2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 28
2 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 28
எசேக்கியா ராஜா ஒரு 1.சீர்திருத்தவாதி (Reformer) மட்டுமல்ல.
2.அவர் ஒரு கவிஞர்.
தனக்கு சுகம் கொடுத்த ஆண்டவரை புகழ்ந்து பாடிய அருமையான பாடல்
ஏசையா தீர்க்கதரிசன புத்தகம் 38:9-22 ல் படிக்கலாம்
3.அரசியல் ரீதியாகப் புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுத்தவர்(Negotiator).
4.சிறந்த படைத்தளபதி.
Commander
நகரத்தைப் பாதுகாப்பதற்காகக் கோட்டைகள், மதில்கள் மற்றும் எசேக்கியாவின் சுரங்கம் (Hezekiah’s Tunnel) என்று அழைக்கப்படும் நீர் வாய்க்காலை தோண்டச் செய்தார்.
5.அசீரிய ராஜா சனகரிப் எருசலேமை முற்றுகையிட்டபோது, எசேக்கியா மக்கள் மனத்தைத் தூண்டி அவர்களை உற்சாகப்படுத்தினார்
(2 நாளா 32:7–8).
5.மதத் தலைவர்களோடு இணக்கமான போக்கைக் கடைபிடித்தவர்.
Amicable leader
மத குருமார்களோடு சமாதானமாக இருந்து காரியத்தை நடத்தியவர். அவர்களோடு சவுல், மனசே இவர்களைப் போல மோதல் போக்கைக் கடைபிடிக்கவில்லை.
6.கடவுள்மீது இவரைப் போல் நம்பிக்கை வைத்த அரசர்கள் யூதர்களுடைய சரித்திரத்தில் யாரும் கிடையாது.
2 அரசர்கள் புத்தகம் 18:5.
7. தன்னைப் பற்றிய கடவுளுடைய தீர்மானத்தைத் தன்னுடைய உருக்கமான விண்ணப்பத்தால் மாற்றிய ஒரே ராஜா இவர்தான்.
இவனைப் பற்றி வேதம் குறிப்பிடும் சில முக்கியமான பாராட்டுக்கள்
"அவன் மேற்கொண்ட எல்லாவற்றிலும் அவனுக்கு வெற்றியே கிடைத்தது."
2 நாளாகமம் 32:30
"எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான்".
"யூதா அரசர்களில் அவனைப் போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை."
"அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான்."
"யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது.
அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான்."
2 இராஜாக்கள் 18:5-7.
சவுல் முதல் சிதேக்கியா வரை மொத்தம் 42 அரசர்கள் யூதா மற்றும் இஸ்ரேலவேல் தேசத்தை ஆண்டார்கள்.
இஸ்ரவேலில் யாரும் முழுமையாக நல்லவர்களாகக் கருதப்படவில்லை.
யூதாவில் எசேக்கியா, யோசியா, யோசபாத், ஆசா சிறப்பானவர்கள்.
இந்த நான்கு மன்னர்களின் என்னைப் பொறுத்த அளவில் மிகச் சிறந்த அரசன் எசேக்கியா.
சங்கீதம் ஒன்றாவது அதிகாரத்தில் சொல்லப்பட்ட"அவன் செய்வதெல்லாம் செழிக்கும்."
என்ற வாக்குறுதிக்குச் சொந்தமாக வாழ்ந்தவன்.
இப்படியாகப் பல்வேறு திறமைகளைக் கொண்ட ஒரு சிறந்த அரசனாக எசேக்கியா
திகழ்ந்தான்.
இவனது வாழ்க்கை மூலம் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம்.
வெறுமனே தேவனே துதித்து பாடி தேவ சமூகத்தை அனுபவிக்கிற ஒரு சுய நலமான நபராக மட்டுமில்லாமல் குழம்பி , தெளிவு இல்லாமல் இருக்கும் நமது கிறிஸ்தவத்தை ஓரளவுக்கு வசனம் தெளிவு பெற்ற நாம் ஒரு சில நபர்களையாவது சரியான சத்தியத்திற்கு மற்றும் நடத்த வேண்டும். இந்தச் சிந்தனை நமக்கு அவசியம்
நாமும் தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும் வசனத்தை நேசிக்கவும் நம்மால் முடிந்த சீர்திருத்த கருத்துக்களை விசுவாசிகளிடம் எடுத்துரைக்கவும் முயற்சி செய்து நம்முடைய பணியை முடிப்போம்.