Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தேசத்தின் எழுப்புதலில் விசுவாசிகளின் பங்கு.
உங்கள் சிந்தனைக்கு!

தேசத்தின் எழுப்புதலில் விசுவாசிகளின் பங்கு.

இன்றய சூழ்நிலையில் சபைகள், சங்கங்கள், பெரிய தலைவர்கள்‌ மட்டும்தான் ஆண்டவருக்காக பெரிய சாதிப்பார்கள் என்கிற சிந்தையை புறம்பே தள்ளிவிட்டு ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டவருக்காக தங்கள் நிலையில், தங்கள் வாழும் இடத்தில், தேவன் தங்களை அழைத்த அழைப்பில், சாட்சியோடு உள்ள வாழ்க்கையில் என்ன சாதிக்க முடியும் என்று எண்ணி செயல் பட ஆரம்பித்தால் அதுதான் எழுப்புதலின் முதல் படி.
நமது தேசத்தின் எழுப்புதலில் விசுவாசிகளுக்கும் பெரும் பங்கு இருப்பதை உணர்ந்து கொள்வதே எழுப்பதில் ஆரம்பம் புள்ளி.

விசுவாசிகளின் பங்கு இல்லாமல், அவர்களின் ஜெபம் இல்லாமல், அவர்களின் உழைப்பு இல்லாமல், அவர்களின் தியாகம் இல்லாமல் நம் தேசத்தில் மட்டுமல்ல எந்த நாட்டிலும்எழுப்புதல் என்பது சாத்தியமில்லாத காரியம்.

எழுப்புதலில் தலைவர்களுக்கு எவ்வளவு பெரிய பங்கு இருக்கிறதோ அதற்கு சமமான பங்கும் விசுவாசிகளிடம் இருக்கிறது .
தேவன் அதை விசுவாசிகளிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
காது உள்ளவன் கேட்கக் கடவன்.
கர்த்தர் மகிமைப்படுவாராக.