Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 24
உங்கள் சிந்தனைக்கு
2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 24

எசேக்கியா நோயுற்றபோது கர்த்தர் அவருக்கு  வாழ்நாட்களை 15 ஆண்டுகள்  கூட்டினார்.

2 இராஜாக்கள் 21:1; 2
நாளாகமம் 33:1

மனாசே பன்னிரண்டு வயதில் ராஜாவானான்.
2 இராஜாக்கள் 18:2 .

எசேக்கியா 25 வயதில் அரசனானார்.
29 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஆகவே அவர் 54 வயதில் இறந்தார்.

மனாசே, எசேக்கியா இறந்தபோது 12 வயது என்பதால், மனாசே பிறந்தது எசேக்கியாவின் 42வது வயதில் என்று பொதுவாகக் கருதுவதுண்டு.
இதன் அடிப்படையில் அனேகருடைய கருத்து என்னவென்றால் எசேக்கியா ராஜாவுக்கு 15 ஆண்டுகள் ஆண்டவர் வாழ்நாள்களை கூட்டிக் கொடுத்தபிறகு தான் மனசே பிறந்தான் என்று சொல்கிறார்கள்.
பலரது கேள்வி என்னவென்றால் எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்களைக் கடவுள் கூட்டி இருக்காவிட்டால் மனாசே பிறந்திருக்க மாட்டான். இவ்வளவு கொடுமையான மன்னனாக வாழ்ந்திருக்க மாட்டான்.
‌ எனவே எசேக்கியா ராஜா வாழ்நாளை கூட்டி தருமாறு கடவுளிடம் கேட்டது தவறு என்று சொல்வார்கள் ‌. அவர்கள் சொல்கிற கருப்பொருளை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் இறுதியில் மனசே மனம்திரும்பித் தன் ஓட்டத்தை நல்லபடியாகத்தான் முடித்தான்‌.

"அவன் அவரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, யெகோவா அவனுடைய வேண்டுதலினால் மனமிரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டார். அவர் அவனைத் திரும்பவும் எருசலேமுக்கும் அவனுடைய அரசுக்கும் கொண்டுவந்தார். அதன்பின்பு மனாசே யெகோவாவே இறைவன் என அறிந்தான்."
2 நாளாகமம் 33:13



எனவே காரியத்தின் முடிவை வைத்துதான்     கருத்துக்கள் சொல்லுமுடியும்.

அதன்படி எசேக்கியா ராஜா கடவுளிடம் தன் வாழ்நாள்களை அதிகரிக்க விண்ணப்பம் பண்ணியதில் எந்தத் தவறும் இல்லை‌.
ஆரம்பத்தில் நன்றாக ஓடிய சவுலும் சாலமோனும் இறுதி நாட்களில் கர்த்தரை விட்டுத் தூரமாக வாழ்க்கை வாழ்ந்து மரித்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே எசேக்கியா ராஜா கடவுளிடம் கேட்டுக் கொண்டதில் தவறும் இல்லை. அவன் கேட்டுக்கொண்டதை கடவுள் கொடுத்ததிலும் தவறு இல்லை.
கடவுளுடைய தீர்மானங்களைச் செயல்பாடுகளைக் குறை சொல்ல நாம் முயலக் கூடாது.
இது ஒரு பக்கம்‌.

மனசே எப்பொழுது பிறந்தான் என்பதை பற்றி இன்னொரு பார்வையும் இருக்கிறது.
அதையும் இங்குப் பதிவிடுகிறேன்.
இதை ஒரு சில வேத அறிஞர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்று கால் அட்டவணையின் படி


715 → எசேக்கியா ஆட்சி தொடக்கம்

கிமு 709 → மனாசே பிறப்பு

கிமு 701 → எசேக்கியா நோய் & சுகமடைதல் (15 ஆண்டுகள் கூட்டப்பட்டது)

கிமு 697 → மனாசே 12 வயதில் ராஜா ஆனார்

கிமு 686 → எசேக்கியா இறப்பு

கிமு 642 → மனாசே ஆட்சி முடிவு.

185000 அசீரிய வீரர்கள்
படுகொலை செய்யப்பட்டபோது மனசேயின் வயது 8  இருக்கும் என்று வேத அறிஞர்  வியர்ஸ்பி‌ குறிப்பிடுகிறார்.

மனாசே  12 வயது முதல் 22 வயது வரை coregent  தன் தகப்பனுடன் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.


எப்படி பார்த்தாலும் எசேக்கியா ராஜா  ஆயுசு நாட்களைக் கூட்டி கேட்டதில் தவறும் இல்லை‌.
கடவுள் அவனுக்குப் பதில் கொடுத்ததும் தவறு இல்லை.
தேவனுடைய இறையாண்மை எப்பொழுதுமே சரியானது, கேள்வி கேட்க முடியாதது, எல்லாவற்றிற்கும் மேலாக மதிக்கத்தக்கது.