இரண்டு அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12
உங்கள் சிந்தனைக்கு:
இரண்டு அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12
தேவன் நமக்குக் கொடுக்கும் பொறுப்புகளை, ஊழியங்களை ஏதோ கடமைக்காகச் செய்யக் கூடாது.
அவைகளை கவனத்துடன், முழு இருதயத்துடன் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இதுவே யெகூவின் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய காரியம்.
இந்த யெகூ இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட19 மன்னவர்களில் ஒருவன்.
சாலமோனுக்கு பிறகு ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் வடக்கு ,தெற்கு என்று இரண்டாகப் பிரிந்தது.இரண்டாகப் பிரிந்தது.
வடபகுதி இஸ்ரவேல் தேசம் என்றும் தெற்கு யூதா தேசம் என்றும் அழைக்கப்பட்டது.
இஸ்ரவேல் தேசத்தை ஒன்பது வம்சங்கள்ஆண்டது.
இவர்கள் எவரும் கர்த்தருக்கு பிரியமாக நடக்கவில்லை. இதில் ஓரளவுக்கு விதிவிலக்காக இருந்தவன் யெகூ மட்டும்தான்.
இவன் மட்டுமே தீர்க்கதரிசியான எலிசாவால் கடவுளின் கட்டளைப்படி அபிஷேகம் பண்ணப்பட்டவன்.
இவனைத் தேவன் தெரிந்து கொண்ட நோக்கம் அவன்
ஆகாப் அரசனின் முழுக் குடும்பத்தையும் அழித்துவிட வேண்டும். யேசபேலினால் சிந்தப்பட்ட யெகோவாவின் எல்லா ஊழியக்காரரின் இரத்தத்துக்காகவும், எல்லா இறைவாக்கினரின் இரத்தத்துக்காகவும் பழிவாங்கு வேண்டும் என்பதுதான்.
2 இராஜாக்கள் 9:7
கடவுளுடைய முன்னறிவிப்பின்படி இவன் அரசனாகி ஏறக்குறைய 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.10: 36
அவனும் கடவுளுடைய பார்வையில் பிரியமான செயல்களைச் சரியான முறைப்படி செய்தான். அத்துடன் ஆகாபின் குடும்பத்திற்கு எதிராகக் கடவுள் கடவுள் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றினான்.
2 இராஜாக்கள் 10:30
ஆனாலும் அவன், யெகோவாவின் சட்டத்தைத் தன் முழு இருதயத்தோடும் கைக்கொண்டு நடக்கக் கவனமாயிருக்கவில்லை. யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை
என்று தேவன் அவனைக் குறித்து குற்றம் சாட்டினார்
2 இராஜாக்கள் 10:31
அவன் செய்த ஒரு சில நன்மைகளுக்குப் பலனாகக் கடவுள் நான்கு தலைமுறைகளுக்கு அவனின் சந்ததிகள் இஸ்ரயேலின் அரியணையில் இருப்பார்கள் என்று கடவுள் அவனை ஆசிர்வதித்தார்.
தேவன் உணர்த்தும் பாடங்கள்.
1.தேவன் கொடுத்த பணிகளை நாம் எவ்வளவு செய்து விட்டோம் என்பதல்ல எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
ஊழியத்தை கடவுள் நமக்குக் கொடுத்துவிட்டார் என்று கடமைக்காகச் செய்கிறோமா ?அல்லது முழு மனதுடன் உற்சாகத்துடன் அவரது பணியைச் செய்கிறோமா?
வெறுமனே கடமைக்காக அந்தப் பணியைச் செய்வோமே என்றால்
அதற்குரிய பலனை இந்த உலகத்திலேயே பெற்றுக் கொள்வோம். அதற்குரிய பலனை விண்ணகத்தில் பெறுவோமா என்பது சந்தேகம்தான்.
கடவுளிடமிருந்து அவருடைய பணியைச் செய்யும் அழைப்பைப் பெறுவதே நமது பாக்கியம். அதை மனமகிழ்ச்சியோடு செய்ய நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
யெகூவை போல நாம் மனமகிழ்ச்சி இல்லாமல் கடவுளுடைய ஊழியத்தை செய்யக் கூடாது.
ஊழியத்தை நிறைவேற்றும் பொழுதுதேவன் மீது அன்பை செலுத்தவும் அதை நிறைவேற்ற வேண்டும் என்கிற கடமையயும் நமக்கு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.
2.அடுத்த பாடம் என்னவென்றால்
இஸ்ரவேல் தேசத்தில் கடவுளுடைய பிள்ளைகளுக்கு நடந்த அநீதிக்குச் சரிகட்ட தேவன் யூத தேசத்திலிருந்து யாரையும் எழுப்பவில்லை. கடவுளை மனதோடு முழுமையாகப் பின்பற்றாத ஒரு மனிதனை தான் கடவுள் தெரிந்தெடுத்தார்.
கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற யாரையும் பயன்படுத்துவார் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தியானிக்க: மத் 7:21-23