2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 3
2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 3
எலிசாவின் இரண்டாவது அதிசயம் –அதைப் பற்றிய
விமர்சனங்கள்.
எலிசா பெத்தேல் நகரத்தின் வழியாக நடந்து கொண்டிருக்கும்போது, சில வாலிபர்கள் வந்து, “மொட்டைத் தலையா, ஏறிப் போ! மொட்டைத் தலையா, ஏறிப் போ!” என்று அவனை கேலி செய்தனர். அப்போது எலிசா திரும்பிப் பார்த்து, யெகோவாவின் நாமத்தில் அவர்களைச் சபித்தான். உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பேரைக் கொன்று போட்டன.
இந்த சம்பவம் உலகில் பலராலும் விவாதிக்கப்படும் ஒரு பரபரப்பான வேதத்துணுக்காகவே இருக்கிறது. “இவ்வளவு பெரிய தண்டனை நியாயமானதா?”, “அவர்களை ஏன் சபிக்க வேண்டும்?”, “மன்னித்து விட்டிருக்கலாமே?” என்ற கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றி சுருக்கமாக தியானிக்கலாம்.
முக்கியமான குறிப்புகள்:
பெத்தேல் – இஸ்ரவேல் தேசத்தில் மதப்பண்பாடுகளுக்கு முக்கியமான நகரமாகும். இங்கு தீர்க்கதரிசிகளும் தேவ ஊழியர்களும் மதிக்கப்படவேண்டும்.
வாலிபர்கள் – இங்கே "வாலிபர்கள்" என்று சொல்லப்படுவது 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும்,நன்மல–தீமை என்ன என்பதை அறிவதற்குரியவர் என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எலிசாவின் அவமதிப்பு – “மொட்டைத் தலையா, ஏறிப் போ!” என்பதன் உள்ளார்ந்த அர்த்தம், “நீ எலியாவைப் போல் ஆக முடியாது” என்பதான சவாலாகும். இது ஒரு தீர்க்கதரிசியையும், கடவுளின் ஊழியத்தையும்
அவமதிப்பது.
கடளுடைய வழிகளில் நடக்காத ஆகாபின் மகன் யோராமே எலிசாவை உண்மையான தீர்க்கதரிசியாக கருதியாக கருதியதாக
2 இராஜாக்கள் 3:11-13ல் நாம் பார்க்கலாம்
உடனடி தண்டனை – பழைய ஏற்பாட்டில் சில முக்கிய நிகழ்வுகளின் தொடக்கத்தில் கடவுள் தன்னைத் தூசிக்கொண்டவர்களுக்கு உடனடி தண்டனையை அளித்துள்ளதை நாம் பார்க்கிறோம்:
ஆசரிப்பு கூடாரம் தொடங்கும்போது நாதாபும், அபியூவும் தங்கள் (லேவி 10)
யோசுவா தலைமையின் கீழ் ஆகானின் குடும்பம் (யோசுவா 7)
புதிய ஏற்பாட்டில் அனனியா, சப்பீரா (அப்போஸ்தலர் 5).
கால சூழ்நிலை – எலிசா இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டத்தில் இருந்தார். அவரை கேலி செய்வது கடவுளின் நியமத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது.
தற்போதைய காலத்திற்கான பொருத்தம்
இந்த சம்பவத்தை புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டு, நம் கால ஊழியக்காரர்கள் இந்த மாதிரியான சபைகளைச் செய்ய வேண்டும் என்று கூற இயலாது. இன்று நாம் கிருபையின் காலத்தில் வாழ்கிறோம். இன்று கடவுளுடைய ஊழியக்காரர்கள் பொறுமையுடனும், அன்புடனும் செயல்பட அழைக்கப்படுகிறோம்..
2 இராஜாக்கள் 2:23–25ல் இடம்பெற்ற இந்த சம்பவம் கடவுளின் நீதியின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரு சிக்கலான மற்றும் மனதில் கேள்விகளை எழுப்பக்கூடிய சம்பவமாக இருந்தாலும், அதன் பின்னணி, சூழ்நிலை, மற்றும் வேதத்திலுள்ள தத்துவ அடிப்படைகளை புரிந்துகொண்டால், அதில் மறைந்துள்ள ஆழமான செய்தியை நன்கு புரிந்து கொள்ளலாம்.
எசேக்கியேல் சண்முகவேல்