இரண்டு அரசர்கள் புத்தகம். வேத பாடம் 22
உங்கள் சிந்தனைக்கு:
இரண்டு அரசர்கள் புத்தகம்.
வேத பாடம் 22
கடவுளுடைய தீர்மானத்தை மாற்றிய மிகப்பெரிய சீர்திருத்தவாதியின் விண்ணப்பம்.
பரிசுத்த வேதாகமத்தில் கடவுளிடம் தன்னுடைய டி ஆயிசு நாட்களை அதிகரிக்க கேட்டு அதற்கான பதிலையும் பெற்றுக் கொண்ட ஒரே மனிதன் எசேக்கிய ராஜா மட்டுமே.
அவன் 29 வயதில் அரசன் ஆனார். முப்பத்தி ஒன்பதாவது வயதில் ஆண்டவர் அவனுக்கு மரணத்தை முன் குறித்தார்.
அவன் இருந்த முதல் 10 ஆண்டுகளில் அவன் செய்த ஆலயத்துக்கு அடுத்த சீர்திருத்த காரியங்களைப் போல வேதத்தில் வேறு எந்த ஒரு அரசனும் செய்ததில்லை.
புதிய ஏற்பாட்டு சபை வரலாற்றில் மார்ட்டின் லூதருக்கு முன்னோடியாக இருந்தவர் எசேக்கியே ராஜா என்றால் அது மிகையாகாது.
அவர் முதல் 10 ஆண்டுகளில் செய்த சீர்திருத்தங்களை இப்பொழுது பார்க்கலாம்
1ஆம் ஆண்டு
ஆலய கதவுகளைத் திறந்து சுத்திகரித்தார் (2 நாளாகமம் 29:3)
உயர்ந்த இடங்கள், அசேரா கம்பங்கள், விக்கிரகங்கள் ஆகியவற்றை ஒழித்தார்
மோசே செய்த பித்தளா பாம்பு (நெகுஸ்தான்) விக்கிரகமாக வணங்கப்பட்டதால் அதை உடைத்தார் (2 இராஜாக்கள் 18:4)
2ஆம் ஆண்டு
ஆலயத்தில் பலிகள், ஆராதனை, சங்கீதங்களை மீண்டும் ஏற்படுத்தினார் (2 நாளாகமம் 29:20–36)
ஆசாரியர், லேவியர் ஊழியங்களை ஒழுங்குபடுத்தினார்; அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தினார் (2 நாளாகமம் 31:2–10)
3ஆம் ஆண்டு
நீண்ட காலமாக நடத்தப்படாத பெரிய பாஸ்கா விழாவை யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்களை அழைத்துக் கொண்டாடினார் (2 நாளாகமம் 30)
4ஆம் ஆண்டு
பாஸ்கா முடிந்ததும், யூதா மற்றும் இஸ்ரவேல் முழுவதும் இருந்த விக்கிரகங்களையும், அசேரா கம்பங்களையும், உயர்ந்த இடங்களையும் முற்றிலும் இடித்துத் தள்ளினார் (2 நாளாகமம் 31:1)
இதனால், எசேக்கியா ராஜாவின் ஆரம்ப 10 ஆண்டுகள் முழுவதும் ஆவிக்குரிய சீர்திருத்தம், ஆலய ஆராதனையின் மீட்பு, விக்கிரக ஒழிப்பு ஆகியவற்றிலேயே சென்றன.
தேவன் முன் குறித்த எருசலேம் நகரையும் ஆலயத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை
திரும்பவும் இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் கொண்டு வந்தார்.
இது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று.
ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்ந்தான் என்பதல்ல முக்கியம்.
வாழ்ந்த காலத்தில் எவ்வளவு சாதித்தான் என்பதுதான் முக்கியம்.
அதை எசேக்கியா ராஜா வாழ்நாளில் நிரூபித்தார்.
அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் அவனைப் போல் ஒருவனும் இருந்ததில்லை.
2 இராஜாக்கள் 18:5
இந்த வார்த்தையில்
தாவீது சாலமோன் யோசபாத் யோசியாவும் அடங்கும்.
யோசிய அரசன் பல நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவனிலும் எசேக்கியா ராஜா சீர்திருத்தங்களைச் செய்வதில் சிறந்து விளங்கினார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அதனால்தான் சொற்ப வயதிலேயே தான் எடுத்துக் கொள்ளப் போற அந்தக் காரியம் அவனுக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது.
அவன் சுகவீனமாக இருந்தபோது அவன் பிழைக்கமாட்டான் என்று ஏசையா தீர்க்கதரிசி மூலமாக உரைக்கப்பட்டபொழுது
அவர் கடவுளை நோக்கி ஏறெடுக்க ஜெபம் முக்கியமானது
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
2 இராஜாக்கள் 20:3.
இந்த விண்ணப்பத்தைக் கடவுளால் நிராகரிக்க முடியவில்லை தன்னுடைய தீர்மானத்தையே மாற்றினார். வேதத்தில் ஒரு சில இடங்களில் தான் எப்படி கடவுள் தன்னுடைய தீர்மானத்தை மாற்றியதாகப் பார்க்கலாம் அதில் ஒன்றுதான் இது.
அவருடைய முதல் பத்து ஆண்டுகள் சபைக்காகவும் ஆலயத்திற்காகவும் ஆலய சீர்திருத்தத்துக்காகவும்
வாழ்நாள் என்பதை கர்த்தர் நினைவு கூர்ந்து அவனுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
இன்றைக்கு சபைகளில் காணப்படுகின்ற சீர்கேடுகள், அழுக்குகள், குப்பைகள், உபதேச கோளாறுகள் இவைகளை அகற்றி சபையைச் சீர்படுத்தக்கூடிய தலைவர்கள் தேவை. அந்தத் தலைவர்கள் வைராக்கியம் உள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்குச் சபையின் சீர்திருத்தம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தி அவர்களை எசேக்கியா ராஜாக்களாக, மார்டின் லூத்தர்களாக மாற்றுவது இன்றைய காலகட்டத்தின் அவசியமாக இருக்கிறது.
சபையைச் சீர்திருத்த வேண்டியது மிக மிக அவசியம். அதைப் போதிக்க வேண்டியது அதைவிட அவசியம். அப்படி இல்லாவிட்டால் சபைகள் கால வெள்ளத்தில் உயிரோட்டத்தோடு இருக்க வேண்டிய சபைகள் வெறுமனே எந்திரங்களாக மாறிவிடும்.
எசேக்கியேல் சண்முகவேல்