தெளிந்த அறிவு
நமக்குத் தேவை தெளிந்த அறிவு அல்லது மனத்தெளிவு (Sober minded).
வேதத்தில் , புதிய ஏற்பாட்டில்10 இடங்களில் “தெளிந்த புத்தி” அல்லது"மனத் தெளிவு" பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
நமக்கு தெளிந்த ஒரு அறிவு வேண்டும். அறிவுத் தெளிவு வேண்டும். மனத்தெளிவு வேண்டும். தேவன் யார்? நாம் யார்? நாம் எதற்காக ஜெபிக்கிறோம்? எந்த நோக்கத்திற்காக ஜெபிக்கிறோம்? ஏன் ஜெபிக்கிறோம்? நம்முடைய அழைப்பு என்ன? நம்முடைய ஊழியத்தின் இலக்கு என்ன?இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்கு முதலில் தெளிவு வேண்டும்.
இந்தத் தெளிவு இல்லாமல் ஏதோ விண்ணப்பம், ஜெபம் என்கிற பெயரில் ஆகாயத்தை அடிக்கிறவனாக சிலம்பம் பண்ணுகிறது போல நாம் ஜெபம் பண்ண கூடாது.
இதைத்தான் பேதுரு தன்னுடைய நிருபத்தில் சொல்லியிருக்கிறார். 1பேது 4:7
எனவே நமக்கு எந்த ஒரு கருத்தை குறித்தும் மனத்தெளிவு மிகவும் அவசியம்.எது சரி? எது சரியில்லை? எது நமக்கு நல்லது? எவைகள் நமக்கு நல்லதல்ல? யார் நமக்கு உண்மையாக உதவி செய்கிறார்கள் ? யார் நமக்கு எதிராக இருக்கிறார்கள்? யாரை நம்ப வேண்டும், ஊழியக்காரர்களில்
நம்முடைய ஐக்கியம் யாரோடு இருக்க வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு நமக்கு வேதத்தின் அடிப்படையில் பதில் உண்டு.
அதன் அடிப்படையில் நமக்கு ஒரு மனத் தெளிவு வேண்டும். மனத்தெளிவு ,தெளிந்த புத்தியுள்ள மனிதன் வெற்றியை நோக்கி பயணம் செய்வான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது .
நமக்கு மனத் தெளிவு கிடைக்க க்கூடிய நேரங்கள்,
ஒன்று நம்முடைய ஜெப நேரம்.
மற்றொன்று வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் நேரம்.
இந்த இரண்டு நேரங்களையும் சரியாக பயன்படுத்திக் கொள்கிறவன் நிச்சயமாக மனத் தெளிவில்லாமல் இருக்க மாட்டான். எதை வேண்டுமானாலும் ஒரு விசுவாசி இழக்கலாம்.
ஆனால் ஜெப நேரத்தையும் வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் நேரத்தையும் ஒருநாளும் நாம் இழந்து விடக்கூடாது.
அதுதான் நமது வாழ்க்கையின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரம் இல்லாமல் உள்ள நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை மணல்மேல் கட்டிய கட்டடத்திற்கு சமம்.