குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்கள்
*உங்கள் சிந்தனைக்கு.*
பழைய ஏற்பாட்டில் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
1. மிரியாம்.
2. உசியா அரசன்.
3. கேயாசி
4. நாகமான்
1. *மிரியாம்*
தன் சகோதரன் மோசே அடைந்த உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாமல்
கடவுள் மோசே மூலம் மட்டும்தான் பேசியிருக்கிறாரோ? எங்கள் மூலமாகவும் அவர் பேசவில்லையோ? என்று மோசேக்கு விரோதமாக எதிர்த்து நின்ற போது கர்த்தர் அவளை குஷ்டரோகத்தால் அடித்தார்.
2. *கேயாசி*
எலிசாவின் வார்த்தைப் படியே யோர்தான் நதியில் ஏழு தடவை குளித்த வுடன் தன்னுடைய குஷ்டரோகம் மறைந்து போனதை அறிந்த நாகமான் எலிசாவுக்கு ஒரு அன்பளிப்பை கொடுக்க நினைத்தான்.
அந்த அன்பளிப்பை ஏற்க எலிசா மறுத்து விட்டான். இதைக் கவனித்த எலிசாவின் வேலைக்காரன் கேயாசி, நாகமானிடம் சென்று “எப்பிராயீம் மலைநாட்டிலிருக்கும் இறைவாக்கினர் கூட்டத்திலிருந்து இரண்டு வாலிபர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு அங்கிகளையும் தயவுசெய்து தாரும் என்று எனது எஜமான் உம்மிடம் கேட்டுவரும்படி அனுப்பினார்” என்று பொய் சொல்லி.
நாகமான் கொடுத்த இரண்டு தாலந்து வெள்ளியை கொண்டான்.
இதை அறிந்த எலிசா
“ நாகமானின் குஷ்டரோகம் கேயாசியையும், அவன் சந்ததிகளையும் எக்காலமும் பற்றிப் பிடித்துக்கொள்ளும்” என்று சொன்னார்.
அப்பொழது கேயாசி உறைபனியின் வெண்மையைப் போல் குஷ்டரோகி ஆனான்.
2 இராஜாக்கள் 5:27
3. *உசியா ராஜா*
பழைய ஏற்பாட்டைப் பொறுத்த அளவில் ஆசாரிய பணி என்பது ஆரோனின் குடும்பத்திற்குரியது. மோசேயின் சட்ட திட்டங்களின்படி ஒரு அரசனோ, தீர்க்கதரிசியோ ஆசாரிய பணியைச் செய்ய முடியாது.
ஆனால் உசியா ராஜா
தனக்கு கொடுக்கப்படாத பணியைச் செய்ய விரும்பினான். கடவுள் தன்னை அழைக்காத இடத்திற்கு செல்ல முயன்றான்.
அவன் தூபபீடத்தில் தூபங்காட்டும்படி ஆலயத்திற்குள் நுழைந்தான். விளைவு
தேவனுடைய கோபத்தால் அவன் நெற்றியில் குஷ்டம் தோன்றியது.
அவன் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாக இருந்தான்.
நாகமான் தீர்க்கதரிசி வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து குஷ்டரோகத்தை சுகமாக்கிக்கொண்டான்.
மிரியாமும் உசியா அரசனும் தங்களுடைய அழைப்பில் திருப்தி அடையாமல், தேவன் தங்களுக்கு கொடுக்காத அழைப்பை இச்சித்து கடவுள் அமைத்த நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.
மற்றவர்களுடைய அழைப்பை இச்ச்சிப்பதும் பெரிய பாவம்தான்.
தங்களுடைய அழைப்பில் நிலைத்து நிற்காமல், திருப்தி அடையாமல், மற்றவர்களுடைய அழைப்பின் உயர்வைக் குறித்து பொறாமைப் படுவது நமக்கு ஒரு ஆவிக்குரிய குஷ்டரோகத்தை வரவழைத்து விடும்.
கேயாசியை பொறுத்த அளவில் அவனுடைய பணத்தாசையை கூட மன்னித்து விடலாம்.
ஆனால் ஒரு தீர்க்கதரிசியுனுடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தனக்குத் தகுதி இல்லாத செல்வத்தை அடைய நினைத்தது தான் தவறு.
எப்பொழுதுமே நாம் மற்றவருடைய பெயரையோ புகழையோ தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் நம்முடைய செல்வாக்கையோ உலக அரசியல் வாழ்க்கையோ பெருக்கிக் கொள்ளக் கூடாது.
மிரியாமுக்கு ஏற்பட்ட குஷ்டரோகம் தற்காலிகமானது.
காரணம் மோசேயின் மன்றாட்டு ஜெபம்.
*உசியா ராஜாவுக்கு* ஏற்பட்ட குஷ்டரோகம் நிரந்தரமாக மாறிவிட்டது.
மிரியாமின் எதிர்ப்பு ஒரு
Sudden outburst.
உசியா ராஜா செய்த காரியம் துணிகரமானது.
பெருமையினால் ஏற்பட்டது.
யார் என்னைத் தடுக்க முடியும் என்கிற ஆணவத்தில் ஏற்பட்டது.
எனவே தன் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாகவே வாழ்ந்து மரித்தான்.
நாம் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய மூன்று பாவங்கள்.
1. கேயாசியை போன்ற பொருளாசை.
2.மிரியாமை போன்று வன்மத்தோடு பிறர் மீது அள்ளித் தூவும் குற்றச்சாட்டு.
3. தேவனுடைய அழைப்புக்கு எதிராகக் கலகம் செய்வது.
எசேக்கியல் சண்முகவேல்