2 அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் ஒன்று
2 அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் ஒன்று
எலியா, அகசியா அரசனின் தளபதிகளையும், அவர்களது ஐம்பது மனிதர்களைக் கொண்ட குழுவையும் பரலோகத்திலிருந்து நெருப்பை வரவழைத்து சுட்டெரித்தது சரியா?
பின்னணி:
ஒன்று அரசர்கள் புத்தகம் 21-ஆம் அதிகாரத்திற்குப் பிறகு, எலியாவை மீண்டும் இந்த புத்தகத்தில் பார்க்கலாம். இஸ்ரவேலின் அரசனான ஆகாப் மரித்தபின், அவனுடைய குமாரன் அகசியா அரசனாகினான். அவனும் தன் தந்தையைப் போலவும், தாய் யேசபெலைப் போலவும் கர்த்தருக்குப் பிரியமில்லாத வழியில் நடந்தான்; பாகாலைப் பின்பற்றினான்.
அகசியா, சமாரியாவில் உள்ள மேல்மாடியின் ஜன்னலின் வழியாக கீழே விழுந்து காயம் பெற்றான். அப்போது அவன் தன் ஆட்களிடம்,
"எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் போய், இந்த காயத்திலிருந்து நான் குணமாகுமா எனக் கேட்டு வாருங்கள்"
என்று அனுப்பினான்.
அப்போது கர்த்தருடைய தூதன், எலியாவை நோக்கி:
"நீ சமாரியாவின் அரசனுடைய தூதுவரைச் சந்தித்து, ‘இஸ்ரவேலில் தேவன் இல்லையா, எக்ரோனின் தெய்வமான பாகால் சேபூபிடம் ஆலோசனை கேட்கப் போகிறீர்கள்?’ என்று கேள். மேலும், ‘நீ படுக்கையில் இருந்து எழ முடியாது; நிச்சயமாக சாவாய்’ என்று சொல்லு"
என்று கூறினார்.
எலியா, இந்த செய்தியை அகசியாவின் தூதுவர்களுக்குச் சொன்னார். அவர்கள் அரசனிடம் இதை தெரிவித்தனர். இதைக் கேட்ட அகசியா, எலியாவை கைது செய்ய ஒருவரை தளபதியாக நியமித்து ஐம்பது ஊழியர்களுடன் அனுப்பினான்.
நிகழ்வுகள்:
மலையின் மீது இருந்த எலியாவை, அவர்கள் அதிகாரத்தோடு கீழே வரச் சொன்னார்கள். அதற்கு எலியா
:
“நான் தேவனுடைய மனுஷனாக இருந்தால், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி உங்களையும் உங்கள் ஐம்பது ஊழியர்களையும் சுட்டெரிக்கட்டும்”
என்றார். உடனே அக்கினி இறங்கி அவர்கள் எல்லாரையும் அழித்தது
.
இதேதான் இரண்டாவது குழுவுடனும் நடந்தது.
மூன்றாவது குழு வந்தபோது, தளபதி பயந்து, எலியாவை நேரில் சந்தித்தபோது
,
“இறைவனுடைய மனுஷனே, தயவுசெய்து எனது உயிருக்கும், இந்த ஐம்பது ஊழியர்களின் உயிருக்கும் இரக்கம் காட்டுங்கள்”
என்று மண்டியிட்டு கெஞ்சினார். அப்பொழுது தேவனுடைய தூதன் எலியாவிடம்,
“அவர்களோடு பயப்படாமல் போ”
என்று கூறினார்
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரு பாடங்கள்:
மறுபிறப்புற்ற தேவனுடைய பிள்ளைகளை யாராலும் பயமுறுத்த முடியாது; அவர்களை அச்சுறுத்தி கீழ்ப்படைய தேவன் அனுமதிக்கமாட்டார்
இந்த நிகழ்வை, லூக்கா 9:51–56 வசனங்களில் சொல்லப்படும் நிகழ்வுடன் ஒப்பிடக்கூடாது. அங்கு, இயேசுவை சமாரியர்கள் ஏற்கவில்லை என்பதற்காக, சீஷர்கள் எலியாவைப் போல நெருப்பை வரவழைக்க இயேசுவிடம் கேட்டனர். ஆனால் இயேசு அதைப் கடிந்து கூறினார். ஏனெனில், அங்கே தாக்குதல் தேவனுடைய தீர்ப்பல்ல, மனித இக்கோபத்தின் வெளிப்பாடு.
எலியாவை பொறுத்த அளவில் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் தான் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை நிரூபிக்கவும் அக்கினியை விண்ணகத்திலிருந்து வரவழைத்தது அவசியமாய் இருந்தது.
ஆனால் லூக்கா நற்செய்தி சொல்லப்பட்ட நிகழ்வுகளை பொறுத்த அளவில் அது அப்படி அல்ல .
அப்படி செய்தால் அது சமாரியர்களுக்கு நேராக நடத்தப்படும் தாக்குதலாக கருதப்படும். மேலும் புதிய ஏற்பாட்டின் உபதேசம் என்பது வேறு பழைய ஏற்பாட்டின் உபதேசம் என்பது வேறு. இந்த இரண்டு வித்தியாசத்தை புரியாமல் இன்றைக்கு ஊழியக்காரர்கள், விசுவாசிகள் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை அப்பியாசப்படுத்துவது ஏற்புடையதல்ல.
“In Luke, the action of the disciples was offensive, while Elijah’s action was defensive and an act of God’s judgment.”
— New Spirit-Filled Life Bible
Ezekiel Shanmugavel