Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பலிகளை செலுத்துவதற்கான முக்கியமான நோக்கங்கள் மூன்று.
உங்கள் சிந்தனைக்கு:

இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு
சர்வாங்க தகனபலி, போஜனபலி, சமாதான பலி, பாவ நிவாரண பலி ,குற்ற நிவாரண பலி, பானபலி‌  ஆகிய இந்த ஆறு பலிகளை செலுத்தினார்கள்.


இதில்  முதல் நான்கு பலிகள் விருப்பப்பட்டு செய்ய வேண்டிய பலிகள் (voluntary).


கடைசி இரண்டு பலிகள்  நாம் தவறு செய்யும்போது கட்டாயமாகச் செய்ய வேண்டிய பலிகள் (compulsory).


இந்தப் பலிகள் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்ட காரியங்கள். 

இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காகப் பலியாகச் செலுத்தப்பட்ட காரியங்களுக்கு அவைகள் நிழலாக இருக்கிறது.‌


நாமும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கு ஏற்றப் பலிகளைச் செலுத்தும்படிக்கு‌ அழைக்கப்பட்டிருக்கிறோம்.
1 பேதுரு 2:5


இந்தப் பலிகளை செலுத்துவதற்கான முக்கியமான நோக்கங்கள் மூன்று.


"Commitment, communion and cleansing".W W.Wiersbe


சமர்ப்பணம்.

அவரோடு உறவாடுதல்.

பரிசுத்தமாகுதல்.


நம்மை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கவும், அவரோடு உறவாடுவதற்கும், நாம் பரிசுத்தமாகுவதற்கும்தான் ஆவிக்குரிய பலிகளை நாம் தேவனுக்கு செலுத்த வேண்டும்.


அது ஆராதனையாக இருந்தாலும் சரி, நம்முடைய துதிகளாக இருந்தாலும் சரி, ஊழியங்களுக்கு கொடுக்கிற காணிக்கையாக இருந்தாலும்‌ சரி ,அவைகள் மேற்கூறிய மூன்று நோக்கத்தை நம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றாவிட்டால் நாம் செலுத்துகிற ஆவிக்குரிய பலிகள் அர்த்தமற்றதாகிவிடும். 


இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆராதனைகளும், துதிகளும் ,வெறுமனே உற்சாகப்படுத்துவதற்காகவோ, entertainmentக்காகவோ

இருக்கக் கூடாது.


இந்த அடிப்படை சத்தியத்தை புரியாமல் ஆராதனை என்கிற பெயரில், துதி என்கிற பெயரில் நடைபெறுகின்ற காரியங்கள்  கர்த்தருடைய நாமத்தைப் புறஜாதிகள் மத்தியில் அவமானப்படுத்துவதாக உள்ளது. 

மிகப்பெரிய ஆவிக்குரிய நோக்கத்திற்காகத் தேவனுக்கு செலுத்த வேண்டிய ஆவிக்குரிய பலிகள் விளம்பரங்களாக மாறிவிட்டது. 

ஆலயங்கள் நாடக மன்றங்களாக ஆக்கப்பட்டுவிட்டது.மன மகிழ்ச்சி அரங்கங்களாக மாற்றப்பட்டுவிட்டது. (Recreation club)

விசுவாசிகள்‌ லேவியராகமம் புத்தகத்தை வெறுமனே சரித்திர  நிகழ்வுகளாகப் படிக்காமல் புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு பொருத்திப் பார்த்தால் நம்முடைய மனக்கண்கள் திறந்து பலிகளைப் பற்றி உள்ள ஒரு புதிய பார்வை நமக்குக் கிடைக்கும்.

தேவனுடைய வார்த்தையின் மூலம்  கிடைக்கக்கூடிய வெளிச்சம் மிகவும் உன்னதமானது . 

அவைகள் தரக்கூடிய ஆவிக்குரிய விடுதலை பெரியது.

அந்த விடுதலையை வேறு எந்த ஒரு காரியமும் நமக்குத் தராது.காது உள்ளவன் கேட்கக் கடவன்.

எசேக்கியேல் சண்முகவேல்