Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கடவுளுடைய பணியைச் செய்பவர்களுக்கு அந்தப் பணியின் மூலமாக அதற்குரிய பலனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

*உங்கள் சிந்தனைக்கு.*

கடவுளுடைய பணியைச் செய்பவர்களுக்கு அந்தப் பணியின் மூலமாக அதற்குரிய பலனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இது‌கடவுளுடைய சட்டம்.
சிறிய ஊழியமோ, பெரிய ஊழியமோ எந்த ஊழியத்தினால், ஊழியம் செய்பவனால் ஒரு விசுவாசி ஆவிக்குரிய பலனைப் பெற்றுக் கொள்கிறானோ அந்த ஊழியக்காரனை அதற்கு தகுந்தபடி அவனுக்குத் தகுந்த வெகுமதிகள், காணிக்கைகளை கொடுக்க வேண்டும்.

கர்த்தருடைய பணிகள் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றது. காணிக்கை கொடுப்பதில் இரண்டு வகை உண்டு.
1. ஒரு ஊழியத்தின் மூலமாகப் பலனை அனுபவித்து அந்த ஊழியத்திற்கு காணிக்கைகளை கொடுத்து அந்த ஊழியத்தை நடத்துபவர்களைத் தாங்குவது என்பது ஒரு வகை.
2. இன்னொரு வகை ஒரு ஊழியத்தை தாங்கும் படியாக நாம் ஆவியானவரால் ஏவப்பட்டு அந்த ஊழியத்தை தாங்குவது என்பது இன்னொரு வகை.

அந்த ஊழியத்தினால் அந்த நபர்கள் பலன் பெறாமல் கூட இருக்கலாம். ஆனால் அந்த ஊழியத்தின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு பாரம் ஏற்பட்டு அதனைத் தாங்குவது என்பது வேறு வகை.

முதல் வகையைப் பற்றி இப்பொழுது சற்று தியானிக்கலாம்.

காணிக்கைகள், வெகுமதிகள் இவைகளை சபைகளுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பதல்ல. சபையைத் தாண்டி ஒரு விசுவாசி தனது ஆவிக்குரிய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள பல்வேறு ஊழியங்கள் காணப்படுகின்றன.

ஒரு விசுவாசி எந்த ஊழியத்தினால் ஊழியக்காரர்களினால் ஆசீர்வதிக்கப்படுகிறானோ, ஆவிக்குரிய நன்மைகளைப் பெறுகிறானோ அந்த ஊழியத்தை, அந்த ஊழியர்களைத் தாங்குவது அவசியம்.

சிறிய‌ ஊழியமாக இருக்கலாம்,
அது வேத பாடங்களாக இருக்கலாம், பாடல் ஊழியமாக இருக்கலாம், இலக்கிய ஊழியமாக இருக்கலாம், நம்முடைய வாழ்க்கையில் செய்திகள் மூலமாக மாற்றங்கள் ஏற்படுத்தியவராக இருக்கலாம், நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்தவராக இருக்கலாம்,
நம்மைத் திசை மாறிச் செல்லாமல், சரியானமுறையில் வழிநடக்கக்கூடிய நபராக இருக்கலாம். இவைகள் எல்லாம் சபைகளைத்தாண்டி நடக்கக்கூடிய காரியங்கள். இந்த ஊழியங்களையும் தாங்க வேண்டியது நம்முடைய கடமை.
இந்த ஊழியங்கள் மூலமாக நாம் பலனைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எதையும் செய்யாமல் இருப்பது மிகப்பெரிய ஆவிக்குரிய சுரண்டல்.
அவர்கள்மூலம் ஆவிக்குரிய நன்மையைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எதுவுமே செய்யாமல் முழு பணத்தையும் சபைக்குக் கொடுப்பது அந்தச் சபைகளுக்கு நீங்கள் அளவுக்கு மீறிய சொத்து குவிப்பை உண்டாக்குகிறீர்கள். it should be in proportionate to you have received from them.
Or it should be in proportionate to what they given to you.
நன்மைகளை அதிகமாக வழங்காதவர்களுக்கு வாரி வாரி வழங்குவதும் ,சிறந்த ஆவிக்குரிய நன்மைகளை உங்களுக்கு வழங்கியவர்களுக்கு கஞ்சத்தனம் காட்டுவது ஏற்புடையது அல்ல.

உங்களுக்கு ஆன்மீக நன்மைகளை விதைத்தவர்கள் உங்களிடம் உதவிகள் கேட்காமல் கூட இருக்கலாம். ஆனால் அவற்றைக் குறித்து விசாரித்து அவர்களுக்கு உதவி செய்வது ஆவிக்குரிய உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள்மேல் விழுந்த கடமை.
ஒருவருடைய செய்திகளினால் ஆவிக்குரிய தெளிவை, புரிதலைப் பெற்றும் ஆன்மிக கண்களை, திறந்தவர்களை கண் சாடையாக விடுபவர்கள் ஆவிக்குரிய சுரண்டல் பேர்வழிகள்.

சில பேர் பவுல் கூறிய 1கொரி. 9:15-17ஐ மேறக்கோள் காட்டுவார்கள்.
But it was his personal conviction to refuse the support.
It is not a standard rule for giving offerings

உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்ய வேண்டும்.
1 கொரிந்தியர் 9:5, 10
இது பொதுவான விதிமுறை.


"எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாகப் பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி."
இது பவுலின் தனிப்பட்ட ஒரு விருப்பம்.

இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எனவே சபையைத் தாண்டி நாம் ஆசீர்வாதம் பெறுவதற்கு காரணமான எல்லா ஊழியர்களையும் அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர் விசுவாசியாக இருந்தாலும் முழு நேர பணியாளராக இருந்தாலும் காணிக்கைகளினால் தாங்குவது ஆசிர்வாதத்தை பெற்றவர்களின் கடமை.
காரணம் ஊழியம் செய்பவர்கள் அனைவருமே ஊழியக்காரர்கள்தான்.

முழு நேர பணியாளர்கள் மட்டும்தான் காணிக்கைகளை பெற வேண்டும் என்பது சரியல்ல. ஊழியம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த ஊழியத்தினால் பலன் பெற்றவர்கள் அவர்களைத் தாங்க வேண்டும்.
ஆண்டவர் தாமே இந்தப் புரிதலை விசுவாசிகளுக்குத் தருவாராக.
இந்த இடத்தில் எனக்குப் பிரியமான வயர்ஸ்பி
அவர்களுடைய கருத்தைப் பதிவிடுகிறேன்.
]
In 1 Cor. 9:1-14, Paul taught that the Christian laborer was worthy of his hire, and he included himself. But in vv. 15-27, he argued that he had the right to refuse their support for the sake of reaching more people with the Gospel. It was a personal conviction that he didn't impose on all the churches or all of God's servants. Paul knew that in Corinth especially, accepting money could put a barrier between him and the people he was trying to reach.

எசேக்கியேல் சண்முகவேல்