Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

மிகப்பெரிய ஆசீர்வாதம்
உங்கள் சிந்தனைக்கு;
இறைவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் திருச்சபைக்கும் கொடுத்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பது அவர் நமக்கு சமீபமாக இருக்கிறார் என்பதும் நாம் அவருக்கு சமீபமாக இருக்கிறோம் என்பதுதான்.
God is near to us and we are near to Him.
இந்த மிகப்பெரிய ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் நம்மை போல் வேறு யாரும் இந்த உலகில்கிடையாது. ஆசிர்வாதத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அளித்தார்.

உபா 2:4,7 வசனங்களை படித்து பார்த்தால்
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?
உபாகமம் 4:7,8

இந்த ஆசீர்வாதம் புதிய ஏற்பாட்டில் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும்
கிடைத்திருக்கிறது
இரண்டு வகையில் நாம் அவரை நெருங்க முடியும் அவரும் நம்மை நெருங்கி வர முடியும்.
1.
நம்முடைய ஆராதனைகள் ஜெபங்கள் மூலமாக நாமும் அவரை நெருங்க முடியும் அவரும் நமக்கு சமீபமாக இருப்பார்.
2. அதுபோல அவர் நமக்கு கொடுத்த தேவனுடைய சுவாசத்திலிருந்து வெளிப்பட்ட அழியாத அவருடைய வார்த்தைகள் மூலமும் அவற்றை தியானிப்பதன் மூலமும் அவைகளுக்கு‌ கீழ்ப்படிவதன் மூலமும்நாமும் அவரை நெருங்க முடியும் கடவுளும் நமக்கு சமீபமாக இருக்கிறார்.

இந்த ஆசீர்வாதத்தை அனுதினமும் பெற்றுக் கொள்கிற மனிதன்தான் உலகத்திலேயே மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்.

இந்த உறவின் மூலமாக அவன் எந்த ஒரு காரியத்தையும், தேவனுக்கு சித்தமான யாவற்றையும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிற மனிதன் ஆவிக்குரிய உலகத்தில் யாரையும், எந்த சூழ்நிலையிலும் சார்ந்து இருக்க மாட்டான். அவன் தனக்கு நெருக்கமாய் இருக்கிற தேவனை மட்டுமே சார்ந்து இருப்பான்.

இதுதான் இரட்சிப்பின் முதல் படிகள் இந்த ஆரம்பப் பாடத்தை சபைகள் போதிக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் அளிக்கும் உரிமைச் சொத்து.. நம்முடைய நிலங்கள் வீடுகள் பொருள்கள் உலக ஆசீர்வாதங்களை எவ்வளவு பத்திரமாக பாதுகாக்கிறோமோ அதை விட பன்மடங்கு ஆவிக்குரிய சொத்தை ஏசாவை போல் விலைக்கு விற்று விடாமல், கலாத்திய சபை விசுவாசிகள் போல கிருபையை சாராமல் பிரமாணங்களையும், மனித கற்பனைகளையும் பின்பற்றாமல் இருக்க தேவன் நமக்கு கிருபை தருவாராக.Draw near to God and He
will draw near to you” (James 4:8). We don’t come fear fully to a stormy mountain but confidently to a
glorious heavenly city where our names are written
down as citizens of heaven (Heb. 12:18–24)