Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

பிரிவினை
உங்கள் சிந்தனைக்கு !
உலகத்தில் மொழி,இனம் ,வர்க்கம், ஜாதி.நிறம் இவைகளின் அடிப்படையில் பிரிவினையை போதிக்காத ஒரே மார்க்கம் கிருஸ்தவம்தான் . பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,பகையைச் சிலுவையினால் கொன்று
எல்லா மக்களையும் இயேசு கிறிஸ்து ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.எபே 2:13-16.
நாம் எல்லோரும் அவர் சமூகத்தில் ,பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய் பெற்றிருக்கிறோம்.நாம்எல்லோரும் ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருக்கிறோம் .
வேற்றுமையில் ஒற்றுமை(Unity in diversity ) என்கிற போதனையை உபதேசித்து யூதர்கள், கிரேக்கர்கள், ஆசிய இன மக்கள் என எல்லோரையும் இணைத்து வெற்றிகொண்டது ஆதி திருச்சபை.
பிரிவினை என்பது சாத்தானின் ஆயுதம்.மூன்றில் ஒரு பங்கு தேவதூதர்களை பிதாவினிடத்தில்இருந்து வஞ்சகத்தால் பிரித்தான் . சாத்தான் ஆதாம் ஏவாளை பொய்யினால் பிரித்தான் He has been the author of ‘Divide and rule’ policy.
இன்று மொழி,இனம் ,வர்க்க, ஜாதி.நிற பெருமைகள் மூலமாக தேவன் இணைத்த சபையை சாத்தான் பிரிக்கிறான்.
பிரிவினை என்பது நாம் எண்ணுவது போல அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை .1 கொரி 11 :18-34 வரை நாம் ஆராய்ந்து பார்த்தால் பிரிவினையால் ஏற்படும் எச்சரிக்கை விளங்கும்
(1கொரி 10: 27-31) பிரிவினை தேவனுடைய சபையை
அசட்டைபண்ணுகிற காரியம் .முன்னே தூரமாயிருந்த இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானவர்களை அலட்சிய படுத்துகிற காரியம்.
தேவ சன்னிதானத்தில் ,சமூகத்தில் பிரவேசிப்பதற்கு, ஐக்கியமாவதற்கு அழைக்கப்பட்டவர்களை தங்கள் சமூகத்தில் (ஜாதியில், இனத்தில், கோத்திரத்தில் )ஐக்கியமாவதற்கு தடைசெய்வது கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி , அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
தகர்க்கப்பட்ட பிரிவினையாகிய நடுசுவரை மீண்டும் எழுப்புவது இந்த உலகில் தேவன் முன்குறித்த திட்டத்தை, சித்தத்தை செயல்படுத்த விடாமல் தடுக்கும் செயலாகும், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் சபையை துண்டாடுவது தேவனுடைய ஆலயத்தை கெடுப்பதாகும்.
Satan is master of division . But our God is the God reconciliation. ஜாதி, இன பிரிவினை சபைகளை ,சங்கங்களை, இயக்கங்களை பலவீனப்படுத்துகின்றன.
unity is an asset. But division is a liability.
ஜாதி பாகுபாடு இல்லாத சபைதான் முன்மாதிரியான சபை.
எவ்வளவு ஆரோக்கிய உபதேசங்களை போதிக்கும் சபையாய் இருந்தாலும் மிக சிறந்த மிஷினரி இயக்கமாய் இருந்தாலும், செழிப்பான அமைப்பாய் இருந்தாலும் கொரிந்து சபையை போல வரங்களை பெற்றிருந்தாலும் அங்கு ஜாதி, இன, மொழி, பிரிவினை இருந்தால் அது கிறிஸ்துவின் சரீரமாய் காணப்படமுடியாது.