Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேதபாடம். 17


2 அரசர்கள் புத்தகம் வேதபாடம். 17


"யெரோபெயாமின் பாவங்கள்" என்றால் என்ன?
நம்முடைய வேத புத்தகத்தில்"யெரோபெயாமின் பாவங்கள்"என்று 22 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறு எந்த மனிதருடைய பாவங்களைக் குறித்தும் இத்தனை அதிகமான இடங்களில் வேதத்தில் சொல்லப்பட்டதில்லை.
அந்த அளவுக்கு இவனுடைய பாவங்கள் மிகப்பெரிய தாக்கத்தைப் பழைய ஏற்பாட்டில் ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பாவங்களைக் குறித்து இப்பொழுது சுருக்கமாகத் தியானிக்கலாம்.

வேதத்தில் யெரோபெயாம்
என்கிற பெயரில் இரண்டு அரசர்கள் வருகிறார்கள்.

இந்தப் பகுதியில் நாம் 1அரசர்கள் புத்தகம் 12 வது அதிகாரத்தில் வருகின்ற பிளவு பட்ட இஸ்ரவேல் தேசத்தின் முதல் அரசனன் யெரோபெயாம் குறித்து தியானிக்கலாம்.

இவனுடைய தகப்பன் பெயர் நோபாத். சாலமோன்
அரசனுக்கு பிறகு ஒருமைப்பட்ட யூத தேசம் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிந்தது.


12 கோத்திரங்களில் 10 கோத்திரங்கள் ஒன்றாக இணைந்து இஸ்ரவேல் தேசம் அல்லது சமாரியா என்று அழைக்கப்பட்டது.
(Northern kingdom)
யூதா கோத்திரம் மட்டும்‌ தனித்து விடப்பட்டு யூதா தேசம் என்று அழைக்கப்பட்டது.
இந்த யூதா தேசத்தில் தான் எருசலேம் தேவாலயம் காணப்பட்டது.
அதனால் இஸ்ரவேல் உள்ள தேவனுடைய பிள்ளைகள் கடவுளுடைய ஆலயத்திற்கு பலிகளை செலுத்தும் படியாகவும், கடவுளை ஆராதிக்கும் படியாகவும் பண்டிகைகளைக் கொண்டாடும் படியாகவும் எருசலேமுக்கு சென்று வந்தார்கள். இது இஸ்ரவேல் மன்னனான
யெரோபெயாமுக்கு பிடிக்கவில்லை. எருசலேமுக்கு தன் கீழ் உள்ள ஜனங்கள் சென்றால் அவர்கள் யூதா தேசத்தின் மன்னனுக்கு அடிமையாகி விடுவார்கள் அவனுடைய ஆதிக்கத்திற்குள் வந்துவிடுவார்கள் என்று தவறாக நினைத்தான்.
படிக்க ஒன்று அரசர்கள் புத்தகம் 12 வது அதிகாரம்

எனவே அதற்கு மாற்று வழிகளைக் கண்டுபிடித்தான்.
அந்த மாற்று வழிகள் தான்
"யெரோபெயாமின் பாவங்கள்" என்று அழைக்கப்படுகிறது.
அவனால் எருசலேமில் கட்டப்பட்ட தேவாலயத்தைப் போல் ஒரு தேவாலயத்தை உருவாக்க முடியாது.
மோசேயை போலப் புதிய மத சட்டங்களை உருவாக்க முடியாது.
மக்களின் பாவ மன்னிப்புக்கு வழிமுறைகளைக் கண்டுபிடிக்க முடியாது.
இவைகளுகெல்லாம் ஒரே மாற்று வழி தன் ஜனங்களை விக்கிரக ஆராதனைக்கு நேராக நடத்துவது ஒன்றுதான்.
. அந்த வழிகளைச் செயல்படுத்த யூத மதத்திற்கு மாற்றாகப் போலிகளை உருவாக்கினான்.


