Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

கடவுள் செய்யும் நீதிக்கு தாமதம் என்பது இல்லை.
கடவுள் செய்யும் நீதிக்கு தாமதம் என்பது இல்லை.
என்னுடைய கோபமோ, சலிப்போ, விரக்தியோ ஏமாற்றமோ,புலம்பலோ மன அழுத்தமோ, எரிச்சலோ எதுவும் தேவனுடைய நீதியை துரிதப்படுத்தாது.

தாமதமும் படுத்தாது. தேவனுடைய நீதி அவருடைய நேரத்தில், அவருடைய திட்டத்தி
ன்படி, அவரது வழிமுறையின் படி என்னுடைய வாழ்க்கையில் நடக்கும்.

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி
(Justice delayed is justice denied.)
என்பது போன்ற உலக கோட்பாடுகள் தேவனுடைய நீதி பரிபாலனத்தில் கிடையாது.

தேவனைப் பொறுத்த அளவில் காலத்திற்கும் முன்பாகவோ தாமதமாகவோ அவர் செயல்பட மாட்டார்.
அவருடைய குறித்த நேரத்தில் எல்லாம் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும். இந்தப் புரிதலின் அடிப்படையில் நான் நடப்பதால் ஒரு காலமும் நான் சோர்வடைய மாட்டேன்.
கடவுள் எனக்காக யாவற்றையும் அவருடைய நேரத்தில் எனக்கு நிறைவேற்றுவார்.

கடவுளுடைய பணியில்.
எசேக்கியேல்சண்முகவேல்.