சமரசம்* *என்பது** *சாத்தானுடைய* *மிகப்பெரிய* *ஒரு* *ஆயுதம்* .
*உங்கள் சிந்தனைக்கு.*
*Compromise is one of Satan’s* *greatest ** *devices .W.Wiersbe*
*சமரசம்* *என்பது** *சாத்தானுடைய* *மிகப்பெரிய* *ஒரு* *ஆயுதம்* .
தனித்தன்மையே கடவுள் நமக்கு கொடுக்கும் சொத்து.
யூதருடைய வெற்றியும் தோல்வியும் இதன் அடிப்படையில் அமைந்தது.
மோவாபிய பெண்களோடு அவர்கள் முதல் முதலாக உறவு கொண்டு தனித்தன்மையை இழந்தார்கள். இங்குதான் அவர்கள் சமரசத்தை கைக்கொண்ட முதல் இடம்.
நாமும் கிறிஸ்து நமக்கு ஒப்புக்கொடுத்த உபதேசங்களில் வாழ்க்கை முறைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.
பரிசுத்தத்தில் சமரசம். நேர்மையில் சமரசம். ஊழியத்தில் சமரசம். ஒழுக்கத்தில் சமரசம்.
உலக மக்களோடு, தனித்தன்மையோடு இருப்பதில் சமரசம்.
அரசியலுக்கு விலகி இருப்பதில் சமரசம்.
ஜெபிப்பதில் சமரசம்.
வேதம் வாசிப்பதில் சமரசம்.
எல்லோரையும் சம நிலையாக பார்ப்பதில் சமரசம்.
தேவனுடைய பிள்ளைகளை கனம் பண்ணுவதில் சமரசம்.
ஏழைகளை கவனிப்பதில் சமரசம்.
பாராட்டுவதில் சமரசம்.
பாவத்தைக் கண்டிப்பதில் சமரசம்.
பிள்ளைகளை சமமாக பாவிப்பதில் சமரசம்.
சொத்துக்களை பிரிப்பதில் சமரசம்.
கடவுளுக்கு கொடுப்பதில் சமரசம்.
இப்படி எல்லா வகையிலும் இன்றைக்கு சபை சமரசம் என்கிற பிசாசின் கன்னி வலையில் சிக்கித் தவிக்கிறது.
உலக வசதிகளுக்காக வாய்ப்புகளுக்காக செல்வங்களுக்காக கர்த்தருடைய கோட்பாடுகளை ஊழியங்களை சமரசம் செய்பவர்கள் ஒருநாளும் தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது.
வேதத்தில் தங்களுக்கு கொடுத்த அழைப்பில் சமரசம் செய்யாமல் வாழ்ந்தவர்களே மிகப்பெரிய காரியங்களை சாதித்தவர்களாக காணப்படுகிறார்கள்.
தன் இனத்தின் மீது கொண்டிருந்த வைராக்கியத்தில் மோசே ஒருநாளும் சமரசம் செய்ததில்லை .
கடவுள் அவரைக் கொண்டு பெரிய ஜாதியாக்குவேன் என்று சொன்னபோதும் அந்த அழைப்பை நிராகரித்தார்.
கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதில் தாவீது காட்டின உற்சாகத்தில் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை.
அவன் அந்த ஆலயத்தை கட்ட தேவன் அனுமதிக்காவிட்டாலும் ஆலயம் கட்டுவதற்கான எல்லா ஆயத்த பணிகளையும் முடித்தான்.
பர்னாபாவை போல எடுத்த முயற்சியில் சமரசம் செய்து கொள்ளவில்லை.
புறஜாதியார் நற்செய்தி பணிக்கு தன்னைவிட பவுல் சிறந்தவன் என்கிற கருத்தில் அவன் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை.
பேதுருவே எதிர்த்து நின்றாலும் பவுல் கடவுள் தனக்கு வெளிப்படுத்தின நற்செய்தியை சமரசம் செய்து கொள்ளவில்லை.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நாமும் இவர்களைப் போல சமரசம் என்கிற
பிசாசின் தந்திரத்தை மேற்கொள்ள கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக!