Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேத பாட நாள் 4
உங்கள் சிந்தனைக்கு
2 அரசர்கள் புத்தகம் வேதபாடம் - 4

எலியாவின் சால்வையும் எலிசாவின் தலைமைப் பொறுப்பும்

யூதர்களின் வரலாற்றில் எலியா தனிப்பட்ட சிறப்பைப் பெற்றவர்.
உயிரோடே பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டவர். (ஏனோக்கு 300 ஆண்டுகள் தேவனோடு நடந்து, பின்னர் எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் எலிசா அப்படி அல்ல.)
மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்கள் மழை பெய்யாதபடியாக இயற்கையின் மீது ஆளுகை செலுத்தியவர்.
மரித்தவரை உயிருடன் எழுப்பியவர்.
பாகாலின் தீர்க்கதரிசிகள் முன்னிலையில் வானத்திலிருந்து அக்கினியை இறக்கச் செய்தவர்.
ஏறத்தாழ 16 அதிசயங்களைத் தேவன் மூலமாக நிகழ்த்தியதாகவே வேதாகமம் குறிப்பிடுகிறது.
இஸ்ரவேல் மக்களிடையே மிகப்பெரிய தீர்க்கதரிசியாக அறியப்பட்டவர்.
இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவராகக் காணப்பட்டவர்.

ஆனாலும் எந்த ஒரு மிகப்பெரிய ஊழியக்காரராக இருந்தாலும் அவர்கள் அழியாதவர்கள் அல்ல. அவர்களுடைய ஊழியத்தின் கால அளவு நிரந்தரமானது அல்ல.
இந்த ஒரு மனிதரை வைத்துதான் கடவுள் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவார் என்கிற கட்டாயத்திற்கு உட்பட்டவர் அல்ல நமது கடவுள்.
Nobody is indispensable.

எனவே அவர் இருக்கும் காலத்திலேயே எலியாவின் ஸ்தானத்தில் எலிசாவை முன்குறித்தார்.
எலியாவைக் கொண்டே எலிசாவை, எலியாவின் அடுத்த வாரிசாக அபிஷேகம் செய்ய வைத்தார்.
அதற்கு அடையாளமாக,
எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான்.
மேலாடை அவன்மேல் விழுந்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து பணி செய்தார்கள்.
அதற்குப் பிறகு எலியா பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, தன் உடைகளைக் கிழித்து, கீழே விழுந்த எலியாவின் மேலாடையை எடுத்து, யோர்தானின் தண்ணீரில் அடித்து, "எலியாவின் தேவன் எங்கே?" என்று சொல்லி நதியை இரண்டாகப் பிரித்துத் தான் எலியாவின் வாரிசு என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு நிரூபித்துக் காட்டினான்.

இந்த நிகழ்வுகள்மூலம் தேவன் உணர்த்தும் பாடங்கள்:

1. எலியாவைப் பொறுத்த அளவில்:
தான் மட்டும்தான் "கடவுளுக்காக வைராக்கியமாக இருக்கிறேன்" என்கிற சிந்தனையைத் தேவன் புறந்தள்ளி விட்டார்.

தீர்க்கதரிசிகள் என்று அடையாளப்படுத்தப்படாத, அதே வேளையில் தீர்க்கதரிசிகள் குழுவில் இல்லாத ஒரு எலிசாவை தேவன் தேர்ந்தெடுத்த காரியம், யாரைக் கொண்டும் தேவன் நம்முடைய பணியை நிறைவேற்ற முடியும் என்பதை எலியாவுக்கு கடவுள் உணர்த்தினார்.

2. எலிசாவைப் பொறுத்த அளவில்:
தன் சால்வையை எலியா தன் மேல் போட்டதன் மூலம், தன்னை எலியாவின் வாரிசாகக் கடவுள் அபிஷேகம் செய்துவிட்டார் என்று அறிந்திருந்தான்.
ஆனாலும் அவன் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. உடனடியாக செயல்பாட்டில் இறங்கவில்லை.
எலியாவோடு கடைசி வரை, பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் காலம் வரை இடைவிடாது எலியாவை எலிசா பின் தொடர்ந்தான்.
கடவுள் நியமித்த காலம் வரைக்கும் பொறுமையாக காத்தான்.
கடவுளுடைய நேரத்திற்கு முன்பாகச் செயல்படவில்லை.

3. எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு
தன்னுடைய உடையைக் கிழித்துவிட்டு, தன் மேல் விழுந்த சால்வையை எடுத்து, யோர்தானை இரண்டாகப் பிரித்தான்.

இது எதைக் காட்டுகிறது என்றால்,
எலிசா தன்னுடைய அடையாளத்தை மறைத்து, எலியாவின் தொடர் ஊழியத்தில் தன்னை இணைத்துக் கொண்டதை காட்டுகிறது.
தனக்கென ஒரு சுயாதீன கொள்கையைப் பின்பற்றாமல், கடவுள் எந்த நோக்கத்திற்காக எலியாவை பயன்படுத்தினாரோ, அந்த நோக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதை காட்டுகிறது.

அதிகாரம் என்கிற சால்வை தேவன் நம்மில் விழச்செய்ய வேண்டும்.
அதே வேளையில், ஏற்ற நேரத்தில் நாமும் விழுந்த மேலாடையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தலைமைப் பொறுப்பை எல்லோரும் அடைய விரும்புவது இயல்புதான்.
அந்தச் சால்வை எல்லோர்மீதும் விழாது.
இறைவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் மேல்தான் அந்தச் சால்வை விழும்.
இது தேவனுடைய தெரிவு.

அதே வேளையில் விழுந்த சால்வையை நாமும் பெற்றுக்கொண்டு, அதைப் புறக்கணிக்காமல், அதில் நம்மை விட்டு நழுவிப்போகாதபடி விழிப்புடன் இருக்க வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் தேவனுடைய தெரிவும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஒரு விழிப்புணர்வும் மிகவும் அவசியம்.

முடிவு சிந்தனை:
தேவன் நம்மை தேர்வு செய்வதும், தயாரிப்பதும் தேவனுடைய நேரத்திலும், திட்டத்தின்படியும் தான் நடைபெறும்.

சால்வை விழுந்தது ஒரு தொடக்கமே; அதை உரிமை செய்தல், அதனை முறையாக நடத்துதல் நமது பொறுப்பு.

தலைமை, அதிகாரம் என்பது தன்னை உயர்த்திக்காட்டுவது அல்ல; தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவும் ஒரு
ஊழிய பணி.

சுய அடையாளம் மறைந்து, தேவனுடைய திட்டத்திற்கே ஒத்துப்போக வேண்டும்.
இரண்டாவது தலைமுறை தயார் செய்யப்பட வேண்டும்.
தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல், எலியாவின் தொடர் ஊழியத்தையே தன் பணி என எடுத்துக் கொண்டான்.
எசேக்கியேல் சண்முகவேல்