நிலைத்து நிற்கும் ஆவிக்குரிய நன்மைகள்
நிலைத்து நிற்கும் ஆவிக்குரிய நன்மைகள்
யூத ஜனங்களுக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்கள் பல.
அந்த இனத்தை தம்முடைய சொந்த ஜனமாக தெரிந்து கொண்டார்.(His own people)
அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கினார்.
செழிப்பான கானானை அவர்களுக்கு சொந்தமாக கொடுத்தார் .
பாலும் தேனும் ஓடுகிற ஒரு இடம் அது .
எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தார்.
இவைகள் எல்லாம் உலக மேன்மைக்கான காரியங்கள் .
ஆனால் இவைகள் தவிர
அவர்கள் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
1. தேவனுடைய வார்த்தைகள் அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டது.
" இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது, தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
ரோமர் 3:1,2
2. அடுத்ததாக
உலகத்தின் இரட்சகர் அந்த இனத்திலிருந்து தோன்றினார்.
இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது..
யோவான் 4:22 மற்றும்
ரோமர் 9:1-5
யூதர்களுக்கு தேவன் கொடுத்த உலக ஆசீர்வாதங்கள் ஒரு தலைமுறையோடு ஒரு குறிப்பிட்ட காலத்தோடு முடிந்து விட்டது.
ஆனால் அந்த ஜனங்களுக்கு கடவுள் கொடுத்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இன்றைக்கும் தலைமுறை தலைமுறை கடந்து நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு கொடுத்த உலக மேன்மைகள் அழிந்துவிட்டது.
ஆனால் அவர்கள் பெற்ற ஆவிக்குரிய நன்மைகள் உலக மக்களுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதங்களாக
காணப்படுகிறது .
அது போல தான் ஒருவனுக்கு தேவன் அளிக்கும் உலக மேன்மைகள் அவனோடு அழிந்து போகும்.
ஆனால் அவனுக்கு தேவன் அளிக்கும் ஆன்மீக ஆசிர்வாதங்கள் அவனுக்கும்,அவனுடைய சந்ததிக்கும், மற்றவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளாக மாறிவிடும்.
இன்றைக்கு உலக நன்மைகளை மேன்மைப்படுத்தி பேசுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலக நன்மைகளை ஆசீர்வாதங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை.
அவைகள் நமக்கு அவசியம் தான் . அவைகள் நமக்குத் தேவைதான்.
ஆனால் நம்முடைய நோக்கம் ,பார்வை அவைகளை நோக்கி இருக்க கூடாது.
நாம் எந்த அளவுக்கு ஆவிக்குரிய மேன்மைகளை பெற்றுக் கொள்கிறோமோ விதைக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் நமது சந்ததிக்கும், தேசத்திற்கும்,
திருச்சபைக்கும் பயனுள்ளவர்களாக இருப்போம்.
When a person trusts the Lord Jesus he immediately becomes a spiritual billionaire , in Christ he possesses inexhaustible treasures.
Believer's Bible commentary