மோசே ஒப்பிட முடியாத மன்றாட்டு வீரன்.
உங்கள் சிந்தனைக்கு:
மோசே ஒப்பிட முடியாத மன்றாட்டு வீரன்.
வேதத்தில் எத்தனையோ மன்றாட்டு வீரர்களை பார்த்திருக்கிறோம். ஆபிரகாம் ,நோவா
தானியேல் என்று பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டில் பவுல் ,எப்பாப்பிரா போன்ற மன்றாட்டு வீரர்கள் அநேகர் காணப்பட்டாலும், மோசே ஒரு ஒப்புவமை இல்லாத மிகச்சிறந்த மன்றாட்டு வீரன்.
எந்த ஜனங்களுக்காக எகிப்தின் செல்வத்தை உதறித் தள்ளி விட்டு அதனுடைய மேன்மையை குப்பையாக கருதி தன் மக்களோடு அடையாளப்படுத்திக் கொண்டானோ அந்த நாள் முதல் தன் இறுதிக் காலம் வரைக்கும் அந்த மக்களுக்காக வாழ்ந்த மோசே ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்ல, ஒரு மன்றாட்டு வீரனும்கூட.
40 நாட்கள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் பூசியாமலும் தண்ணீர் குடிக்காமலும் தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளை பெற்றுக் பெற்றுக் கொண்டு சந்தோசத்தோடு திரும்பி வந்தார்.அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மலையை விட்டு கீழே மோசே 40 நாட்கள் வராததால் இஸ்ரவேல் பொன்னிலான கன்றுக்குட்டியை செய்து அதை வழிபடத் தொடங்கினார்கள்.
அதற்கு ஆரோனும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
கோபத்தினால் அந்த கற்பலகைகளை மோசே உடைத்துப் போட்டார். அப்பொழுது கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை தவிர்த்து மோசேயை பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
ஆனால் மோசே அந்த உயர்வை நிராகரித்தார்.
நிராகரித்தது மட்டுமல்ல அந்த ஜனங்களுக்காக தேவ சமூகத்தில் மறுபடியும் 40 நாட்கள் புசிக்காமலும் குடிக்காமலும் இருந்து தேவனிடத்தில் மன்றாடி
இஸ்ரவேல் மேல் உள்ள கடவுளின் கோபத்தை தடுத்தார்.
ஆரோனுக்காகவும் தேவ சமூகத்தில் மன்றாடினார்.
இதுதான் அவனுடைய மன்றாட்டின் உயர்ந்த நிலை.
எந்த ஜனங்களுக்காக எகிப்தினுடைய பொக்கிஷத்தை இழந்து வந்தானோ அந்த ஜனத்தின் மீது தேவனுடைய கோபத்தை தன்னுடைய மன்றாட்டு ஜெபத்தினால் தடுத்து நிறுத்தினார் .
அதே வேளையில் தனக்கு தேவன் அளிக்க முன்வந்த அந்த உயர்வை நிராகரித்தார்.
ஒரு முறை அல்ல இரண்டு முறை இதே போன்ற சூழ்நிலைகளில் தேவன் அளிக்க வந்த உயர்வை மோசே நிராகரித்தார்.எண்14:12.
Moses reasoned with God and argued first of all that His glory would be tarnished if Israel were destroyed. The nations had heard what God did in Egypt, but they would no longer fear Him if Israel were destroyed. The nations would say, “He brought Israel
out of Egypt but wasn’t able to bring them into the land. This means that the gods சட்ட of the land of Canaan are stronger than Jehovah!” The great concern of Moses
was that God be glorified before the nations.W.W.Wiersbe
மோசே தன்னுடைய அழைப்பில் ,அர்ப்பணிப்பில், நோக்கத்தில் மிக உறுதியாக இருந்தார். தன் ஜனத்தின் மீது அவருக்கு இருந்த உயர்ந்த பாசம் அன்பு இவைகளை அளவிட முடியாது. இதே போல்தான் பவுலும் புதிய ஏற்பாட்டில் தன் ஜனங்களுக்காக தானே சபிக்கப்பட்டவனாக மாற விரும்புவதாக கூறியிருக்கிறார்.ரோம 9:3.
இப்படிப்பட்ட மனநிலை நம்முடைய தேசத்தை குறித்தும் தமிழ்நாட்டைக் குறித்தும் மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசிகளிடம் காணப்படுகின்ற காலம் வரும் வரைக்கும் நம்முடைய தேசத்தில் எழுப்புதல் என்பது கானல் நீரே.
நம்முடைய தேசத்திற்காக, இனத்திற்காக உண்மையான பாரதத்தோடு ஜெபிக்க, மன்றாட நம் ஒவ்வொருவருக்கும் தேவன் சிறப்பான கிருபைகள் தர வேண்டும்.
அப்படி நாம் நம் தேசத்திற்காக மோசேயைப் போல மன்றாட நம்மை அர்ப்பணிக்கும் பொழுது நம் தேசத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
நாம் அடிப்படையிலேயே மன்றாட்டு வீரனாக, ஆசாரியனாக அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்கிற சிந்தனை நமக்குள் வர வேண்டும்.
பிரதான மத குருவாக நியமிக்கப்பட்ட ஆரோன் தன் ஜனங்களுக்காக மன்றாட வேண்டிய தன்னுடைய கடமையில் தவறி விட்டான்
தன் சகோதரன் மோசேயின் நம்பிக்கை இழந்துவிட்டார். ஆனால் மோசே எந்த தரிசனத்தோடு எகிப்தைவிட்டு புறப்பட்டானோ தன் ஜீவன் முடியும் வரை அந்த தரிசனத்தை காத்துக் கொண்டார். நமக்கும் மோசே போன்ற ஒரு அழைப்பின் தரிசனத்தை தருவாராக.
படிக்க உபா 9 வது அதிகாரம்.