2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 18
2 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 18
படிக்க 13 வது அதிகாரம்
20 மற்றும் 21 வது வசனங்கள்.
20 வது வசனத்தில்
"மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. " என்கிற வார்த்தை வருகிறது.
2 இராஜாக்கள் 13:20.
தண்டுகள் என்றால்
கொள்ளைக் கூட்டம் என்று அர்த்தம்.
(நமது பவர் மொழிபெயர்ப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த ஒரு வசனமும் ஒரு உதாரணம்)
இந்த நிகழ்வில் கடவுள் எலிசா மரித்தபிறகும் அவன் மூலமாகத் தம்முடைய வல்லமை வெளிப்படுத்தினார்.
அந்த நிகழ்வு எப்பொழுது என்றால் இஸ்ரயேலர் ஒரு மனிதனை அடக்கம்பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கொள்ளைக் கூட்டத்தைக் கண்டார்கள். உடனே அந்த உடலை எலிசாவின் கல்லறையைத் திறந்து அதன் மேல் மரித்தவன் உடலைத் தூக்கி எறிந்தார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகளில் பட்டவுடனே அவன் உயிர்பெற்று தன் கால்களை ஊன்றி எழுந்து நின்றான்.
எலியா மரிக்காமல் எடுத்துக் கொள்ளப்பட்டான். ஆனால் எலிசாவின் மரித்த உடலைத் தேவன் பயன்படுத்தினார்.
யெகூவை எலிசா அரசன் ஆக்கின பிறகு அவனைப் பற்றி உள்ள நிகழ்வுகள் வேதத்தில் சொல்லப்படவில்லை.
வேதத்தில் எலிசாவின் கடைசி 45 ஆண்டுகால ஊழியங்கள்பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவனுடைய இறுதி காலத்தில் அவனைக் கொண்டு கடவுள் பயன்படுத்த நிகழ்வுகளைப் புத்தகத்தின் 13-வது அதிகாரத்தில் பார்க்கலாம்.
இந்த நிகழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் சத்தியங்கள்.
1.தேவனுடைய சித்தத்தின் மத்தியில் வாழ்கின்ற மனிதனுடைய ஊழியங்கள் அவனுடைய இறுதி காலம்வரை தொடரும்.
2. தேவனுடைய ஊழியன் பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும்பொழுது கடவுள் அவனைப் பயன்படுத்துவதற்கு வயோதிக காலம் ஒரு தடையல்ல.
3. எலியாவை பயன்படுத்திய விதம் வேறு. எலிசாவை கடவுள் பயன்படுத்த விதம் வேறு.
ஒவ்வொரு ஊழியரைக் குறித்தும், ஒவ்வொரு ஊழியத்தை குறித்தும் கர்த்தருடைய பரந்த நீண்ட கால திட்டம் உண்டு. அதன் அடிப்படையிலேயே தேவன் ஒவ்வொரு விசுவாசியையும் பயன்படுத்துகிறார்.
4. விசுவாசியோடு விசுவாசியையும் ஊழியக்காரரோடு ஊழியக்காரரையும் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. அது நாகரீகமும் அல்ல.
யோவான்21:19-23.
நம்முடைய கடவுளுக்கு இளைஞர்களும் தேவை முதியோரும் தேவை. முதியோர்களின் ஆலோசனையைக் கேட்க மறந்த
காரணத்தினால்தான் ஒருமைப்பட்ட யூதா தேசம் வடக்கு தெற்கு என்று இரண்டாகப் பிரிந்து என்பதை மறந்துவிடக் கூடாது