Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேதப் பாடம் 27
உங்கள் சிந்தனைக்கு –
1 அரசர்கள் புத்தகம் வேதப் பாடம் 27
வேதத்தில் எலியாவுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ஏசாயா தீர்க்கதரிசி முதல் மல்கியா தீர்க்கதரிசி வரை உள்ள தீர்க்கதரிசிகள் போல, இவர் எந்தத் தீர்க்கதரிசனப் புத்தகத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர் ஒரு எழுத்து தீர்க்கதரிசி அல்ல. He is not a writing prophet.
புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானகரர் எலியாவோடு ஒப்பிடப்படுகிறார். இயேசு கிறிஸ்துவும் எலியாவைப் பற்றிக் குறிப்பாகக் கூறியுள்ளார்.
மரணத்தைக் காணாமல் விண்ணேற்கப்பட்ட இருவரில் ஒருவர் இவராக இருக்கிறார். மேலும் வேதத்தில் முதன் முதலில் மரித்த ஒருவரை உயிருடன் எழுப்பியவர் இவர்தாம்.
எலியாவின் வாழ்க்கையை கவனித்து பார்ப்போம் என்றால் சில பிரமிக்கத் தக்க காரியங்களைக் காணலாம்:
1. பின்புலம் இல்லாத அறிமுகம்
எலியாவைப் பற்றி வேதம் ஆரம்பத்தில் எந்த அறிமுகமும் தரவில்லை.
அவருடைய பெற்றோர்கள், கோத்திரம், பழைய நிகழ்வுகள் – எதுவும் குறிப்பிடப்படவில்லை.
திடீரென்று 1 இராஜாக்கள் 17ஆம் அதிகாரத்தில் அவர் தோன்றுகிறார். ஆனால் அவர் தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி.
முன்னுரை இல்லாமல், அடையாளம் இல்லாமல் இருந்த எலியாவை தேவன் ஒரே நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்.
அதேபோல், ஒருவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தால், தேவன் ஒரே நாளில் அவரை உலகுக்கு உயர்வாக நிலைநிறுத்துவார்.
கடவுளின் செயல்களை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. அவர் அதிசயங்களின் தேவன்.
2. ஆச்சரியப்படத் தக்க கீழ்ப்படிதல்
“என் வாக்கின்படியே அல்லாமல் தேசத்தில் மழை பெய்யாது” என்று சாகசமாகப் பிரகடனம் செய்த பின்னரும்,
அவர் தேவனின் வார்த்தைக்கேற்ப:
“நீ இந்த இடத்தைவிட்டு கிழக்குப் பக்கம் திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கேரீத் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள்” (1 இராஜாக்கள் 17:3) என்ற கட்டளைக்கு உடனடியாகக் கீழ்ப்படிந்தார்.
“சாரெபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு” என்ற கட்டளைக்கும் (17:9) உடனே சென்று கீழ்ப்படிந்தார்.
பின்னர், “ஆகாபுக்கு முன் போய் நில்” (18:1) என்ற கடவுளின் வார்த்தைக்கேற்ப, பயம் இல்லாமல் கொடுங்கோலரசன் ஆகாபின் முன்பாக நின்றார்.
அந்த நேரத்தில் ஆகாபும், யேசபெலும் பாகால் வழிபாட்டைப் பரப்பிக் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை கொலை செய்துகொண்டிருந்தனர்.
மோசே கூடப் பார்வோனை எதிர்க்கத் தேவன் அழைத்தபோது தயங்கினார். ஆனால் எலியா தயக்கமின்றி கீழ்ப்பட்டார்.
இறுதியில், தேவன் கொடுத்த மூன்று கட்டளைகளையும் அவர் முழுமையாக நிறைவேற்றுகிறார் (1 இராஜாக்கள் 19:15–21).
3. மிகப்பெரிய தைரியசாலி
தனியாகப் பாகாலின் தீர்க்கதரிசிகளை எதிர்த்து, தேவனுடைய நாமத்தை உயர்த்தினார்.
4. இயற்கையின் ஆளுமையை ஜெபத்தால் கட்டுப்படுத்தினார்
இஸ்ரவேலில் காலநிலைச் சுழற்சியைக் கட்டுப்படுத்தியவர் – He controlled the weather in Israel.
5. சாட்சியமான பரிசுத்தவான்
புறயின விதவையின் வீட்டில் தங்கி இருந்தபோது,
அவள், “நீர் ஒரு இறைவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிலிருந்து வரும் கர்த்தருடைய வார்த்தை உண்மை என்றும் இப்பொழுது அறிகிறேன்” (1 இராஜாக்கள் 17:24) என்று சொன்னாள்.

இன்றைய சில சபைகளில், பாகாலின் ஊழியர்களைப் போன்று பலிபீடத்தில் ஆடி குதிக்கும் காரியங்களைக் காணலாம் (1 இராஜாக்கள் 18:26).
ஆனால் எலியாவைப் போன்று, “கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்” என்று கதறி அழைக்கும் ஊழியர்கள் மிக அரிதாகக் காணப்படுகிறார்கள்.
இரட்சிக்கப்படாத மக்களுக்காக ஜெபிப்பது அவசியம். அதேபோல், சபையின் சீர்கேடுகளுக்காகவும் கண்ணீர் விடுவது மிக மிக அவசியம்.