2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 30
2 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 30.
யூதர்களின் நிர்வாக அமைப்பில் நடந்த மூன்று மாற்றங்கள் மற்றும் அவர் ஆட்சியில்
ஆட்சியில் நடந்த ஏழு திருப்பு முனைகள்.
Three changes that took place in the administrative system of the Jews and seven turning points that occurred during their reign.
Stage 1நிலை1
யூதர்களைக் குறித்து முதலில் கடவுளைத் திட்டம் என்பது தேவன் மட்டுமே அரசனாக இருப்பதுதான்.
தெய்வ ஆட்சி. Theocracy.
மோசே ஒரு நியாயாதிபதி
(judge, prophet, leader) மட்டுமே.
ஆரோன் ஆசாரியன்.
(லேவியர் கோத்திரத்தில் தெரிந்தெடுக்கப்பட்டவன்).
ஆசாரியர் பங்கு – தேவனுக்குப் பலி செலுத்துதல், பரிசுத்த சடங்குகள்.
பிறகு யோசுவா தேவனால் தலைவனாக நியமிக்கப்பட்டான்.
ஆசாரியர்கள் (எலியாசர் முதலியோர்) மக்களுடன் இணைந்து தேவனுடைய சித்தத்தின்படி வழிநடத்தினர்.
இன்னும் “தேவனே அரசன்” என்ற நிலை நிலைத்து இருந்தது.
நிலை 2
நியாயாதிபதிகளின் காலம் (Theocracy → Judge Rule) சுமார் 325 ஆண்டுகள்
தேவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நியாயாதிபதிகளை எழுப்பினார்.
இந்தக் காலகட்டத்தில் தான் கடவுள் 12 நியாயாதிபதிகளை எழுப்பினார்.
நிலை 3 Stage 3.
மன்னர் ஆட்சியின் தொடக்கம் (Theocracy → Monarchy)
மக்கள் பலமுறை “மற்ற நாடுகளைப் போல அரசன் வேண்டும்” என்று சொல்லத் தொடங்கினர் (1 சாமுவேல் 8).
தேவனே அரசன் என்ற நிலைமையிலிருந்து மன்னர் ஆட்சி நோக்கிய மாறுதல்.
ஆசாரியர்கள் இருந்தாலும், அரசியல் அதிகாரம் மன்னரிடம் சென்றது.
மன்னர் ஆட்சியில் நடந்த ஏழு முக்கிய நிகழ்வுகளை இப்பொழுது பார்க்கலாம்.
1.
சவுல், இவன்தான் முதல் அரசன் இவனுடைய காலத்தில்தான் மன்னர் ஆட்சி தொடங்கப்பட்டது.
2.
தாவீது எருசலேமை கைப்பற்றித் தலைநகரமாக ஆக்கினார்.
ஜெருசலேம் யூதர்களின் மத அடையாளச் சின்னமாக மாறியது
Religious symbol.
தேவனின் உடன்படிக்கையின் பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்தான்.
தேவன் தாவீதின் சந்ததியிலிருந்து மேசியா (Messiah) வருவார் என்று வாக்குறுதியைத் தேவன் கொடுத்தார்.
3.. சாலொமோன் (கிமு சுமார் 970–930)
எருசலேம் ஆலயத்தைக் கட்டினான்.
4. அரசாட்சியில் பிளவு (கிமு சுமார் 930)
ரெகொபயாம் (தாவீதின் பேரன்) ஆட்சியில் பத்து கோத்திரங்கள் பிரிந்து இஸ்ரவேல் (வட அரசு) ஆனது.
யூதா மற்றும் பெஞ்சமீன் மட்டும் யூதா அரசு எனமாறியது.
இது யூதர்களின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை.
5.இஸ்ரவேல் தேசத்தின் அழிவு (கிமு 722)
பல அரசர்கள் இருந்தாலும், பெரும்பாலும் பொல்லாப்பானதைச் செய்தனர்.
அசீரியர் வந்து சமாரியா தலைநகரை கைப்பற்றினர்.
வட அரசு முற்றிலும் அழிந்தது; பத்து கோத்திரங்கள் சிதறின.
6.யூதா அரசின் சீர்திருத்தக் காலங்கள்
எசேக்கியா: ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினார், அசீரிய தாக்குதலைத் தேவனின் கிருபையால் வெற்றி கொண்டார் (2 இராஜாக்கள் 18–19).
யோசியா: தேவனுடைய நியாயப்பிரமாணம் ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது; பெரிய சீர்திருத்தம் நடந்தது (2 இராஜாக்கள் 22–23).
7.யூதா அரசின் வீழ்ச்சி (கிமு 586)
யோசியாவுக்குப் பிறகு பல பலவீனமான ராஜாக்கள் வந்தனர்.
சிதேக்கியா பாபிலோனுக்கு கீழ்ப்படையாமல் புரட்சிசெய்தான்.
நெபுகாத்நேச்சர் எருசலேமை முற்றுகையிட்டு 586 கிமு ஆலயத்தையும் நகரத்தையும் அழித்தான்.
ராஜா சிதேக்கியா பிடிபட்டு பாபிலோனுக்கு கொண்டுபோய்க்கழிக்கப்பட்டான்.
இதுவே யூதர்களின் பாபிலோனிய சிறை வாசம் ஆரம்பம்.
இதற்குப் பிறகு சுமார் 580 ஆண்டுகளுக்குப் பிறகு குமாரனாகிய தேவன் இந்த உலகத்தில் இயேசு என்கிற பெயரில் பிறந்தார்.
ஆபிரகாமை தேவன் சந்தித்த நாளிலிருந்து அந்த வம்சத்திலிருந்து மேசியா, உலகத்தின் ரட்சகர் பிறந்த காலம்வரை உள்ள கால அளவு சமார் 2085 ஆண்டுகள்.
இவ்வளவு பெரிய நீண்ட இடை இடைவெளியில் இயேசு கிறிஸ்து தோன்ற வேண்டிய யூதா கோத்திரம் அழியாமல் பாதுகாக்கப்பட்டு அந்த வம்சாவில் இணைப்பு துண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது தேவனுடைய வல்லமையை எடுத்துக்காட்டுகிறது..
தேவன் நினைத்த நோக்கத்தை, தீர்மானத்தைத் திட்டத்தை மாற்ற எதுவும் முடியாது என்பது இந்த வரலாறுகளைப் படிக்கும்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய சத்தியம்.
அதைப் போல் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கடவுளுடைய அனாதி தீர்மானத்தை, திட்டத்தை மாற்ற எந்தச் சக்தியும் முடியாது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது மட்டும்தான்.