Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* . * *வேத பாடம் 19* *
*உங்கள்* *சிந்தனைக்கு**

தாவீதின் பாவங்களும்,
கடவுளுடைய இரக்கங்களும் திட்டமும் ‌



1 *நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* . *

*வேத பாடம் 19* *

*தியானிக்க வேண்டிய* *வேத* *பகுதி* அதிகாரம்.21:28,29,30*

இந்த மூன்று வசனங்களையும் கீழ்க்கண்டவாறு தியானிக்கலாம்.

சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டி கணக்கெடுப்பு நடத்த வைத்தான்.
அதன் விளைவாகக் கர்த்தருடைய கோபத்தினால் கொள்ளை நோயினால் 70 ஆயிரம் பேர் மரித்துப் போனார்கள்.

அதற்குத் தாவீது மன்னிப்பு கேட்டபொழுது
எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு  ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, தாவீது அங்கே போக வேண்டுமென்று தாவீதுக்குச் சொல்லப்பட்டது.
( *1 நாளாகமம் 21:18)*

அதன்படி தாவீது அங்கே பலியிட்டான்.
அதே நேரத்தில்
"மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது."
( *1 நாளாகமம் 21:29)**

தாவீது கிபியோனின் மேட்டில் இருந்த மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின
கூடாரத்தில் பலியிடாமல் போனதற்கு காரணம்
யெகோவாவின் தூதனின் வாளுக்குத் தாவீது பயந்ததினால், இறைவனிடம் விசாரிக்கும்படிஅந்தப் பலிபீடத்திற்கு முன் போகமுடியவில்லை.

தாவீது, தான் பலி செலுத்தின அந்த இடத்திலேயேதான் தேவனுடையஆலயத்தைக் கட்டட விரும்பினான். இந்த இடத்தில் தான் ஆபிரகாம் ஈசாக்கைபலியிடக் கொடுத்தத இடம்.( *ஆதி 22 வது* *அதிகாரம்).*

இந்த இடத்தில்  முக்கியமான ஒருகாரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தாவீது தன் வாழ்க்கையில் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள், பத்சேபாளை அவளுடைய கணவனிடமிருந்து  அபகரித்துஅவனைத் திட்டமிட்டு கொலை செய்த மாபெரும் தவறு. ஆனால் அந்தப் பாவத்தின்நிமித்தமாகச் சாலொமோன் பிறந்தான்.

இந்தச் சாலொமோன்தான் தேவனுடையஆலயத்தைக் கட்டினான்.

அடுத்து  தாவீது செய்த பெரிய தவறுமக்களைக் கணக்கெடுத்தான். இதனால் விளைந்ததவறுகளுக்காகக்கடவுளுக்குப் பலியிட்டான்.
ஆனால் இந்த இடத்தில்தான் தேவனுடைய ஆலயம் கட்டப்பட்டது.

தேவனுடையஆலயத்தைக் கட்டினவனும் ஆலயம் கட்டப்பட்ட இடமும் தாவீதின் இரண்டு மிகப்பெரிய பாவங்களால் வந்த விளைவு என்று சொன்னால் அதில்எந்தத் தவறும் இல்லை.
"Out of those great sins God built a temple"Wiersbe.

இந்தக் கருத்தை, பாவத்தை உற்சாகப்படுத்தும் படியாக நான் சொல்லவில்லை.

தேவனுடைய தண்டனைகளையும் அவருடைய நியாயத் தீர்ப்பையும் அவருடைய கிருபைகளையும் அதன் விளைவுகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

அவருடைய அறிவு அவருடைய செயல்பாடுகள் நம்முடைய கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது.

தாவீதின் தவறுகளைநினைக்கும்போது இந்தக் காரியங்களையும் நாம்  நினைத்துப் பார்க்க வேண்டும்.

அப்படி நாம்பார்க்கும்பொழுது யாருடைய பாவங்களையும் நாம் ஒரு நாளும் விளம்பர படுத்தமாட்டோம்‌.

ஒருவருடைய கண்ணியம் நம்முடைய கைகளில் இருக்கும்பொழுதுஅந்தக் கண்ணியத்தை குறைப்பதற்கு நாம் கடுகளவு கூட முயற்சிக்கக கூடாது. இதுவே உயர்ந்த பரிசுத்தத்தின் ஒரு  சிறப்பான அளவு.
நமது வாழ்வில் ‌ எவ்வளவு பேருடைய கண்ணியத்தை நாம் காரணம் இல்லாமல் சிதைத்து இருக்கிறோம் ~என்கிற ஒரு வருத்தம் நம்மில் எழாவிட்டால் நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள தகுதியற்றவர்கள்.