல் கன்மலையை இயேசுவுக்கு அடையாளமாக சுட்டிக் காட்டுகிறார். 1 கொரி 10:4
கன்மலையை அடிப்பது என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக பாடுபட்டு அடிக்கப்படுகிற அனுபவத்திற்கு அடையாளம்..
இரண்டாவது தடவை கனிமலையை நோக்கி நோக்கி பேசச் சொல்வது என்பது நமக்கு தேவன் நமக்கு அருளும் பரிசுத்த ஆவியை குறிப்பதாகும்.யோவா7:37-39
இயேசு கிறிஸ்து ஒரு தடவைதான் நம்முடைய இரட்சிப்புக்காக அடிக்கப்பட வேண்டும்.எபி 9:26-28.
இரண்டாம் தடவை கன்மலையோடு பேசுகிற அனுபவம் என்பது பரிசுத்த ஆவியை நாம் பெற்றுக் கொள்கிற நிகழ்வுக்கு சமம்
இதுதான் தேவன் வைத்த திட்டம்.
அதற்கு நிழலாகத்தான் பவுல் இயேசுவை கன்மலையோடு ஒப்பிடுகிறார்.1கொரி 10:4.
மோசே கன்மலையை இரண்டு தரம் அடித்ததன் மூலம் ஜீவத்தண்ணீரை தருகின்ற ஞானக்கன்மலையான , மேசியா தவறாக சித்தரிக்கப்படுகிறார்.என்று W.W .WIERSBE கூறுகிறார்
He ruined a type of the Messiah who gives living water to His people.W.W .WIERSBE
To smite the rock twice means crucifying Christ afresh. Finis Jennings Dake
Dake ன் பார்வையில் இது கிறிஸ்துவை மறுதலிப்பதற்கு சமம் என்று கூறுகிறார். எபி6:4-9,10:26-29
எப்படிப் பார்த்தாலும் தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய தவறாக காணப்பட்டது.
40 வருடங்களில் இஸ்ரவேலர் கலகம் செய்த போதெல்லாம் ‌ அந்த ஜனங்களை அழித்துவிட்டு மோசேயை பெரிய ஜாதி ஆக்குவேன் என்று கடவுள் சொன்ன போதெல்லாம் அதை தடுத்து தனக்கு வர வேண்டிய மேன்மையை தவிர்த்து அந்த மக்களோடு தன்னை அடையாளப்படுத்தியவன்‌ மோசே.மத்தே 17:1-8
ஆனால்
மோசேயின் இந்த சிறு பலவீனம்,அவிசுவாசம் கர்த்தருடைய பார்வையில் மிகப்பெரிய தவறாக காணப்பட்டது. அதற்கு அவன் கொடுத்த விலை மிகவும் பெரியது.
1700 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டவர் மறுரூப மலையில் மோசேயை கொண்டு வந்து அவன் விரும்பிய கானானில் அவனுடைய கால்களை பதித்தான்.மத்தே 17:1-8
ஆனாலும் தன் மக்களோடு மக்களாக கானானுக்கு செல்லும் வாய்ப்பை‌இழந்தது அவனுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான்.
அதுபோல நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு தவறுகள் ‌ பெரிய பாதிப்புகளை சமுதாயத்தில் சில நேரங்களில் ஏற்படுத்திவிடும். நாம் சிறிய தவறு தானே என்று எண்ணுவோம். ஆனால் அது தேவனுடைய ராஜ்யவிருத்திக்கு, வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதகங்களை ஏற்படுத்தும் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியாது.
வேதம் சொல்லுகின்ற போதனையை போதிக்காத போதகர்கள்‌, வேதத்திற்கு மாறான உபதேசங்கள், ஒழுக்கம் இல்லாத ஊழியர்களை தாங்கிப் பிடிக்கும் காரியங்கள், போலிகள் என்று அறிந்தும் அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டாமல் அவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதுமான பல காரியங்கள் தேவனுடைய ஊழிய வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்
.அது மாத்திரமல்ல நம்மை நம்பிய பலரும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு துணை போக நாம் ஒரு கருவிகளாய் இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம்.
நம்முடைய சிறு தவறுகள் இயேசுவைப் பற்றிய மாதிரியை சிதைத்து விடுகிறது.
நாம் தவறு செய்யவில்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது.
By identifying with this kind of wrong doctrines or preachers or false apostles we give a wrong picture about Jesus Christ to the world and ruin the true type Christ who is saviour of the world
தேவன் தாமே இத்தகைய பாவத்திலிருந்து மீட்டுக் கொள்ளநமக்கு கிருபைதருவாராக.
கர்த்தர் மகிமைப்படுவாராக
இந்தப் பதிவின் மூலக்கருத்து W.W.Wiersbe மற்றும் Dake அவர்களின் விளக்க உரையை தழுவியது