1 அரசர்கள் புத்தகம் – வேதப்பாடம் 21
1 அரசர்கள் புத்தகம் – வேதப்பாடம் 21
பெயர் சொல்லப்படாத தேவனுடைய மனிதனிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்
1.
இஸ்ரவேல் ராஜ்யத்தின் அரசனான யெரொபெயாமை நேரடியாக தைரியமாக கர்த்தருடைய வார்த்தையை சொல்லி எச்சரித்த அந்த பெயர் தெரியாத தேவ மனிதன், சாதாரணமான ஒருவராக இருந்தாலும், தேவனால் வலிமை பெற்றவர்.
அவன்
மன்னனை எச்சரித்து தீர்க்கதரிசனம் கூறினான்,
அவன் சொன்னபடி பலிபீடம் இரண்டாக பிளந்தது,
சாம்பல் கொட்டப்பட்டது,
மன்னன் கை நீட்டிய போது, அவன் கை மடங்கி திரும்ப முடியாதபடி உறைந்தது,
தேவ மனிதன் கர்த்தரிடம் மீண்டும் வேண்டியபோது, அந்த கை பழைய நிலைக்கு திரும்பியது.
இந்த ஒரு நாளில் தேவன் அவனை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றார்.
இந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அவன் இன்னும் விழிப்புடன் இருந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.
ஆனால்,
யெரொபெயாமின் எதிர்ப்பை எதிர்கொண்ட இந்த தேவ மனிதன், வயதான போலித் தீர்க்கதரிசியின் பொய்யை நம்பி தவறு செய்தான்.
"This man could not be deceived by a wicked king, but could be fooled by a retired old prophet." – Wiersbe
நம்மில் பலர் கர்ஜிக்கும் சிங்கத்தை (நேரடி அபாயங்களை) வெல்லக்கூடியவர்கள். ஆனால் வஞ்சகமான சர்ப்பத்தின் (நுணுக்கமான சதிகள்) கண்ணியில் விழக்கூடியவர்களாக இருக்கிறோம்.
2.
இந்த தேவ மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையினால் மரணத்தை சந்தித்தான்.
அவன் உரைத்த தீர்க்கதரிசனம் நூறு சதவீதம் தேவனுடைய வார்த்தைதான்.
ஆனால் அவனுடைய நடத்தை தேவனுக்கு பிரியமானதாக இருக்கவில்லை.
இன்றைக்கு பல தீர்க்கதரிசிகள் மற்றும் போதகர்கள் கர்த்தருடைய வார்த்தைகளை நன்றாக போதிக்கலாம்.
ஆனால், அவர்கள் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமில்லாததாக இருந்தால், தேவன் அவர்களையும் தண்டிப்பார்.
இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
3.
மெய்யான தேவனுடைய மனிதர்களையே அவர்களுடைய தவறுகளுக்காக தேவன் தண்டிக்கும்போது, போலியான தீர்க்கதரிசிகள் தேவனுடைய நியாய தீர்ப்பிலிருந்து எப்படி தப்பிக்க முடியும்?
“நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
1 பேதுரு 4:18
ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றி பெற நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டுமோ,
அதைவிட அதிக விழிப்புடன் வெற்றிக்கு பிறகும் இருக்க வேண்டியது நம்முடைய கடமை.
இந்த விழிப்பையும் கிருபையையும் நம்முடைய வாலிபர்களுக்கும் கர்த்தர் அருள்வாராக.