2 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம். 5
¹*உங்கள் சிந்தனைக்கு.*
2 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம்.
*வேத பாடம் ஐந்து..*
ஆசா அரசனின் இரண்டு பக்கங்கள்.
"நீங்கள் இவ்வளவு மூடத்தனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா?"
*கலாத்தியர் 3:3*
பவுலின் இந்த கேள்விக்கு பழைய ஏற்பாட்டில் பொருத்தமாக உள்ள பல நபர்களில் யூத தேசத்தை ஆண்ட ஆசா அரசனும் ஒருவன்.
ஏறக்குறைய 35 ஆண்டுகள் கர்த்தருக்கு பிரியமான வழிகளில் நடந்து பல சீர்திருத்தங்களை செய்த இந்த அரசன் கடைசி ஏழு ஆண்டுகளில் கர்த்தரை விட்டு வழி விலகி கர்த்தரை விசுவாசிக்காமலும் அதற்காக வருத்தப்படாமலும் மரித்துப் போனான்.
தியானிக்க வேண்டிய வேத பகுதிகள்
*2 நாளாகமம்*
*அதிகாரங்கள் 14,15,* *மற்றும் 16.*
எத்தியோப்பியன் செராகு, பத்து இலட்சம் வீரரோடும் முந்நூறு தேர்களோடும் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான். அப்போது ஆசா கடவுளை நோக்கி
"ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.
*2 குறிப்பேடு 14:11*
ஆண்டவர் எத்தியோப்பியரை ஆசா, யூதா முன்பாக முறியடிக்கவே, அவர்கள் தப்பியோடினர்.
*2 குறிப்பேடு 14:12.*
ஆசா, தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நல்லவற்றையும் சரியானவற்றையும் செய்தான்.
அவன் யூதா மக்களுக்குத் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படியும், அவருடைய சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும்படியும் கட்டளையிட்டான்.
*2 நாளாகமம் 14:4*
அவன் யூதாவின் ஒவ்வொரு பட்டணங்களிலும் இருந்த வழிபாட்டு மேடைகளையும், தூபபீடங்களையும் அகற்றிப்போட்டான்.
இராஜ்யம் அவனுடைய ஆட்சியின்கீழ் சமாதானமாய் இருந்தது.
*2 நாளாகமம் 14:5*
எல்லாவற்றிற்கும் மேலாக
யெகோவாவைத் தேடாத சிறியவரோ பெரியவரோ, ஆணோ பெண்ணோ எல்லோரும் கொல்லப்படவேண்டும் என்று மக்களை உடன்படிக்கை செய்ய வைத்தான்.
*2 நாளாகமம் 15:13*
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
யூதா தேசத்தை ஆண்ட சிறந்த மன்னர்களில் இவனும் ஒருவன்.
இப்படியாக 35 ஆண்டுகள் கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தான்.
இவன் தன்னுடைய வாழ்க்கையில் மூன்று பெரிய தவறுகளை செய்தான்.
1.எப்பொழுது இவனுடைய வாழ்க்கைத் தடம் மாறியது என்றால் இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைக்க தொடங்கிய போது
ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவிய களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனை திரவிய களஞ்சியத்திலும் இருந்து வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து தமஸ்குவை ஆட்சி செய்த சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பி அவனிடம் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும் படி கேட்டுக்கொண்டாரன். அதன் மூலம்
இஸ்ரவேலின் அரசன் அவனை விட்டு பின்வாங்கி விடுவான் என்று நம்பினான்.
*2* *நாளாகமம் 16:2-3.*
அதன்படி அவன் செய்தான்
இது கடவுளை கோபப்படுத்தியது.
*2நாளாகம் 16:1*
எத்தியோப்பியன் செராகு, பத்து இலட்சம் வீரரோடும் முந்நூறு தேர்களோடும் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்தபோது கடவுள் அவனைக் காப்பாற்றியதை மறந்து விட்டான். .
கடவுளை நம்பாமல் சீரிய அரசன் பெனாதாத்திற்கு பணத்தை கொடுத்து இஸ்ரவேல் அரசனை சமாளித்தான்.
2 அடுத்த தவறு
இந்த செயலை கண்டித்த தீர்க்கதரிசிஅனானி"
நீ மூடத்தனமானதைச் செய்திருக்கிறாய். ஆனபடியினால் இன்றுமுதல் நீ யுத்தங்களை சந்திப்பாய்” என்று எச்சரித்தார்
இதனால் ஆசா மிகவும் கோபங்கொண்டதால் அவனைச் சிறையில் அடைத்தான்.
அந்த நாளிலேயே ஆசா சில மக்களையும் மிகக் கொடுமையாக ஒடுக்கினான்..
*2 நாளாகமம் 16:9-10.*
கடைசியாக அவனுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் வருடத்தில் ஆசா தனது கால்களில் ஏற்பட்ட வியாதியினால் வேதனைப்பட்டான். அவனுடைய வியாதி கடுமையானதாய் இருந்தும், அவன் தனது வியாதியிலும்கூட யெகோவாவின் உதவியைத் தேடவில்லை. ஆனால் வைத்தியரின் உதவியை மட்டும் தேடினான்
*2 நாளாகமம் 16:12*
இப்படியாக ஆஷா மன்னன் இறுதி நாட்களில் பின் மாற்றத்திலிருந்து விடுதலை பெறாமல் கடவுளைத் தேடாமல் மரித்து போனான்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எப்படி ஆரம்பித்தோம், எப்படி ஓடினோம் என்பதல்ல முக்கியம் எப்படி முடிக்கிறோம் என்பதும் முக்கியம்.
இறுதிவரை புதிய ஏற்பாட்டு உபதேசங்களில் கோட்பாடுகளில் நிலைத்து நிற்பது முக்கியம்.
நம்மில் அநேகர் துன்பமான நேரங்களில் கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டு நிலைத்து நிற்பார்கள்ஆனால் வசதிகள் வாய்ப்புகள் செல்வங்கள் வரும்பொழுது பெருமையினால் வேற்றுமையினால் கர்த்தருடைய சித்தத்தை செய்ய தவறி விடுவார்கள்.
இறுதியில் தங்களுக்கு கடவுள் முன் குறித்த எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையோடு பரலோகத்திற்கு செல்வார்கள்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆரம்பத்தை போலவே முடிவும் முக்கியம்.
நாம் எப்படி ஆவிக்குரிய வாழ்க்கையை முடிக்கிறோம் என்பதை பொறுத்து தான் பரலோகத்தில் நமக்கு இடம் உறுதி செய்யப்படும்.