Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஆபிரகாமின் தோல்வியும் தேவனின் அழைப்பும்
உங்கள் சிந்தனைக்கு:
ஆபிரகாமின் தோல்வியும் தேவனின் அழைப்பும்
ஆபிரகாம்,பார்வோன் ,அபிமெலேக்கு ஆகிய இந்த மூவரில் ஆபிரகாம் எந்த வகையிலும் உலக நடைமுறையின்படியும், உலக சட்டதிட்டங்களின்படியும் மேம்பட்டவன் அல்ல.
பார்வோன், அபிமெலேக்கு இவர்கள் இருவரும் கர்த்தருடைய கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தவர்கள்.
சாராளிடம் மாமிச இச்சையின்படி அத்துமீறாமல் பெருந்தன்மையாக நடந்தார்கள்.
மாமிச பலவீனங்களை சாக்குப்போக்கு சொல்லி, தேவனுடய கட்டளையை மீறாமல் அவர்களுக்கு கிடைத்த வெளிச்சத்தின்படி தேவனுக்கு உண்மையாக இருந்தவர்கள்.
ஆனால் ஆபிரகாம் அப்படியல்ல.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன். ஆதி12:1
அவரை அறிந்தவன்.
அவனுக்கு தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டது. . . ஆதி15:1
தேவனை தரிசித்தவன்.ஆதி:18:1
இப்படி பல அனுபவங்களை பெற்று இருந்தாலும், தன் மனைவியை மற்றவரிடம் தன் சகோதரி என்று சொல்லி தன்னுடைய பாதுகாப்பை அவளுடைய அழகின் மீது நம்பிக்கை வைத்தவன்.
பாதி உண்மையை சொல்லி அவன் உயிருக்கு பயந்தவன்.
ஒருமுறை அல்ல, இருமுறை தேவனுடைய வல்லமையை நம்பாதவன்.
சாக்குப்போக்கு சொன்னவன்.
ஆனாலும் இப்படிப்பட்ட ஆபிராமை மன்னித்து மறந்து தான் அழைத்த நோக்கத்தை நிறைவேற்றினார்.
காரணம் என்னவென்றால் அவரின் அழைப்பு அவனை நீதிமானாக கருதி அவனை பாதுகாத்தது.
இந்த உலகில் அவன் செய்த பலவீனங்கள் நிமித்தமாக அவன் செய்த காரியங்கள்தேவனிடதில்அவனுக்குரிய இடத்தை பறிக்கவில்லை
தேவனுக்கு முன்பாக அவன் பெற்றுள்ள நீதியை இந்த உலகில் அவன் செய்த செயல்களால் இழக்கவில்லை
His actions on the earth did not alter God’s justification .
இதே போலத்தான் நாம் நம்முடைய பயணத்தில் நம்மை நீதிமானாக்கின தேவனுடய செயலை நம்முடைய பலவீனங்களை தோல்விகளும் மாற்ற முடியாது.
Our position in Christ (Justification)t will not be altered by our practice on the earth (sanctification).W.Wiersbe
ஏனென்றால் நாம் தேவனின் தண்டனையில் இருந்து விடுதலை பெற்றவர்கள்.
We are accepted before God.
அதேவேளையில் பார்வோன், அபிமெலேக்கு தேவனின் தண்டனைக்குஉட்பட்டவர்கள்.
They were rejected and condemned.
உலக மக்கள் எவ்வளவு தான் நன்மை விட மேன்மையான மக்களாக இருந்தாலும், அவர்கள் தேவன் நியாயத்தீர்ப்புக்கு தப்பிவிட முடியாது. அவர்களின் உலக நீதி, உண்மை, பரிசுத்தம் தேவன் நம்மை நீதிமானாகிய காரியத்துக்கு சமமாகாது.
இதுதான் தேவன் நமக்கு கொடுத்த மறு பிறப்பின் மூலமாக, நாம் அடைந்த மிகப்பெரிய சிலாக்கியம். இவ்வளவு பெரிதான இரட்சிப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில், சிந்தனையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் இரட்சிப்பை பெற்றுக் கொண்டதில் எந்த அர்த்தமும் இல்லை.