1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 24
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 24
சாலமோனுடைய மகன் ரெகோபெயாமின் ஆட்சி காலத்தில் ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது.
யூதா கோத்திரத்தில் சார்ந்த ரெகோபெயாம் ஒரு பிரிவாகவும் மற்ற
அனைத்து கோத்திரங்களும் யெரொபெயாம் தலைமையில் ஒரு பிரிவாகவும் ஆக இரண்டு பிரிவுகளாகத் தேசம் பிளவு பட்டது.
யெரொபெயாம் தலைமையில் வடக்கில் உள்ள 10 கோத்திரங்கள் இணைந்து ஒரு அரசாக மாறியது. இது இஸ்ரவேல் தேசம் என்றும் எப்பிராயீம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த ராஜ்யத்தை ஏறக்குறைய 9 வம்சங்கள் ஆட்சி செய்தது.
இதில் ஆட்சி செய்த அத்தனை அரசர்களும் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வில்லை
இவர்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது இவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுத்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதைப் பற்றியுள்ள ஒரு சிறு பதிவு.
இந்த இஸ்ரவேல் ராஜ்யத்தின் முதல் அரசன் யெரொபெயாம்
சாதாரண நிலையில் இருந்த இவனைக் கடவுள் சாலமன் செய்த பாவங்களின் நிமித்தம்
ஒருமைப்பட்ட தேசத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை இவனுக்கு அரசாளத் தேவன் வாய்பளித்தார்.
ஆனால் ஆனால் இவன் கர்த்தருக்கு பிரியமான வழியில் நடக்கவில்லை. இவன் 22 வருடங்கள் ஆட்சி செய்தான்.
இவனுக்குப் பிறகு இவன் மகன் நாதாப் அரியணை ஏறினான். இவன் இரண்டு வருடங்கள் தான் ஆட்சி செய்தான்.
இவனை இசக்கார் வம்சத்தை சேர்ந்த பாஷா கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினான்.
அதோடு யெரொபெயாமின் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
யெரொபெயாம் கடவுளுடைய பார்வையில் உத்தமமாக நடந்திருந்தால் இவனுடைய வம்ச ஆட்சியில் தொடர்ந்திருக்கும். ஆனால் அதற்கு இவனே முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
அடுத்து வந்தவன் பாஷா இவன் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தான் இவன்
யெரொபெயாமின் வம்சத்து சொந்தங்களை வேரோடு அழித்தான் 16:17
இவனுக்குப் பிறகு வந்த பாஷாவின் மகன் ஏலா இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தான்.
இவன் குடித்து
வெறித்திருக்கையில் சிம்ரி என்பதன் இவனைக் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினான்.
இதோடு பாஷாவின் வம்சம் முடிவடைந்தது.
பாஷா எப்படி ஏலாவை கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினானோ அதேபோல் இவனுடைய மகனும் கொலை செய்யப்பட்டு ஆட்சியை இழந்தான்.சிம்ரி பாட்ஷாவின் குடும்பத்தை அடியோடு அழித்தான்.
இவைகள் எல்லாம் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின்படி நடந்தாலும் பாஷா தான் தான் விதைத்ததையே அறுத்தான்.
யெகோவா தன் பணியாளனாகிய சீலோனியனான அகியாவின் மூலமாய்க் கொடுத்த வாக்கின்படியே, யெரொபெயாமுக்குச் சொந்தமான சுவாசமுள்ள எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் பாஷா கொன்றான்.
1 இராஜாக்கள் 15:29
யெகூ என்ற இறைவாக்கினன் மூலம் பாஷாவுக்கு எதிராக யெகோவா கூறிய வார்த்தை நிறைவேற்றும்படியாகச் சிம்ரி பாஷாவின் முழுக் குடும்பத்தையும் அழித்தான்.
நமக்குத் தேவன் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால்
எல்லாம் தேவனுடைய இறையாண்மையால் நடத்தப்படுகிறது என்றாலும் நாம் அல்லது ஒரு அரசு எந்த ஆயுதத்தைப் பயன்படுத்துகிறதோ அந்த கருவியேஅந்த அரசுக்கு எதிராக மாறிவிடும்.
ஒருமைப்பட்ட பாகிஸ்தான் மதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து பிரிந்தது. ஆனால் அந்த ஆயுதம் பின் நாட்களில் அவர்களுக்குப் பயன்படவில்லை மொழியின் அடிப்படையில் அந்த நாடு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று இரண்டாகப் பிரிந்தது.
வரலாற்றில் இது ஒரு உதாரணம்.
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.
தனிப்பட்ட நபர்களுக்கும் பொருந்தும், உலக அரசுகளுக்கும் பொருந்தும்.
கர்த்தருடைய வார்த்தையின்படி உருவாக்கப்பட்ட USA
இன்றும் நீடித்து
ஒருமைப்பட்ட நாடாகக் காணப்படுகின்றது.(பல குறைகள் இருந்தாலும்)
உலகத்தையே ஆட்சி செய்த இங்கிலாந்து தன்னுடைய காலணி ஆதிக்கத்தில் உள்ள நாடுகளைச் சுரண்டி, கொடுமைப்படுத்தினபடியினால் அந்த நாடு எல்லாவற்றை இழந்து ஏன் ஆண்டவரை விட்டே வெகுதூரமாகக் காணப்படுகிறது.
நமக்குள்ள ஒரே பாதுகாப்பு ஆண்டவருக்கு வாழ்கின்ற வாழ்க்கை மட்டுமே. தேவன் எல்லாவற்றையும் நடத்துகிறவர். நாம் அவருடைய கைகளில் நன்மையான திட்டங்களைப் பயன்படுத்துகிற நபராகக் காணப்பட வேண்டுமே அல்லாமல் அநீதியை நிலைநாட்டுகிற ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது
எசேக்கியேல் சண்முகவேல்