Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 23
உங்கள் சிந்தனைக்கு.

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 23

சாலொமோன் ராஜாவின் மரணத்திற்கு பின் (கி.மு. 931), அந்த ராஜ்யம் இரண்டு பிரிவுகளாக உடைந்தது.

வடக்கே உள்ள இஸ்ரவேல் ராஜ்யம் 10 கோத்திரங்களை உள்ளடக்கியது

தெற்கே யூதா ராஜ்யம் யூதா மற்றும்பென்யாமீன் கோத்திரங்களைக் கொண்டது.

இஸ்ரவேல் ராஜ்யம் சுமார் கி.மு. 931 முதல் கி.மு. 722 வரை நீடித்தது.
கி.மு. 722-ல் அசீரீயர்கள் (Assyrians) வந்து சமாரியாவை அழித்து, இஸ்ரவேல் ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
இதனுடைய ஆயுட்காலம் 209 ஆண்டுகள் மட்டுமே.
ஆனால்
யூதா ராஜ்யம் கி.மு. 931 முதல் கி.மு. 586 வரை இருந்தது.

கி.மு. 586-ல் பாபிலோனியர்கள் (Nebuchadnezzar – பாபிலோன் மன்னன்) எருசலேமைக் கைப்பற்றி, ஆலயத்தை இடித்து, மக்களைச் சிறை கொண்டுசென்றார்கள். என்னுடைய ஆயுள் காலம் சுமார் 345 ஆண்டுகள்.

இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட அத்தனை அரசர்களும் ஒருவர் கூட விடாமல் ஆண்டவரை கடவுளை விட்டுப் பின்வாங்கிப் பாகால்களையும் சிலைகளை வழிபட்டார்கள்.

இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட கடைசி மன்னன்
ஏலாவின் மகன் ஓசெயா‌
இவனுடைய ஆட்சி காலத்தில் அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்குச் சென்று, அதனை முற்றுகையிட்டான். மூன்றாம் ஆண்டிலே, சமாரியா பிடிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் யூதா யூதா தேசத்தை ஆண்டவன் எசேக்கியா ராஜா.

அவனுக்குப் பின் அசீரீயா தேசத்தை ஆண்ட‌ சனகெரிப் யூத‌தேசத்தை கைப்பற்ற முயற்சி செய்தான்.
எசேக்கியா அரசனின் ஆட்சி காலத்தில்
அசீரியா ராஜ்ஜியம் பலமுள்ள அரசாங்கமாகக் காணப்பட்டது. அப்பொழுது அதே வேளையில் பாபிலோனிய தேசம் வளர்ந்து வருகிற அரசாங்கமாக இருந்தது.

சனகெரிப் அரசன் பெரும்படையோடு எருசலேமை
முற்றிகையிட்டான். அப்பொழுது எசேக்கிய ராஜா‌ மிகவும் பயந்து கடவுளுக்குத் தனனை ஒப்புக்கொடுத்தான்.
எனவே கடவுள் இஸ்ரவேல் தேசத்தை எதிரியிடம் ஒப்புக்கொடுத்தது போல
யூதா தேசத்தை அசீரியா‌ அரசாங்கத்திடம் ஒப்புக் கொடுக்கவில்லை.
ஏறக்குறைய 136 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நேபுகாத்நேசர் ஆட்சி காலத்தில் தான் கடவுள் யூகா தேசத்தைப் பாபிலோனியர்களிடம் ஒப்புக்கொடுத்தார்.
காரணம் யூதா தேசத்தை ஆண்ட பெரும்பாலான மன்னர்கள் கடவுளை ஓரளவுக்கு உத்தமமாகப் பின்பற்றினார்கள்.
ஆனால்கடைசியாக யூதாவைஆண்ட 4 மன்னர்கள் தொடர்ச்சியாகக் கடவுளை விட்டு வழி விலகிப் போன காரணத்தினால் வேறு வழி இல்லாமல் அந்தத் தேசத்தையும் பாபிலோனியர்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

நாம் எந்த அளவுக்குக் கடவுளுக்கு உண்மையாக வாழ்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை செழிக்கும்.

இஸ்ரவேல் தேசத்தை எதிரிகளிடம் ஒப்புக் கொடுப்பதற்கு ஒரு நேரத்தைக் கடவுள் முன் குறித்து இருந்தார்.
அதேபோல் யூதா தேசத்தையும் பாபிலோனிய அரசாங்கத்திடம் ஒப்புக் கொடுப்பதற்கு ஒரு காலத்தைத் தேவன் முடிவு செய்திருந்தார்.
கடவுள் நினைத்திருந்தால் அசீரிய அரசாங்கத்திடமே யூத அரசாங்கத்தை ஒப்புக்கொடுத்திருக்கலாம்.
ஆனால் எசேக்கியா ராஜாவும் அவனுக்குப் பின்னால் வந்த யோசியா‌ ராஜாவும் தேவனுக்கு உத்தமமாக நடந்தபடியினால் அந்த அழிவைத் தேவன் சிறிது காலம் தள்ளிப்போட்டார்.
இஸ்ரவேல் தேசம், யூதா தேசம் இவர்களின் வரலாற்றைப் படிக்கும்பொழுது பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
கடவுள் உத்தமனுக்கு உத்தமனாக இருக்கிறார்.
பின் மாறிப் போனவர்களை எந்த நேரத்தில், யாரிடம் கையளிக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்.
நம்மையும் கூட அவர் முன்குறிக்கப்பட்ட நேரம் வரும் வரைக்கும் நம் மீது யாரும் கைபோட முடியாது
யூத தேசத்தை, இஸ்ரவேல் தேசத்தைக் கர்த்தர் எதிரிகளிடம் ஒப்புக்கொடுத்த காரியத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.


யூத ஜனங்கள்
பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தால் கர்த்தருடைய வழியில் நடந்திருப்பார்கள். யூத தேசம் பாபிலோனியர்களின் சிறையிருப்பை தவிர்த்து இருக்க முடியும்.

"வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே நாம் வரலாறு மூலமாகக் கற்றுக் கொள்ளும் பாடம்" என்கிற கூற்று உண்மை என்பதை இதன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

எசேக்கிய சண்முகவேல்