ஆபிரகாமின் ஆவிக்குரிய வாழ்க்கை நூறு வருடங்கள்.
ஆபிரகாமின் ஆவிக்குரிய வாழ்க்கை நூறு
வருடங்கள்.
ஆதி 25:8ன் உண்மையான
அர்த்தம் அவன் தன் வாழ்க்கையைகுறித்து திருப்தி அடைந்தவனாய்
மரித்தான் என்பதுதான்.(Satisfied with the life)
உண்மையும் அதுதான் முக்கியமான
காலகட்டங்களில் அவன் தன்னை
அழைத்த தேவனை ஏமாற்றி விடவில்லை
தேவன் அழைத்தபோதும், இஸ்மவேலை
அனுப்பிய போதும், ஈசாக்கை பலியிட
முன்வந்த போதும் அவன் தேவனுடைய
கட்டளைக்கு முழுமையாக கீழ்ப்படிந்தான்.
அவன் மரிக்கும் போது தன்னுடைய கடந்த
கால வாழ்க்கை குறித்து எந்தவிதமான
வருத்தமோ, ஏமாற்றமோ இல்லாமல்,
செய்யத் தவறி விட்டுமே என்கிற துக்கம்
இல்லாமல் தேவன் அளித்த வாழ்க்கையை
முழுமையாக நிறைவேற்றிய மனிதனாக
மரித்தான். நாமும் கூட நாம் மரிக்கும்போது
இப்படிப்பட்ட ஆபிரகாமின்
மனநிலையோடு மரிக்கும் ஒரு பாக்கியம்
தேவன் நமக்கு அளிக்க கிருபை
தருவாராக.