Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

மெல்லிய சத்தமா? பெருங்காற்றா? பூமி அதிர்ச்சியா?
உங்கள் சிந்தனைக்கு :

1 அரசர்கள் 19:
வேத பாடம் 30

மெல்லிய சத்தமா? பெருங்காற்றா? பூமி அதிர்ச்சியா?

நெருப்பா?
தேவன் எப்படி நம்முடன் பேசுகிறார்?
1 அரசர்கள் புத்தகத்தின் 19வது அதிகாரத்தில் தேவன் எலியாவோடு பேசிய அதிசயமான நிகழ்வை மையமாகக் கொண்டு, வேத பண்டிதர்கள் பல்வேறு விளக்கங்களையும், கருத்துகளையும் முன்வைத்துள்ளனர். தேவன் மனக்குலத்தோடு பேசுவதற்கு பல வழிகளைப் பயன்படுத்துகிறார். தேவனை அறியாத மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும் முறையை, தம்மை அறிந்தவர்களிடம் அவர் பயன்படுத்தமாட்டார்.
கர்மேல் மலையில், பாகால் தீர்க்கதரிசிகள் முன்னிலையிலும், பின்வாங்கிய இஸ்ரவேல் ஜனங்கள் மத்திலும் எலியா விண்ணப்பம் செய்தபோது, வானத்திலிருந்து இறங்கிய தேவனுடைய அக்கினி வழிபீடத்தில் உள்ள பலியை எரித்தது. இந்த வெளிப்படையான நிகழ்வின் மூலம் "யகோவாவே கடவுள்" என்று அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக அறியப்பட்டது.
அதே எலியா, ஒரேப் மலையின் குகையில் தங்கியிருந்தபோது, தேவன் அவனிடம்,
"இதோ, யெகோவா மலையைக் கடந்துபோகப் போகிறார்; ஆகையால் நீ வெளியே போய் மலையின்மேல் யெகோவா முன்னிலையில் நில்,"
என்று கூறினார்.
அப்போது:
பெருங்காற்று உண்டாயிற்று
பூமி அதிர்ந்தது
நெருப்பு ஏற்பட்டது
ஆனால் இவைகளில் எதிலும் தேவன் காணப்படவில்லை. அதன் பின்னர் மெல்லிய காற்றின் சத்தம் உண்டானது. அந்தச் சத்தத்தை உணர்ந்த எலியா குகையை விட்டு வெளியே வந்தான். அதன் பின் தேவன் அவனோடு நேரடியாக உரையாடினார்.
இந்த அனுபவம், பெருங்காற்றிலும், பூமி அதிர்ச்சியிலும், நெருப்பிலும் தன்னை வெளிப்படுத்தாத தேவன், மெல்லிய சத்தத்தின் மூலமாக எலியாவோடு உறவாடிய விதமாகும்.
இந்த நிகழ்வுக்குப் பலவிதமான விளக்கங்கள் இருந்தாலும், நான் புரிந்துகொண்டதாவது: உலக மக்களுக்கும், பின்மாற்றத்தில் உள்ளவர்களுக்கும் தேவன் தன்னை அடையாளங்களின் மூலமாகவும், செயல்களின் வழியாகவும் வெளிப்படுத்துவார். ஆனால் தேவனை அறிந்தவர்களுக்கு, அவர் அற்புதங்களும் அடையாளங்களும் இல்லாமல், வேதத்தைத் தியானிக்கும் நேரங்களில் மெல்லிய சத்தத்திலேயே பேசுவதை தேர்வு செய்வார்.
தேவன் நம்மோடு எப்படி பேச வேண்டும் என்பதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவரவர் ஆவிக்குரிய முதிர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், தேவைக்கும் ஏற்பத் தேவன் தம்முடைய பிள்ளைகளோடு பேசுவார்.
ஆபிரகாமோடு தேவன் நேரடியாகவும், தரிசனங்களின் வழியாகவும் பேசினார்.
மோசேயோடு முச்செடியில் தோன்றி பேசினார்.
பவுல் வானத்திலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டார்.
எப்போதும் நான் நினைக்கும் ஒரு தவறான பார்வை:
“சத்தமாக ஜெபிப்பது, ஆர்ப்பரித்து மகிழும் ஆராதனைகள், பிரம்மாண்ட நிகழ்வுகள் மூலமாகத்தான் தேவன் பேசுவார்” என்பது.
இது தவறான கருத்தாகும்.
அமைதியாகத் தேவ சமூகத்தில், ஆரவாரம் இல்லாமல் அமர்ந்து தேடுவது ஒரு பலவீனமான நேரம் அல்ல. அந்த நேரத்திலும் தேவன் மெல்லிய சத்தத்திலேயே நம்மோடு பேச முடியும்.
முடிவாக:
ஆரவாரத்திலும் தேவன் பேசுகிறார், அமைதியிலும் தேவன் பேசுகிறார்.
இரண்டும் விசுவாசிக்குத் தேவையானவையும், முக்கியமானவையும்.
இரண்டு அனுபவங்களும் மேன்மையானவை.