Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 20.

2 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 20.

உலகத்தை நோக்கி ஓடிய தேவனுடைய பிள்ளைகள்.
நமது ஆண்டவர் சர்வ வல்லமை உள்ளவர்.
தம்மை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடாதவர்.
சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நம்மை ஆதரிக்க வல்லவர்.
நம்முடைய வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா காரியங்களும் அவருடைய அனுமதி இல்லாமல் நடக்காது. இந்த உலகத்தில் எல்லா நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்.
He is sufficient for all times.

இந்தச் சிந்தனை, கடவுளைப் பற்றிய புரிதல் ஒவ்வொரு விசுவாசிக்கும் அவசியம். ஆபத்துக்காலத்தில் கர்த்தரை நம்பாமல் உலகத்தை நோக்கி ஓடிய ஒரு சில ஆண்டவருடைய பிள்ளைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆபிரகாம் கானானில் பஞ்சம் ஏற்பட்டபோது எகிப்தை நோக்கி ஓடினான்‌. அங்கேயும் கடவுளை நம்பாமல் சாராளின் அழகை நம்பினான்.
விளைவு ஆகாரை இணைத்துக் கொண்டு ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தான் ஆதி12:.10-16

எகிப்தில் ஆண்டவர் நடத்தியஅதிசயங்களையும் அற்புதங்களையும் கண்ட பிறகும் ஆண்டவரை நம்பாமல் கானானை கைப்பற்ற முடியாது என்று கலகம் செய்து எகிப்துக்கு தப்ப முயன்ற லட்சக்கணக்கான யூதர்கள் வனாந்தரத்தில் மடிந்தார்கள்.
.எண்ணா 14:1-4.

தேவனை நம்பாமல் எகிப்தை நம்பி ஓடிபவர்களை குறித்து ஏசையா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை ஏசையா
தீர்க்கதரிசன புத்தகம் 30 மற்றும் 31 அதிகாரங்களில் நாம் தெளிவாக பார்க்கலாம். அதில் ஒரு சில வார்த்தைகள்.

"என்னிடம் அறிவுரை கேளாமல்
எகிப்திற்குப் போகிறார்கள்.
அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின் கீழ் உதவிகோரி,
எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள்.
ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்;
எகிப்தின் நிழல்
உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும்.
ஏசாயா 30:2-3


உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!
ஆனால் எகிப்தியர் மனிதர்களேயன்றி இறைவன் அல்ல;
அவர்களின் குதிரைகள் மாமிசமேயன்றி ஆவியல்ல.
யெகோவா தமது கரத்தை நீட்டும்போது,
உதவிசெய்கிறவன் இடறுவான்.
உதவி பெறுவோனும் விழுவான்;
இருவரும் ஒன்றாய் அழிவார்கள்.
ஏசாயா 31:3

அதுபோல் இஸ்ரவேல் தேசத்தின் கடைசி அரசனான ஓசெயா கடவுளை நம்பாமல் எகிப்தை நம்பினான் .
விளைவு தன்
இஸ்ரேல் தேசத்தை
அசீரிய அரசன் சல்மனாசாரிடம் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அந்தத் தேசம் பிறகு திரும்ப எழும்பவில்லை.

நாமும் நம்முடைய வாழ்க்கையில் நாம் கடவுளை அனுபவபூர்வமாக நம்ப வேண்டும். அவர் நம்முடைய வாழ்க்கையில் உயிரோடு இருக்கிறார் என்று உணர வேண்டும். என்னதான் இறையில் கோட்பாடுகளைப் படித்தாலும் அவற்றை நம்முடைய வாழ்க்கையில் அனுபவகங்களாக மாற்றாவிட்டால் நம்முடைய இறையியல்
கல்வியால் ஒரு பயனும் இல்லை. அனுபவப் பூர்வமாக நாம் இறைவனை அறிந்து கொள்ளாவிட்டால் இறையியல் படித்த சில போதகர்" நான் ஏன் கிறிஸ்தவத்தை விட்டு விலகினேன் "என்று சொல்லக்கூடிய நிலைமை தான் ஏற்படும்.
எனவே நாம் கற்ற இறையியல் கல்வியை அனுபவமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
எக்காலத்திலும் கடவுள் நமக்குப் போதுமானவர் என்று உணர வேண்டும்.