நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப் போவது சொத்தா வெகுமதிகளா?
நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப் போவது சொத்தா வெகுமதிகளா?
ஆபிரகாம் தனக்கு உண்டான யாவற்றையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
ஆதியாகமம் 25:5
ஆபிரகாம் ஈசாக்க்கு கொடுத்த மிகச்சிறந்த சொத்து எதுவென்றால் அது உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் (Covenant promise)ஒரு தகப்பன் தன் குழந்தைக்கு அளிக்கும் மிகப்பெரிய சொத்து அவன் வாழ்ந்த வாழ்க்கை, அதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதம்தான்
ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
ஆதியாகமம் 25:6
தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்து தன் பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதிகள் ஆபிரகாம் தன் வைப்பாட்டியின் பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதிகளை போன்றது.
நாம் எப்படிப்பட்ட வெகுமதிகளை அல்லது
சொத்தை நம் பிள்ளைகளுக்கு அளிக்கிறோம் என்பது நம்முடைய வாழ்க்கையை பொறுத்து இருக்கிறது.
நாம் தேவனுக்காக வாழ்கின்ற வாழ்க்கை ,தியாகம் அர்ப்பணிப்பு போன்றவைகள் தான் நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மிகப்பெரிய சொத்து
ON THIS DAY