Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம். வேத பாடம் 25.
உங்கள் சிந்தனைக்கு:

2 அரசர்கள் புத்தகம்.
வேத பாடம் 25.

எப்படிப்பட்ட பாவியையும் கடவுள் மன்னிக்கிறார் என்பதற்கு மனசேயின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
பரிசுத்த வேதாகமத்தில் நமக்குப் புரியாத பல புதிர்கள் உண்டு.
அதில் ஒன்றுதான் பழைய ஏற்பாட்டின் மிகச்சிறந்த சீர்திருத்தவாதியான எசேக்கியாவுக்கு யூத  தேசத்தை ஆண்ட மன்னர்களில் கடவுளுக்கும் தேவனுடைய ஆலயத்திற்கும் அதிகமான பாதிப்புகளைச் செய்தவன்  அவனுடைய மகன் மனசே என்பதுதான்‌

மனசே செய்த பாவங்கள் – பட்டியல் :


1.உயர்ந்த இடங்களை மீண்டும் கட்டினான் – அவன் தந்தை எசேக்கியா இடித்துவிட்ட வழிபாட்டு மேடைகளை  (2 இராஜா 21:3).


2.  கானான் தேசத் தேவனான பாகால்க்குப் பலிபீடங்கள் கட்டினான் (2 இராஜா 21:3).

3.அசேரா விக்கிரக தூணையும் அமைத்தான்.
  (2 இராஜா 21:3).


4.  சூரியன், சந்திரன், நட்சத்திர கூட்டங்களை வணங்கினான் (2 இராஜா 21:3,5).

5.தேவன்  தேர்ந்தெடுத்திருந்த யெருசலேம் ஆலயத்தின் உள்ளேயே பலிபீடங்களை அமைத்து விக்கிரகங்களுக்குப் பலி செய்தான் (2 இராஜா 21:4–5).


6. தன் சொந்த மகனையே நெருப்பில் பலியிட்டு, மந்திரவித்தை, பில்லிசூனியம் ஆகியவற்றைச் செய்து, ஜோசியக்காரரிடமும், குறிசொல்கிறவர்களிடமும் ஆலோசனை பெற்றான். யெகோவாவின் பார்வையில் அதிக தீமையானவற்றைச் செய்து அவருக்குக் கோபமூட்டினான்.


மனாசே தான் செய்த செதுக்கப்பட்ட அசேரா விக்கிரக தூணைக் கொண்டுபோய் ஆலயத்தில் வைத்தான்




8மனாசே தான் செய்த செதுக்கப்பட்ட அசேரா விக்கிரக தூணைக் கொண்டுபோய் ஆலயத்தில் வைத்தான். இந்த ஆலயத்தைப் பற்றியே யெகோவா தாவீதுக்கும் அவன் மகன் சாலொமோனுக்கும், “இஸ்ரயேலில் உள்ள எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், அதில் உள்ள இந்த ஆலயத்திலும் என்னுடைய பெயரை என்றென்றுமாக வைப்பேன் என்று சொல்லியிருந்தார்.”
2 இராஜாக்கள் 21:7




9. தான் பாவம் செய்ததோடு, யூதாவையும் இஸ்ரவேலையும் அந்நிய ஜாதிகளைக் காட்டிலும் அதிகமான தீமைகளில் நடக்கச் செய்தான்

10….கர்த்தருடைய குரலைக் கேளாமலிருந்தான் – கர்த்தர் தீர்க்கதரிசிகளின் மூலம் எச்சரித்தபோதும் மனசே அதை நிராகரித்தான் (2 நாளா 33:10).

இவனைப் போல் யூத ஜனங்களையும் இஸ்ரவேல் ஜனங்களையும் தவறாக வழி நடத்தியவன் வேறு யாரும் கிடையாது. அதனால்தான் அவனை  யெகோவா அசீரிய அரசனின் இராணுவ தளபதிகளை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவந்தார். அவர்கள் மனாசேயை கைதியாக்கி, அவனுடைய மூக்கில் கொக்கியை மாட்டி, வெண்கல சங்கிலியால் அவனைக் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
2 நாளாகமம் 33:11.

அவன் தனது கடும் துன்பத்தில் தனது இறைவனாகிய யெகோவாவிடத்தில் தயவைத் தேடினான். தன் முற்பிதாக்களின் இறைவனுக்கு முன்பாக அவன் தன்னைத் தாழ்த்தினான்.
2 நாளாகமம் 33:12
பின்பு அவன் கடவுளை அறிந்தான்.
இந்த நிகழ்வுகள்மூலம் கடவுள் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
1.எந்தப் பாவியும்  கடவுளுக்குத் தூரமானவன் அல்ல.

2.உண்மையாக மனம் திரும்புகிற யாரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.
3.உண்மையான மனம் திரும்புதல் ஒன்றே ஆண்டவரை நெருங்கக்கூடிய ஒரே வழி.
4. எந்த ஒரு பாவியும் அவன் மரிக்கும் வரை அவன் மனம் திரும்புவதற்கான கதவுகள் திறந்தே இருக்கும்.
5. ஒரு காரியத்தின் ஆரம்பத்தை விட முடிவு மிக முக்கியம்.
ஆவிக்குறி ஆரம்பம் பிரகாசமாக இருந்தும் இறுதியில் அவர்கள் பலனற்று போனால் ஆரம்ப நன்மைகளினால் ஒரு பயனும் இல்லை.
6. ஆவிக்குரிய பெற்றோர்களுக்கு மனசே போன்ற துன்மார்க்ககள் பிறக்கமாட்டார் என்று சொல்ல முடியாது.
7. ஆனாலும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்காக வடித்த கண்ணீர், உபவாச ஜெபங்கள், அர்ப்பணிப்பு இவற்றை மறந்து விடுவதற்கு கடவுள் அநீதி உள்ளவர் அல்ல.
எசேக்கியேல் சண்முகவேல்