பவுலும் கொரிந்து சபையும்
உங்கள் சிந்தனைக்கு !
பவுலும் கொரிந்து சபையும்
பவுல் உண்டாக்கிய சபைகளிலேயே அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது கொரிந்து சபைதான்.
சபையை ஆரம்பித்ததிலிருந்து அதை நிலைநிறுத்துவது வரை அவர் சமாளித்த சவால்கள் ஏராளம் ஏராளம்.
இங்குச் சபையை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. கொரிந்து ஒரு மிகப் பெரிய வணிக நகரம்.
.கடற்கரை நகரமும் கூட.
செல்வ செழிப்பில் ஊறின நகரம்.அதே வேளையில் விபச்சாரம் வேசித்தனம் குடி போதை போன்ற பாவங்களில் உச்சத்தை தொட்ட நகரம்.
சரீரத்தில் செய்யும் எந்தப் பாவமும் ஆவிக்குரிய காரியங்களைக் கட்டுப்படுத்தாது என்ற கிரேக்க தத்துவத்தைப் பின்பற்றுகிற நகரம்.
The worst aspect of thinking of the separation of the physical and spiritual was prevalent in Corinth city.
இதன் விளைவாகத்தான் பவுல் "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? என்று கூறுகிறார்.
மேலும் இந்த நகரத்தில் ‘Aphroite” என்கிற கோயில் இருந்தது .
அதில் உள்ள 1000கும் மேலான கோவிலில் உள்ள (தேவதாசிகள்) sacred prostitutes தினமும் மலை நேரங்களில் விபசாரத்திற்காக வருகின்ற நிகழ்வுகளும் உண்டு.
“Paul would be forgiven for wondering if people so busy would ever have time to listen to the Gospel”.
இந்தச் சவாலான நகரத்தில் தேவனுடைய சபையைப் பவுல் உருவாக்கினதே ஒரு மிகப் பெரிய தேவனுடைய கிரியை.
கொரிந்து நகரத்தைச் சந்தித்த தேவன் எந்த நகரத்தையும் சந்திக்க வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்.
இந்த நகரத்தில் 18 மாதங்கள் தங்கி ஊழியம் செய்து பலதரப்பட்ட மக்களை மந்தைக்குள் கொண்டுவந்தார்.ஆனல் அவர் போனபிறகு சில ஆண்டுகளுக்குள் அந்தச் சபை பிரிந்து கறைபட்டு மகிமை இழந்த சபையாக மாறிவிட்டது.
It became a divided, defiled, and disgraced Chruch.
தான் வளர்த்த, ஆதரித்த, இடைவிடாமல் ஜெபித்த அந்தச் சபை, தன்னுடைய தோற்றத்தை, பேச்சை, அப்போஸ்தல அதிகாரத்தை நேர்மையை கேள்விக்குள்ளாக்கியது.
நாம் 2 கொரிந்தியார் அதிகாரம் 10 முதல் 13 வரை படித்தால் பவுலுடைய கதறலை படிக்கலாம்.
. எந்த சபையிலும் அவர் இங்கு போல் வேறு எங்கும் இவ்வாறு அவமானப்பட்டு மனம் உடைந்தது இல்லை .
இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த பதிவில்பார்க்கலாம்
கொரிந்து சபையின் மிக பெரிய இரண்டு குழப்பங்கள்.
1 பிரிவினைகள் நிறைந்த சபை
இயேசுவை பின்பற்றாமல் தலைவர்களை பின்பற்றி கிறிஸ்துவை புறம்பே தள்ளிவிட்டார்கள். "சிலர் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் " சொல்லி பல குழுக்களாக சபை பிரிந்து காணப்பட்டது.
கறைபடிந்த சபை.
விபசாரம் மலிந்து காணப்பட்ட சபை.இது பற்றி பவுல் எழுதும் போது " உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே" என்று சொல்லி கதறுகிறார் .
ஆவியானவரின் வரங்களை பற்றி பவுலடியார் அதிகமாக கொரிந்து சபையில் பேசியது போல் வேறுஎங்கும் பேசவில்லை. ஆனால் ஆவியானவரின் வரங்களை நன்கு பயன்படுத்திய சபைதான் இந்தவித குழப்பங்களையும் சந்தித்தது.
Exercising the spiritual gifts will not substantiate individual spiritual growth
இதன் மூலம் சில முக்கியமான ஆவிக்குரிய உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
1 நல்ல ஆவிக்குரிய தலைவர்கள் ஒரு சபையை அல்லது இயக்கத்தை அல்லது நிறுவனத்தை கர்த்தரின் அழைப்பை பெற்று ஆரம்பித்தாலும் கூட அந்த சபை அல்லது இயக்கம் அல்லது நிறுவனம் கறை படாமல், பிரிவினை இல்லாமல் பாவங்களுக்கு ஆட்படாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது.
2 கடைசி மட்டும் ஒரு சபை அதன் ஸ்தாபகரின் ஆதி உபதேசத்தில் நிலைத்துநிற்கும் என்றும் முடியாது . உதாரணம் காலத்திய சபை.
3 ஒரு சபையின் குறைகளுக்கு அதன் ஸ்தாபகர் தான் காரணம் என்றும் கூறமுடியாது. பவுல் அவ்வளவு கஷ்டப்பட்டு பாடுபட்டு ஸ்தாபித்த சபையே பாவத்தில் விழும் போது மற்ற சபைகளை பற்றி நாம் என்ன சொல்லமுடியும்?
4 ஒரு தலைவர் அல்லது போதகர் தன் கீழ் உள்ள மக்களுக்கு வழிகாட்டலாம், முன்மாதிரியாக இருக்கலாம், போதிக்கலாம். ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சி என்பது தனிப்பட்டவர்களுடைய முயற்சியை சார்ந்தது . எனவே போதகர் அல்லது தலைவர் நல்ல ஆவிக்குரியவர் என்பதினாலே சபை அல்லது இயக்கம் முழுவதும் ஆவிக்குரியதாகக் காணப்படும் என்று சொல்ல முடியாது.