நமக்குக் கிடைத்திருப்பது கிருபாசனம் அல்ல “அருள் நிறைந்த இறை* *அரியணை”. "கிருபையின் அரியணை”.
உங்கள் சிந்தனைக்கு:
நமக்குக் கிடைத்திருப்பது கிருபாசனம் அல்ல “அருள் நிறைந்த இறை* *அரியணை”. "கிருபையின் அரியணை”.
It is not “Mercy seat” but “Throne of Grace”.
எபி.4:16 இவ்வாறாகப் பவர் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
“தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்”. . (எபி.4:16)
ஆனால் கத்தோலிக்க மொழி மொழிபெயர்ப்பில்
“ *அருள் நிறைந்த இறை அரியணையைத்* துணிவுடன் அணுகிச் செல்வோமாக. (எபி.4:16) என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது.
இலங்கையின் இலகுthe மொழிபெயர்ப்பில் “கிருபையின் அரியணை ” என்று சொல்லப்பட்டிருக்கிறது
. இதுதான் சரியான மொழிபெயர்ப்பு
Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.KJV
So let us come boldly to the throne of our gracious God. There we will receive his mercy, and we will find grace to help us when we need it most. NLT VERSION
பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் கிருபாசனத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு ஒரு தடவை பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு சென்று (ஆரோன்) தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று, காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக, ஏழுதரம் தன் விரலினால் தெளிப்பான்.
பின்பு, ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும், தெளிப்பான்.
பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது. லேவி 16:1-17
இங்குச் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகிருபாசனம் என்பது
ஆங்கிலத்தில்" MERCY SEAT" என்று சொல்லப்பட்டிருக்கிறது.. யாத்தி25;22
இதே வார்த்தையைத் தான் ( கிருபாசனம் )புதிய ஏற்பாட்டில் எபிரேயருக்கு எழுதின நிருபத்தில் பழைய மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால்இந்த இடத்தில் சரியான மொழிபெயர்ப்பு 'அருள் நிறைந்த இறை* *அரியணை' (Throne of Grace) என்பது புது மொழி பெயர்ப்பு*
புதிய ஏற்பாட்டில் மகா பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து பாவநிவாரணபலியாக ஒரே ஒரு தரம் தன்னையே பலியாகச் செலுத்தி வானங்களின் வழியாகப் பிரவேசித்து இன்று தேவனுடைய சன்னிதானத்தில் அருள் நிறைந்த இறை ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அருள் நிறைந்த இறை ஆசனம், இரக்கமும் கிருபையும் நிறைந்த ஒரு ஆசனம். அதில் இயேசு கிறிஸ்து வீற்றிருக்கிறார். பழைய ஏற்பாட்டு மக்களைப் போல நடுக்கத்தோடு ஆசரிப்புக் கூடாரத்தில் வெளியே நிற்பதுபோல நாம் இன்று தேவ சன்னிதானத்தில் நிற்க வேண்டாம்.
இந்த ஆசனம் கிருபை, இரக்கம்இணைந்த, நிறைந்த ஆசனம். எனவே, இதற்குள் தைரியமாக நாம் செல்லலாம். வெறுமனே பிரதான ஆசாரியர் மட்டுமே செல்லும் இடம்
இரக்கத்தின் இருக்கை " *MERCY* *SEAT* ". இங்கு இஸ்ரவேல் மக்களைத் தேவன் சந்திக்கும் இடம்.
ஆனால் புதிய ஏற்பாட்டில் நாம் சந்திக்கும் இடம் " *அருள் நிறைந்த இறை ஆசனம் "*
இங்கு எந்தக் கோழையும் செல்லலாம்.
எந்தப் பாவியும் செல்லலாம்.
எந்தப் பலவீனரும் செல்லலாம்.
நாம் காலேபைப் போல, யோசுவாவைப் போல வெற்றி வீரராக இல்லாமல் இருக்கலாம்.
பேதுருவைப் போல மறுதலித்து கூட இருக்கலாம். ஏழையாகக் கூட இருக்கலாம். நோயாளியாகக் கூட இருக்கலாம். படிப்பறிவு இல்லாத மக்களாகக் கூட இருக்கலாம்.
நம்மைப் போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு எல்லா நிலைகளிலும் பாடுகள் அனுபவித்து, எல்லாராலும் கைவிடப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஆனாலும் பாவம் செய்யாத பிரதான ஆசாரியர் இயேசுக்கிறிஸ்து நமக்கு இருக்கிறபடியால் அவர் நம் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்.
நம்முடைய நிலைமைகளை அறிந்து கொள்வார். நம்முடைய பலவீனங்கள் தோல்விகள் எல்லாவற்றையும் அவர் அறிந்து கொள்ள வல்லவராயிருக்கிறார். எனவேதான் பழைய ஏற்பாட்டு யூதர்களைப் போலத் தேவாலயத்திற்கு வெளியே நிற்காமல் இந்தச் சன்னிதானத்தில் தைரியமாக நுழைய நமக்கு அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது.
எல்லோரும் இங்கு நேரடியாக, சம அந்தஸ்துடன், எந்நேரமும் இரக்கமும் கிருபையும் பெற தைரியமாக இங்குச் செல்லலாம் . இது தான் புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவம்.
*We have equal unlimited and free access to the “Throne of Grace”*
சம அந்தஸ்து என்றால் இன்றைக்கு புதிதாகப் பிறந்த கிறிஸ்தவனாக இருந்தாலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கிறிஸ்தவனாக இருந்தாலும் இருவருக்கும் ஒரே நிலை.(Equal Status)
நேரடியாக என்றால் எந்த மத்தியஸ்தம் இல்லாமல் தைரியமாகக் குமாரன் மூலம் பிதாவை நெருங்கலாம்.
எந்நேரமும் என்றால் பழைய ஏற்பாட்டு பிரதான ஆசாரியன் அடிக்கடி கிருபாசனத் தண்டை நெருங்க முடியாது
நாம் அப்படி அல்ல 24 மணி நேரமும் தேவனுடைய சன்னிதானத்தில் குமாரன் மூலம் நுழையக் கிருபை பெற்றிருக்கிறோம்.
இந்த நம்பிக்கையில்தான் நாம் முழு நிச்சயத் தோடும் தைரியமாகத் தேவ சந்நிதியில் பிரவேசிக்க நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
*இதைவிட ஒரு விசுவாசிக்கு வேறு என்ன ஆசீர்வாதம் தேவை? தேவ சந்நிதியில் எதையும் அவரது சித்தத்தின் அடிப்படையில் நாம் தேவனிடத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். இது தான் புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவ மகிமை*