பவுலடியாரின் அழைப்பும், தேவ கிருபையும்
பவுலடியாரின் அழைப்பும், தேவ கிருபையும்
பவுல் ஒரு சிறந்த பேச்சாளர் கிடையாது.
கவர்ச்சிகரமான சொல்லாற்றல் அவரிடம் கொஞ்சம் கூட காணப்படவில்லை.
கொரிந்து சபைக்கு செல்லும் போதுகூட மிகுந்த நடுக்கத்துடனே சென்றார். மற்றவர்களை ஒப்பிட்டு சொல்லும் போது நான்
“பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல" என்கிறார்.
இன்னொரு இடத்தில் ,: "தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை" என்று எழுதுகிறார்.
பவுலடியாருக்கு எடுப்பான தோற்றம் கிடையாது.
அவருடைய எதிரிகள் அவருடைய தோற்றத்தை பலவீனமாக கருதினார்கள் என்று எழுதுகிறார்.
காலத்திய சபைக்கு எழுதும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.
".உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
அப்படியிருந்தும் என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.”
. அவருடைய சரீர பலவீனம் அவ்வளவு கொடுமையானது.
அவர் சிறந்த எழுத்தாளரும் அல்ல.
WILLIAM BARCLAY என்கிற வேத பண்டிதர் அவருடைய கடிதங்களையெல்லம் ஆராய்ந்து இவ்வாறு எழுதுகிறார்
”His sentences begin and never finish: his grammar breaks down and the construction becomes involved, He normally did not pen his own letters. He dictated them to a secretary” (Rom 16:22,
1 Cor 16:21 2Thes 3:17 and Col 4:18)
எடுப்பான தோற்றம் இல்லாத, சிறந்த வசனிப்பு இல்லாத, மிகுந்த சரீர பலவீனத்தோடு உள்ள மனிதனை தேவன் மிக சிறந்த அப்போஸ்தலனாக்கி மிக பெரிய வெளிப்படுத்தல்களை சபைக்கு கொடுத்து புற ஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக்கி அவருடைய கைகளினால்
“அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும்” தேவன் நடப்பித்தார்.
எழுத கூடிய திறமை இல்லாத, அவருடைய கடிதங்களை கர்த்தர் அபிஷேகித்து ஜீவனுள்ள வார்த்தைகளாக மாற்றினார்.
காரணம் தேவனுடைய அழைப்பும் தேவனது கிருபையுமே.
பவுலடியார் வாழ்க்கையின் இறுதி மட்டும் எத்தனையோ எதிர்ப்புகள் வந்தபோதும் தனது அழைப்பை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. ஏன் பேதுருவும் தன்னை வளர்த்துவிட்ட பர்னபாவும் கூட உபதேச மாயத்திலே இழுப்புண்டு போனாலும் அழைப்பிலே சமரசம் செய்து கொண்டதில்லை.
அடுத்தது பவுலடியார் தனக்கு ஆண்டவர் அளித்த கிருபையை ஒருபோதும் விருதாவாக்கினதில்லை
தன்னுடைய எல்லா உழைப்புக்கும் பிரயாசத்திற்கும் மேன்மைக்கும் காரணம் கிருபைதான் என்று கிருபையின் மேல் சார்ந்து இருந்தார்.
" நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது" என்று எழுதுகிறார்.
உலகம் எதிர்பார்க்கும் எந்த ஒரு சிறப்பு அம்சங்கள் இல்லாத பவுலை தேவன் பயன்படுத்தும் போது நாம் நம்மை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும் போது நம்மையும் நம்முடைய அழைப்பிலே பயன் படுத்துவதுவார்