Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 19

உங்கள் சிந்தனைக்கு:

2 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 19

யூதர்களின் முதல் அரசன் சவுல்.
இவன் அரசாண்ட காலத்தில் எல்லா யூத இனக் குழுக்களும் (Tribes)ஒன்றாக இணையவில்லை‌. எல்லா கோத்திரங்களையும் இணைத்து ஒரு ஒருமித்த யூதர்களுக்கான அரசை உருவாக்கியவன் தாவீது.
அதை வலுப்படுத்தியவன் சாலமோன்.
அதற்குப் பிறகு அவனுடைய மகன்
ரெகொபெயாம் அரசனானன்‌.
அவன் முதியோர்களின் ஆலோசனையைப் புறந்தள்ளிவிட்டு வாலிபர்களின் பேச்சைக் கேட்டு யூத மக்கள்மீது சாலமோன் விதித்த வரி சுமையைக் குறைக்க மறுத்துவிட்டான்.
அதன் விளைவாக நடந்த சம்பவங்களால்
ஒருமைப்பட்ட யூத தேசம் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிந்தது.
யெரொபெயாம் தலைமையில் வடக்கில் உள்ள 10 கோத்திரங்கள் இணைந்து ஒரு அரசாக மாறியது. இது இஸ்ரவேல் தேசம் என்றும் எப்பிராயீம் என்றும் அழைக்கப்பட்டது.

இந்த இஸ்ரவேல் தேசம் அசீரியா மன்னனால் கைப்பற்றப்படுகிற காலம்வரை இதை ஆண்ட அனைத்து அரசர்களும் தேவனுடைய வழியில் நடக்கவில்லை.
அசீரியா அரசால் இஸ்ரவேல் தேசம் கைப்பற்றப்பட்ட பிறகு ஒரு தேசமாகப் பின்னால் உருவாக முடியவில்லை.
இதனை ஆண்ட கடைசி அரசன் ஓசெயா. இவனுடைய ஆட்சி காலத்தில் தான் இஸ்ரவேல் தேசம்
அசீரிய அரசனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்த நிகழ்வு கிமு723 அல்லது 722 ல் நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது

பலர் அந்தத் தேசத்திற்கு கடத்தப்பட்டார்கள்.
இந்த மன்னன் தன்னுடைய ஜனங்களை இஸ்ரவேல் தேசத்தில் குடி அமர்த்தி இஸ்ரேல் மக்களோடு கலக்கச் செய்து இஸ்ரவேல் மக்கள் சமாரியார்களாக‌ மாறினார்கள்.
அதற்குப் பிறகு இஸ்ரவேல் அல்லது எப்பிராயிம் ஒரு தேசமாக உலக வரைபடத்தில் காணப்படவில்லை.
இறுதிக்காலத்தில் வாழ்ந்தவன் தான் ஓசியா தீர்க்கதரிசி.
இவன் இஸ்ரவேலை குறித்து எச்சரித்த அனைத்து காரியங்களும் இவனுடைய வாழ்நாளிலேயே அந்தத் தேசத்திற்கு நடந்தது.
கடைசியாகத் தேவன் இந்தத் தேசத்தைத் தண்டிப்பதற்கு முன்பாகத் தேசத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை (Charge sheet)இந்தப் புத்தகத்தில் 17வது அதிகாரத்தில் பார்க்கலாம்.

கடவுள் இஸ்ரவேல் ஜனங்கள்மீது வைத்த குற்றச்சாட்டுகளில் சில.


1.தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகள் யாவையும்விட்டு, தங்களுக்கு வார்க்கப்பட்ட உலோகத்தால் இரண்டு கன்றுக்குட்டிகளின் உருவத்தில் விக்கிரகங்களையும், அசேரா விக்கிரக தூணையும் செய்தார்கள்.

2 .எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் வணங்கி, பாகாலையும் வழிபட்டார்கள்

3.தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில் பலியிட்டார்கள்.

