Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள் புத்தகம் .வேதபாடம் 14

*உங்கள் சிந்தனைக்கு*

*வேதபாடம் 14*
1 *நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்*

தாவீது ஒரு சிறந்த போர் வீரன். சிறந்த படைத்தளபதி.
மிகுந்த தைரியசாலி.
15 வயதில் அரசனாக
முடிசூட்டப் பட்டான்.

பெலிஸ்தியனான கோலியாத்தை கூழாங்கல்லால் வீழ்த்தினான்‌. சுற்றியிருந்த பகைவர்களை வென்று தேசத்தில் அமைதியை நிலைநாட்டினான்.

யூதர்களுக்கென்று விரிவான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.
60 ஆண்டுகளாக ஆசரிப்பு கூடாரத்தில் காணப்படாமலிருந்த உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்தான். அதற்கென்று ஒரு கூடாரத்தை உருவாக்கி அதிலே வைத்தான்.

கடவுளுடைய ஆலயத்தை கட்டுவதற்கான எல்லா பொருள்
களையும் சகல ஏற்பாடுகளையும் சாலொமோனுக்கு உருவாக்கி கொடுத்தான்.

இப்படி பல காரியங்களை தாவீது செய்தாலும் முக்கியமான ஒரு காரியத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.

உடன்படிக்கைப் பெட்டியை, தாவீது, தான் அமைத்த கூடாரத்தில் வைத்தபோது அந்த உடன்படிக்கைப் பெட்டிக்கு அவன் செய்த காரியங்கள் முக்கியமானவை.
இதுதான் ஆராதனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

தேவனுடைய பெட்டி எருசலேமுக்கு கொண்டு வந்த அந்த காலக்கட்டத்தில் இரண்டு வகை கூடாரங்கள் இருந்தது. ஒன்று மோசே ஏற்படுத்திய கூடாரம். அடுத்தது தாவீது

ஏற்படுத்தின கூடாரம்‌.

தேவனுடைய உடன்படிக்கை பெட்டி தாவீதின் கூடாரத்தில் காணப்பட்டது..

மோசேயின் ஆசரிப்பு கூடாரத்தில் கடவுள் மோசேக்கு கட்டளையிட்ட பலிகள், சடங்குகள் ஆசாரியனுடைய தலைமையில் நடைபெற்றது.

அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் அந்தப் பணிகளுக்கு என்று நியமித்தான்.
1 *நாளாகமம் 16:40.*

அதே வேளையில் தாவீது தான் அமைத்த கூடாரத்தில் வைத்த தேவனுடைய பெட்டிக்கு முன்பாக பாடல்கள் மூலமாக வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தான்.

கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாகச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து, எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல் காக்கிறவர்களாக வைத்தான்.
1 *நாளாகமம் 16:37,38*

இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப் பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின் முறையினருக்கும் முதன்முதலாக அளித்தான்;
*16:7*

நாலாயிரம் பேரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தான்.
1 *குறிப்பேடு 23:5*

இசைக்குழுக்களை அமைத்தான் (1 *நாளாகமம் 15:16, 23:5,* *25:1)*
ஆசாப், ஹேமான், யெதூத்தூன் போன்ற இசைத் தலைவர்கள்‌ அந்தக் குழுக்களில் காணப்பட்டார்கள்.

ஆராதனையை நிரந்தர சேவையாக ஆக்கினான்.
தினந்தோறும் ஆராதனை செய்ய இசைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன ( 1 *நாளாகமம் 16:37).*

பல வகையான இசை கருவிகளை அறிமுகப்படுத்தினான்.

தாவீதின் கூடாரத்தில் உள்ள உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக அவன் ஆரம்பித்த இந்த ஆராதனைக்குரிய செயல்பாடுகள் சாலொமோன் கட்டின தேவாலயத்திலும் தொடர்ந்ததாக நாம் அறிந்து கொள்ளலாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கடவுளை தான் எப்படி தனிப்பட்ட முறை பாடி ஆராதித்தானோ அதேபோல கர்த்தருடைய ஆலயத்திலும் பாடகர் குழுவை ஏற்படுத்தி இசைக் கருவிகளுடன் தேவனை புகழ்ந்து பாட வழி வகை செய்தான்.


இன்றைக்கு சபைகளில் பாடல்கள் மூலம் தேவனை ஆராதிக்கும் முறைமையை முதன் முதலில் ஆசரிப்பு கூடாரத்திலும் அதன் விளைவாக தேவாலயத்திலும் ஆரம்பிக்க காரணமானவன் தாவீது என்றால் எந்த சந்தேகமும் இல்லை.

கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்ட ஆசரிப்பு கூடாரத்தில் பாடல்கள் மூலம் தேவனை ஆராதிக்கிற முறை பின்பற்றப்படவில்லை.
அதை ஆரம்பித்து வைத்தவன் தாவீது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்
தான் உருவாக்கிய கூடாரத்தில் கடவுளுடைய பெட்டியை கொண்டு வந்து அங்கே தினமும் தேவனை ஆராதிக்க 68 நபர்களை முதலில் நியமித்தான். 16::37

இது மாத்திரம் அல்ல நாலாயிரம் லேவியர்களைக் கொண்ட பாடகர் குழுவை ஏற்படுத்தினான்.
*23:5*


பின்பு அதன் விளைவாக சாலொமோன் கட்டின தேவாலயத்திலும் ‌ பலவித இசைக்கருவிகளால் தேவனை துதித்ததாக பார்க்கலாம்.
2 *.நாளா5:13.*

இப்படியாக தாவீது கடவுளை பாடல்களாலும் இசை வாத்திய கருவிகளாலும் தேவனை ஆராதிக்கும் முறையை ஆலயத்தில் கொண்டு வருவதற்க்கு அடித்தளம் அமைத்தான்.

என்னதான் பலிகள் மூலமாக தேவனுக்கு யூதர்கள் ஆராதனை செய்தாலும் பாடல்கள் இசைக் கருவிகள் மூலமாக தேவனை ஆராதிப்பதற்கு ஒரு முன்னோடியாக தாவீது திகழ்ந்தான்.

கடவுளை ஆராதிப்பதில் பெரிய ஒரு புது பரிமாணத்தை தாவீது ஏற்படுத்தினான்.
இன்றைக்கு நாம் தேவனை ஆராதிப்பதற்கு நமக்கு முன்னோடி தாவீதுதான்.