2 அரசர்கள் புத்தகம்.வேத பாடம் 26 எசேக்கியா ராஜாவின் மறுபக்கம்.
உங்கள் சிந்தனைக்கு.
2 அரசர்கள் புத்தகம்.வேத பாடம் 26
எசேக்கியா ராஜாவின் மறுபக்கம்.
எசேக்கியா ராஜா பழைய ஏற்பாட்டில் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தவாதி.
He was a great reformer in the Old Testament period.
பல சீர்திருத்தங்களை யூத மதத்திலும், ஆலயத்திலும் செய்தான்
முக்கியமாக லய கதவுகளைத் திறந்து சுத்திகரித்தான் (2 நாளாகமம் 29:3)
உயர்ந்த இடங்கள், அசேரா கம்பங்கள், விக்கிரகங்கள் ஆகியவற்றை ஒழித்தார்.
மோசே கால முதல் வழிபட்டு வந்தமோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர்.
இந்தப் பழக்கம் 700 ஆண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் மத்தியில் காணப்பட்டது. இதுபோல் பல சீர்திருத்தங்களைச் செய்தான்.
அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப் போல் ஒருவனும் இருந்ததில்லை
ஆனாலும் அவனுடைய வாழ்க்கையில் சில கருப்பு பக்கங்களும் காணப்படுகின்றன.
வேதம் எப்பொழுதுமே எவ்வளவு பெரிய ஆவிக்குரிய மனிதனாக இருந்தாலும், கடவுளைப் பின்பற்ற நபராக இருந்தாலும் அவர்களுடைய சிறப்பான காரியங்களையும் அதே போல் அவர்களது பலவீனமான பகுதிகளையும் இணைத்துக் குறிப்பிடுகின்றது.
எந்த ஒரு நபரது குணங்களை ஒருதலை பச்சமாகக் குறிப்பிட்டது கிடையாது.
. எந்த ஒரு தனிப்பட்ட ஆவிக்குரிய மனிதரையும் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து எழுதப்பட்டு கிடையாது.
ஆபிரகாமின் விசுவாச வீழ்ச்சி, மோசேயின் பதட்டம், யோசுவாவின் தோல்வி, தாவீதின் பலவீனம், சாலமோனின் பின் மாற்றம், பவுல் பர்ணபா இவர்களின் கடுமையான வாக்குவாதம், பேதுருவின் மறுதலிப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்தையும் தெளிவாக வேதம் விளக்கி இருக்கிறது. காரணம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் அளவுக்கு மீறிப் புகழக் கூடாது என்பதற்காகத் தான்.
அதுபோல் தான் எசேக்கிய ராஜா சிறந்த சீர்திருத்தவாதியாக இருந்தாலும் கடவுள்மேல் அதிகமான நம்பிக்கை வைத்திருந்தாலும் அவனுடைய மறுபக்கத்தையும் வேறு குறிப்பிடுகிறது.
அவனது ஆட்சி காலத்தில் அசீரியா அரசன் சனகெரிப், யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களையெல்லாம் தாக்கிக் கைப்பற்றினான்.2 இராஜாக்கள் 18:13.
அப்பொழுது எசேக்கியா ராஜா கர்த்தரை நம்பாமல் அவனை எதிர்த்துப் போரிடாமல் அவனிடம் சமரசம் செய்து வந்தான்
அதற்குக் கைமாறாக அசீரிய அரசன் எசேக்கியாவிடம் முந்நூறு தாலந்து வெள்ளியையும், முப்பது தாலந்து தங்கத்தையும் தனக்காகப் பெற்றுக்கொண்டான்.
அதுமட்டுமல்ல எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறைகளிலும் இருந்த எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
அத்துடன் அவ்வேளையில் யூதாவின் அரசனான எசேக்கியா யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளையும், கதவு நிலைகளையும், தகடாக மூடிச்செய்திருந்த தங்கத்தையும் கழற்றி எடுத்து அசீரிய அரசனிடம் கொடுத்தான்.
எந்த ஆலயத்தில் சீர்திருத்தம் பண்ணிணானோ அந்த ஆலயத்தில் உள்ள செல்வங்களை விக்கிரகங்களை வழிபடுகிற அரசனுக்கு காணிக்கை செலுத்தினான்.
ஆனாலும் அசுரியா மன்னன் அதில் திருப்தி அடையாமல் படையெடுப்பை அதிகப்படுத்தினபொழுது வேறு வழி இல்லாமல் கர்த்தரிடம் சரணடைந்து பின்பு கர்த்தர் அவனுக்கு ஒரு மிகப்பெரிய அதிசயத்தைச் செய்து அவனிடம் தேசத்தைக் காப்பாற்றி கொடுத்தார்.
ஒரே நாள் இரவில் கடவுளுடைய தூதனால் 1,80,000 அசீரியா படை வீரர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.அவனுடைய வாழ்வின் அடுத்த கருப்பு பக்கம் எதுவென்றால் பாபிலோனிய அரசன் எசேக்கியா வியாதிப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு விசாரிக்கத் தூதர்களை அனுப்பினான்.எசேக்கியா அந்தத் தூதுவரை வரவேற்றான். அவன் தனது களஞ்சியங்களில் உள்ள வெள்ளி, தங்கம், நறுமணப் பொருட்கள், சிறந்த எண்ணெய் ஆகியவற்றையும், ஆயுதசாலை முழுவதையும், தனது பொக்கிஷசாலையில் இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன்னுடைய அரசு முழுவதிலும் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமில்லை.
இப்படியாகக் கர்த்தரை மேன்மைப்படுத்தாமல் தன் செல்வத்தை உயர்த்தி காட்டினான்
2 இராஜாக்கள் 20:12-13
இந்தச் செயல் கர்த்தரை கோபப்படுத்தியது. அதன் விளைவாகத்தான்.
அவனுடைய மகன் மனசேயின் பாவத்தின் நிமித்தம் ஆசீரிய அரசனால் கைது செய்யப்பட்டு நாடு எடுத்த பட்டான்.
பெருமை என்பது சாத்தான் தேவனுக்கு விரோதமாகப் பயன்படுத்தும் ஒரு மிகச் வஞ்சகமான ஆயுதம். சாத்தானே பெருமையினால் தான் விழுந்து போனானே.
"Pride is the ground in which all the other sins grow, and the parent from which all the other sins come."William Barclay.
எருசலேம் தேவாலயம் சம்பந்தமான காரியங்களில் மிகச்சிறந்த சீர்திருத்தங்களைச் செய்த எசேக்கிய ராஜா கர்த்தரை நம்பாமல் அவிசுவாசத்தோடு அசீரிய ராஜாவோடு வெகுமதிகளை கொடுத்துச் சமரசம் செய்து கொண்டதும், பாபிலோனிய தூதர்களுக்குத் தன்னுடைய பெருமையைக் காட்டியதுமான இரண்டு தவறுகள் அவனுடைய வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள்
வேதத்தை நாம் கருத்தோடும் கவனத்தோடும் அக்கறையோடும் படிக்கும்போது அவைகள் நமக்கும் போதிக்கும் பாடங்கள் மூலமாக நம் வாழ்க்கையில் நேரக்கூடிய கருப்பு பக்கங்களைத் தவிர்க்கலாம்.
நம்முடைய மேன்மை எல்லாம் நம்முடைய வேதமும் நம்முடைய இரட்சிகர் மட்டுமே.
எந்தத் தனிப்பட்ட தலைவர்களோ இயக்கங்களோ அல்ல.