Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

வேதத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நபர் யார்
உங்கள் சிந்தனைக்கு:
வேதத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு
அடுத்தபடியாக மிக முக்கியமான நபர் யார்
என்றால் அது ஆபிரகாம் தான். இவன் தேவனால்
தெரிந்து கொள்ளப்பட்ட முதல் நபர்.
பிதாவுடைய உலக மீட்பின் திட்டத்தில் தேவன்
பயன்படுத்திய முதல் நபர் இவன்தான்.
பிரமாணங்கள் சடங்காச்சாரங்கள் வருவதற்கு
முன்பாகவே தேவனோடு இணைந்து வாழ அவர்
மீது வைக்கும் விசுவாசம்தான் பிரதானம் என்று
வாழ்ந்து காட்டியவன்.
.பிதாவாகிய தேவன்
யூதர்களுக்கு தன்னை அடையாளப்படுத்தும்
போது "நான் ஆபிரகாமின் தேவன்" என்றுதான்
அநேக நேரங்களில் தேவன் சொல்கிறார்.
வேதத்தில் முதல் முதல் இயேசு கிறிஸ்துவை
விசுவாசத்தில் கண்டவன். தான்சென்ற
இடமெல்லாம் கூடாரம் அமைத்து பலிபீடம் கட்டி
தன்னுடைய தேவனை புற இன மக்களுக்கு பலிகள்
மூலம் ஆராதித்து உலகத்திற்கு தேவனோடு
தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முதல்
ஆராதனை வீரன் இவன்தான்.
நாமும் கூட
தேவனுடைய மீட்பின் திட்டத்தில் தேவனால்
தெரிந்து கொள்ளப்பட்டு, அதில் பங்கு பெற்று,
ஆவியினாலே ஆராதனை செய்கிற நாமும்
ஆபிரகாமின் சந்ததி என்று சொல்வதில் எந்த
தவறும் இல்லை.