Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Commitment is not a one-way traffic.
உங்கள் சிந்தனைக்கு!

இன்றைய சபையின் சோகமான நிகழ்வு என்னவென்றால், சபை தலைவர்கள் தங்களின் கீழுள்ள விசுவாசிகளைத் தங்களின் தேவைகளை நிறைவேற்றும் வங்கிகளாகப் பார்க்கிறார்களே அன்றி, தேவனுடைய சரீரமாகிய சபையில் அவர்களுக்கும் ஒரு பணியைத் தேவன் வைத்திருக்கிறார் என்றும், அதைச் செயல்படுத்தத்தான் தன்னை தலைவராக வைத்திருக்கிறார் என்றும் அறியாமல் இருப்பதுதான்.

எந்த அளவுக்கு விசுவாசிகள் தலைவர்களுக்குக் கீழ்படிந்து ஒப்புக்கொடுப்பது அவசியமோ, அந்த அளவுக்குச் சபை மற்றும் இயக்கத்தின் தலைவர்கள் விசுவாசிகளுக்கு இசைந்து, அவர்களைத் தேவன் பயன்படுத்துவதற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

Commitment is not a one-way traffic.

ஆண்டவருக்கு பவுலும் பர்னபாவும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஸ்தேவானும் பிலிப்பும் அவசியம்.
இன்றைய தேவை:

விசுவாசிகளின் கிருபைகளை, தாலந்துகளை உணர்ந்து, அறிந்து, அதைப் பயன் படுத்த சபையும் இயக்கத்தின் தலைவர்களும் அனுமதிக்க வேண்டும்.

அந்நிய பாஷையை விசுவாசிக்காத Brethren Church விசுவாசிகளின் தாலந்துகளை பயன்படுத்துவதில் சிறந்த உதாரணமாக என் பார்வைக்கு தெரிகிறது.
எசேக்கியேல் சண்முகவேல்