The fear of the Lord.
உங்கள் சிந்தனைக்கு:
The fear of the Lord.
கடவுளுக்கு பயப்படுகிற பயம்
என்பது, அவர் என்னவாக இருக்கிறார் ?யாராக இருக்கிறார்?அவர் நமக்கு செய்த செயல்கள் என்ன? அவர் உரைத்த வார்த்தைகள் என்ன? என்கிற புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
அவர் நம்மை படைத்தவர். நாம் உருவாக்கப்பட்டவர்கள் .
அவர் நம்முடைய முதலாளி .நாம் அவருடைய வேலைக்காரன்.
அவர் நமது தகப்பன் .
நாம் அவருடைய பிள்ளைகள்.
நாம் ஒருபோதும் படைப்பாளியாக மாற முடியாது .ஒருபோதும் அவருக்கு எஜமானனாக மாற முடியாது. அவருக்கு கட்டளையிட முடியாது.
நாம் கடைசி மட்டும் அவருடைய பிள்ளைகளாகத்தான் இருக்க முடியும். அவருடைய வார்த்தையை கேட்பதற்குதான் அவர் நம்மை உருவாக்கினர். அவர்தான் நம்முடைய ஆலோசனை கர்த்தர். நாம் அவருக்கு ஆலோசனை சொல்ல முடியாது. அவரே நம்முடைய நீதி. நமது நீதியான செயல்கள் அனைத்தும் மாதவிடாய் துணியை போன்றது.
இப்படிப்பட்ட சிந்தனை நம்மிடத்தில் இருக்கும்போது அவருக்கு பயப்படுகிற பயம் உண்மையாகவே நமக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கக்கூடிய காரியமாக இருக்கும்.
To fear the Lord means to respect who He is, what
He is, and what He says, and by our submission and
obedience show Him that we love Him.W.W.WIERSBE.
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
சங்கீதம் 34:9