Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* . *வேத பாடம் 20*

*1நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* .
*வேத பாடம் 20*

*தியானிக்க வேண்டிய* *அதிகாரம்* *22*

தாவீது கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதற்கு மிகுந்த வாஞ்சை உள்ளவனாக இருந்தான்.

பல வருடங்களாக ஆசரிப்பு கூடாரத்தில் வைக்கப்படாமலிருந்த தேவனுடைய பெட்டியை மறுபடியுமாக எருசலேமுக்கு கொண்டு வருவதற்கு எல்லா முயற்சியும் செய்தான்‌.

கடவுளுடைய ஆலயத்தை, தான் வாழும் நாட்களிலே கட்டி முடிப்பதற்காக மிகுந்த வைராக்கியம் உள்ளவனாக இருந்தான்.

ஆனால் கடவுள் அதை அனுமதிக்கவில்லை. இதைப்பற்றி
தாவீதிடம் கடவுள் கூறிய வார்த்தை.

*"நீ திரளான *இரத்தத்தைச் சிந்தி,* *பெரிய* *யுத்தங்களைப்* பண்ணினாய்,* **நீ*என் நாமத்திற்கு* *ஆலயத்தைக்* *கட்டவேண்டாம்* , *எனக்கு முன்பாக* *மிகுதியான* *இரத்தத்தைத்* *தரையிலே* *சிந்தப்பண்ணினாய்.*

1 *நாளாகமம் 22:8.*

அது மட்டுமல்ல அந்த ஆலயம் யாரால் கட்டப்பட வேண்டும் என்பதையும் கூறியிருந்தார்.

" *இதோ, உனக்குப்* *பிறக்கப்பொகிற குமாரன்* *அமைதியுள்ள* *புருஷனாயிருப்பான்* , *சுற்றிலுமிருக்கும் அவன்* *சத்துருக்களையெல்லாம்* *விலக்கி அவனை* *அமர்ந்திருக்கச்* *செய்வேன், ஆகையால்* *அவன் பேர்* *சாலொமோன்* *என்னப்படும்*

*அவன் என் நாமத்திற்கு* *ஆலயத்தைக் கட்டுவான்,* *அவன்* *எனக்குக்* *குமாரனாயிருப்பான்* , *நான் அவனுக்குப்* *பிதாவாயிருப்பேன்,*

*இஸ்ரவேலை ஆளும்*
*அவனுடைய* *ராஜாங்கத்தின்* *சிங்காசனத்தை* *என்றென்றைக்கும்* *நிலைப்படுத்துவேன்* " *என்றார் தேவன்.*

1 *நாளாகமம் 22:10.*

சாலொமோன் கடவுளிடமிருந்து ஆலயத்தை கட்டுவதற்கு அழைப்பை பெற்றதற்கு அடையாளமாக இந்த வார்த்தைகள் காணப்படுகிறது.

அதையடுத்து தாவீது சாலொமோனிடம்
என் மகனே, யெகோவா உன்னோடு இருப்பாராக. அவர் கூறியதுபோல யெகோவாவாகிய உன் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டுவதில் நீ வெற்றியடைவாயாக.
"என ஆசீர்வதித்தார்.

மனிதனுடைய‌ எதிர்பார்ப்புகள் ஆசீர்வாதங்களை
இந்த வார்த்தைகள் அடையாளப்படுத்துகிறது.

இது மட்டுமே ஊழியத்தைப் பெற்ற மனிதனுக்கு போதுமானதல்ல.
ஊழியத்தை ஒரு மனிதன் கடவுளிடமிருந்தே பெற்றிருந்தாலும் மனிதனுடைய பாராட்டுகளும் ஆசீர்வாதங்களையும் அவன் பெற்றிருந்தாலும் அவன் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

அது என்னவென்றால் அது தாவீதின் வார்த்தைகளிலே நாம் கேட்கலாம்.

" *கர்த்தர் இஸ்ரவேலுக்காக* *மோசேக்குக் கற்பித்த* *நியமங்களையும்* *நியாயங்களையும் செய்ய* *நீ* *கவனமாயிருந்தால்* *பாக்கியவானாயிருப்பாய்* ."

1 *நாளாகமம் 22:13.*

ஒரு மனிதன் வெறுமனே ஊழியத்தை கடவுளிடம் பெற்றிருந்தால் மட்டும் போதாது‌.

அவன் கர்த்தருடைய வழிகளில் நடக்க வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும். கர்த்தருக்குள் இருக்க வேண்டும்.

இவைகளை நடப்பித்தால் மட்டுமே மனிதன் தன்னுடைய ஊழியத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.

இந்த இடத்தில் பவுலுடைய வார்த்தைகளை குறிப்பிட விரும்புகிறேன்.

" *அவர் எனக்கு அருளிய* *கிருபை* *விருதாவாயிருக்கவில்லை* . *அவர்களெல்லாரிலும்* *நான்* *அதிகமாய்ப்* *பிரயாசப்பட்டேன். ஆகிலும்* *நான் அல்ல,* *என்னுடனே இருக்கிற* *தேவ கிருபையே *அப்படிச்* செய்தது* .

*1 *கொரிந்தியர் 15*

ஆம் ஊழியத்தை நிறைவேற்ற அழைப்பு மட்டும் போதுமானது அல்ல. நிறைவேற்ற உழைப்பும் கீழ்ப்படிதலும் அவசியம்.

அழைப்பு 30 சதவீதம் கீழ்ப்படிதல் மற்றும் உழைப்பு 70 சதவீதம்.

சிறிய ஊழியமோ பெரிய ஊழியமோ இதுதான் வெற்றிக்குரிய ஃபார்முலா‌.

நமது கைகளுக்கு எது அகப்படுகிறதோ அந்த காரியத்தை மனப்பூர்வமாக அசதி இல்லாமல் உறுதியாக நிறைவேற்ற அழைக்கப்பட்டி ருக்கிறோம்‌.

சோம்பேறிகளும் விசுவாசம் இல்லாதவர்களும் மனிதர்களுடைய பாராட்டு விரும்புவோரும் ஊழியப் பாதையில் முன்னேற முடியாது.

விசுவாசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் ஊழியம் இருக்கிறது. அந்த ஊழியத்தை அறிந்து விசுவாசிகளும் தைரியமாக தங்கள் உழைப்பை செலுத்தி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒவ்வொரு ஊழியத்தை நிறைவேற்ற கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். இந்த கிருபையை விசுவாசிகள் ஆகிய நாம் வீணாக்கி விடக்கூடாது.