அந்த மாற்று வழிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்.
அவன்
எருசலேமில் உள்ள ஆலயத்தை நோக்கி ஆராதனை செய்வதைத் தவிர்க்க, யெரொபெயாம் இரண்டு பொன்னிலான கன்று குட்டிகளைஉருவாக்கி,
அவன் ஒன்றைப் பெத்தேலிலும், மற்றதைத் தாணிலும் வைத்தான். மக்களுக்கு, "இஸ்ரவேலே, உன்னை எகிப்துத் தேசத்திலிருந்து கொண்டு வந்த உன் தேவன்கள் இவை!" என்று கூறினான்.
2. அடுத்தது கடவுள் இஸ்ரவேல் ஜனங்கள் ஆராதிக்க தெரிந்து கொள்ள பட்ட இடம் எருசலேம் தேவாலயம்.
எருசலேம் தேவாலயத்திலிருந்து ஏறெடுக்கப்படு ஜெபங்களுக்கு தேவன் விசேஷித்த ஆசீர்வாதங்களை வைத்திருந்தார்
ஆனால் யெரொபெயம்‌ மாற்றாகத் தன்னுடைய தேசத்தில் இரண்டு இடங்களைத் தேர்ந்தெடுத்து அதில் மக்களை ஆராதிக்க வழி வகுத்தான்
3. விக்ரங்களை வழிபடுவதற்காகத் தோப்புகளை மலைகளில் ஏற்படுத்தினான்.
4.கடவுள் லேவி கோத்திரத்தை மற்ற கோத்திரங்களிலிருந்து பிரித்துக் கடவுளுடைய பணிகளைச் செய்வதற்காக அவர்களை மத குருக்களாகக நியமித்தார்.ஆனால் யெரொபெயாம் லேவியர்கள் அல்லாதவர்களை ஆசாரிகளாக நியமித்தான்
5. கடவுள் யூதர்களுக்கு நியமித்த‌ பண்டிகளுக்கு விழாக்களுக்கு மாற்றாக இவன் எட்டாவது மாதம் 15 ஆம் தேதி பண்டிகையை நியமித்து ஆசரிக்க கட்டளையிட்டான்.

இப்படி கடவுள் நியமித்த எல்லா கற்பனைகளுக்கு மாற்றாகப் பண்டிகைகளுக்கு நாட்களை நியமித்து, ஆராதிப்பதற்கு மாற்று இடங்களைத் தெரிந்தெடுத்து, அதில் கன்றுக் குட்டிகளை வைத்து, லேவியர் அல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தித் தன்னுடைய ஜனங்கள் எருசலேம் நகருக்கு செல்லாதபடி தடுத்துவிட்டான். இஸ்ரவேலை ஆட்சி செய்த அனைத்து மன்னர்களும் இந்தப் பாவத்தை மக்கள் செய்வதை தடுக்கவில்லை. விக்கிரக தோப்புக்கள் அழிக்கவில்லை.
எருசலேம் நகருக்கு சென்று தேவனை ஆராதிக்க அனுமதிக்கவில்லை.
ஒரு போலியான யூத மார்க்கத்தை தன்னுடைய தேசத்தில் யெரொபெயாம் உருவாக்கினான்.
இவன் செய்த இந்தப் பாவம்தான் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமான இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் மூலம் இன்று நமக்குக் கடவுள் சொல்லும் பாடங்கள் என்ன?
சாத்தான் தேவனுடைய பிள்ளைகளை ஏமாற்றி போலிகளை மாற்று வழிகளை உருவாக்குவதில் வல்லவன்.
இன்றைக்கு கிறிஸ்தவத்தில் சாத்தானுடைய புதிய கண்டுபிடிப்புகள்
1. வேறொரு நற்செய்தி. Another Gospel
2. வேறொரு இயேசு கிறிஸ்து. Another Christ
3. ஒளியின் வேடத்தைத் தரித்து நிற்கும் சாத்தானின் ஊழியர்கள்.
ஒளியின் தூதர்கள்

4. வேறொரு ஆவி

படிக்க 2 கொரி 11 வது அதிகாரம்.

இன்றைக்கும் சபைகளில்
யெரோபெயாமின் ஆவிகள் வேலை செய்து கொண்டிருக்கிறது.
நான் வேதத்தில் தெளிவு பெற்று இருந்தால் மட்டுமே இந்தப் போலிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இருக்கின்ற கிறிஸ்தவத்தை பாதுகாக்க, தக்க வைத்துக் கொள்ள நமக்குத் தேவை வேதத்தைக் கலப்படம் இல்லாமல் போதிக்கக்கூடிய ஊழியர்களே.
தேவன் தேர்ந்தெடுக்க 12 கோத்திரங்களில் 10 கோத்திரங்கள் வழி விலகி ஒரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தி இறுதியில் கைதிகளாக அடிமைகளாக அசீரியா நாட்டிற்கு சென்றுவிட்டார்கள்.
உள்ள மீதமுள்ள ஒரு கோத்திரத்தைக் கொண்டு தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி அந்தக் கோத்திரத்திலிருந்து உலகத்தின் இரட்சகர் பிறந்து தமது திட்டத்தை நிறைவேற்றினார்.
பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிற அடிப்படையில் எந்த ஒரு கருத்தையும் நாம் சீர்தூக்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இதுவே யெரோபெயாம் வாழ்க்கை நமக்கும் உணர்த்தும் உச்சரிக்கை.