இனப்பெருமையு ஒழிப்போம்
" நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்"
"அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்"கிரேக்கருக்கும், மற்ற
அ ந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்."
மேற்கொண்ட தேவ வார்த்தைகளை கவனமாக படிக்க வேண்டுகிறேன்.
"அவர் சகல ஜாதிகளையும்" "நான் கடனாளியாயிருக்கிறேன்." என்கிற இந்த வார்த்தைகள் நாம் எப்படிபட்ட விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.
இந்த வார்த்தைகள்தான் உலகில் உள்ள பல இன மக்களோடு பேசி இந்தியாவுக்கு ஊழியம் செய்ய மிஷினரியாக அனுப்பியது.
மறுபடியும் பிறந்த கிருஸ்தவன் ஜாதி, இன, மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கவேண்டும் ஜாதி வெறி எவ்வளவு மோசமானதோ அதே அளவுக்கு இன, மொழி வெறியும் மோசமானது,
"நான் தமிழன் "நான் மலையாளி " நான் தெலுங்கன் என்று மார்தட்டுவது வேதத்தின் படி சரியல்ல
.பவுலுடைய யூத இன பாசம் ஆவிக்குரியது.தங்கள் இனத்தின் மீது ஆவிக்குரிய பாரம் கொள்ளலாம் ஆனல் மொழி இன வெறி கொள்ளகூடாது.
இன்றய சபைகளில் ஜாதி வெறி காணப்படுவது போல சில சபைகளில் மொழிவெறி, இனவெறி, காணப்படுகிறது.
ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஜாதி இனம் மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டவனாக காணப்படவேண்டும்.நம்முடைய குடும்பம் உலகளாவிய ஓன்று.
.எல்லா இன மொழி ஜாதி மக்களையும் கர்த்தருக்குள் நேசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்
தேவன் தம்முடைய தியாகத்தால் உருவாக்கின சபைமக்களை இனத்தால், ஜாதியால், மொழியால் பிரிப்பது, பாரபட்சம் காட்டுவது, புறக்கணிப்பது ஏசுகிருஸ்துவின் பாடுகளை அவமதிப்பதற்கு ஒப்பாகும் .
இனப்பெருமை மொழிபெருமை தமிழக கிறுஸ்தவர்களை சமீப காலங்களில் ஆட்சி செய்வது வேதனைக்குரியது.
நம்முடைய பெருமை எல்லாம் சிலுவை அல்லாமல் வேறொன்றும் இல்லை
ஜாதி பெருமையும் ஒழிப்போம் இனப்பெருமையும் ஒழிப்போம் . மொழிபெருமையும் ஒழிப்போம் .ஏசுவின் மேன்மையை மட்டுமே நமக்கு போதும்