4. குறிகேட்டு சகுனம் பார்த்தல், மாயவித்தை முதலிய வழக்கங்களில் ஈடுபட்டார்கள்.

5.ஒவ்வொரு உயர்ந்த குன்றுகளிலும், சட்ட விசாலமான ஒவ்வொரு மரத்தின் கீழும் புனித கற்களையும், அசேரா விக்கிரக தூண்களையும் நாட்டினார்கள்.

6. யெகோவா தங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட நாட்டினர் செய்ததுபோல் ஒவ்வொரு வழிபாட்டு மேடைகளிலும் தூபங்காட்டினார்கள். கொடிய காரியங்களையும் செய்தார்கள்.

இந்தப் பாவங்களை எல்லாம் அவர்கள் பல நூறு ஆண்டுகளாகச் செய்தாலும் அவர்களை மன்னித்து, மன்னித்து. கடவுள் அவர்களை அரவணைத்தார்.

ஆனாலும் அந்த ஜனங்கள் தேவனுடைய இரக்கத்தையும், மன்னிப்பையும் அற்பமாகக் கருதி திரும்பத் திரும்பக் கர்த்தரை மறுதலித்தார்கள்.

கர்த்தர் தெரிந்தெடுத்த 12 கோத்திரங்களில் பத்து கோத்திரங்கள் உலக மக்களோடு ஐக்கியமாகி விட்டார்கள்.
யூத கோத்திரம் மட்டும் கடவுள் அவர்களோடு உடன்படிக்கை செய்தபடியால் அந்தத் தேசம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டும் அவர்கள் மறுபடியுமாகத் தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்து எருசலேம் தேவாலயத்தைப் புதுப்பித்துத் தங்கள் தேசத்தைப் பாதுகாத்தார்கள்.

இறுதியில் அந்த வம்சத்திலிருந்து உலகத்தில் இரட்சகத் தோன்றினார்.
இறுதியில் அவர்களும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அடைந்தபடியினால் கிபி 70 ல் எருசலேம் கைப்பற்றப்பட்டு அவர்கள் உலகெங்கிலும் சிதறடிக்கப்பட்டார்கள். ஆனாலும் யூத கோத்திரம் மற்ற இனங்களோடு கலவாமல் இன்றைக்கும் தனித்துவமாகக் காணப்படுகிறது.

இஸ்ரவேல் தேசத்தின் வரலாறு அவர்களுக்கு மட்டுமல்ல உடன்படிக்கையில் மக்களாகிய நமக்கும் ஒரு மிகப்பெரிய பாடம்.
இன்றைக்கும் நாம் நிர்மூலமாகாமல் இருப்பது அவர் நம்மை முன் குறித்து நம்மோடு செய்த உடன்படிக்கை நிமித்தமாக நிலைத்து நிற்கிறோம்.
இன்றைக்கும் இஸ்ரவேல் மக்கள் செய்த பாவங்கள் மறுரூபத்தில் வெவ்வேறு முறைகளில் கிறிஸ்தவத்தில் ஆதிக்கம் செலுத்துவதை நாம் பார்க்க முடிகிறது.
Spiritual adultery or apostacy
எல்லா பாவங்களையும் விட மிகக் கொடிய ஒரு பாவம். நம்முடைய அனுதின ஜெப வாழ்க்கையின் மூலமாகவும், வேத தியானத்தின் மூலமாகவும் மட்டுமே இந்த மாதிரி கன்னிகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். பழைய ஏற்பாட்டில் உள்ள வரலாற்று புத்தகங்களை வெறும் நிகழ்வுகளாகப் படிக்காமல் அவைகள் நமக்கு உணர்த்தும் பாடங்களை உணர்ந்து படித்தால் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் நிச்சயமாகத் திறக்கப்படும்.

One thing we learn from history is that we don't learn from history.

வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், நாம் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே.
Ezekiel shanmugavel