12 கற்களை கொண்ட நினைவுத்தூண்கள் ஒன்றா இரண்டா?
உங்கள் சிந்தனைக்கு:
12 கற்களை கொண்ட நினைவுத்தூண்கள் ஒன்றா இரண்டா?
யோசு 4:3,9
Whether one or two heaps of stones were set up as a memorial in Joshua 4th chapter.
இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடக்கும் பொழுது ஆசாரியர்கள் யோர்தான் நதியில் கால் வைத்த இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து அதை கில்காலிலே நாட்டும்படியாக கர்த்தர் கட்டளையிட்டார்.
இந்த அதிகாரத்தினுடைய ஒன்பதாம் வசனத்தில் யோர்தான் நதியில் ஆசாரியர்கள் கால் பதித்த அந்த இடத்தில் யோசுவா 12 கற்களை நாட்டியதாக பார்க்கலாம் .
ஆனால் சில மொழிபெயர்ப்பில் இது தனி ஒரு நிகழ்வாக சொல்லப்படவில்லை.
மூன்றாம் வசனத்தில் சொல்லப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக கூறப்பட்டிருக்கிறது.(Repetition ) . காரணம் யோர்தான் நதியின் உள்ளே 12 கற்களை தேவன் நாட்டச் சொல்லி யோசுவாக்கு கட்டளையிடவில்லை. எனவே 12 கற்களை கொண்ட தூண்கள் கால்காலில் மட்டும்தான் நாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் இந்த கருத்தை அனேக வேத பண்டிதர்கள் மறுக்கிறார்கள்
.
இவர்கள் கருத்துப்படி இரண்டு இடங்களில் 12 கற்கள் கொண்ட நினைவுத் தூண்கள் நாட்டப்பட்டது. ஒன்று கீழ்காலிலும் மற்றொன்று யோர்தான் நதியிலும் நாட்டப்பட்டது
இந்த நிகழ்வை புதிய ஏற்பாட்டின் இரட்சிப்பின் நிகழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
12 கற்கள் யோர்தான் நதியில் நாட்டப்பட்டது நாம் இயேசுவோடு அவரது மரணத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு நிழலாக இருக்கிறது என்றும் கில்காலில் நாட்டப்பட்ட 12 கற்கள் நாம் அவருடைய உயிர்த்தெழுதில் பங்கு பெறுவதற்கு அடையாளமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
The monument at Gilgal reminded the Jews that
God had opened the Jordan River and brought them
safely across into the Promised Land. They had made
a break with the past and were never to think of
going back. The monument in the depths of the river
reminded them that their old life was buried and
they were now to “walk in newness of life” (Rom.
6:1–4) W.W.Wiersbe.
தேவஆவியானவர் எதையும் தேவையில்லாமல் இணைத்திருக்க மாட்டார்.
எனவே இரண்டு இடங்களில் 12 கற்கள் கொண்ட நினைவுதாண்கள் நாட்டபட்டதாக அறிந்து கொள்ளலாம்.